For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீட்ரூட் ஃபேஸ் பேக் யாரெல்லாம் அவசியம் போடணும் தெரியுமா?

அழகான சருமத்திற்கு வீட்டிலேயே எளிதாக கிடைக்ககூடிய ப்யூட்டி ஃபேஸ் பேக் பற்றிய உண்மையான குறிப்புகள்

|

Recommended Video

பீட்ரூட் ஃபேஸ் பேக் யாரெல்லாம் அவசியம் போடணும் தெரியுமா? | boldsky

பீட்ரூட் குறித்து இதுவரை அதன் மருத்துவ நன்மைகள் ஏராளமானது கேட்டிருப்போம். அதனை சாப்பிட வேண்டியதன் அவசியம் என்னவென்று பல இடங்களில் படித்திருப்பீர்கள். இங்கே பீட்ரூட் சருமத்தில் தடவுவதால் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ள போகிறீர்கள்.

பொதுவாக இன்றைய தலைமுறையினருக்கு அவர்கள் மட்டுமல்லாது எல்லாருக்கும் இருக்கிற ஒரு பிரச்சனை சருமத்தில் அழுக்கு சேர்வது தான். இந்த அழுக்கு சேர்வது தான் சருமத்தில் ஏற்படுகிற பெரும்பாலான பிரச்சனைகளின் துவக்கப்புள்ளியாக இருக்கிறது.

 Beetroot Juice Face Pack For Glowing Skin

இது தீவிரமானால் இளம் வயதிலேயே சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயாரிப்பு :

தயாரிப்பு :

முதலில் இதை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். இந்த ஃபேஸ்பேக் செய்ய தேவையான பொருட்கள் பீட்ரூட் ஜூஸ்,தயிர்,கடலை மாவு, மற்றும் எலுமிச்சை சாறு.

முதலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலைமாவு தனியாக ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர்,ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கடைசியாக இரண்டு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறு கலந்து கொள்ளுங்கள்.

பேஸ்ட் பதம் வரும் வரையில் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அப்ளை செய்யும் முறை :

அப்ளை செய்யும் முறை :

இதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்வதற்கு முன்னால் முதலில் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். க்ளின்சிங் மில்க் இருந்தால் அதனை தடவியும் முகத்தை சுத்தமாக துடைத்துக் கொள்ளலாம்.

இதனால் சருமத்தில் உள்ள அழுக்ககுள் வெளியேறும். அதன் பிறகு பிரஷ்ஷின் உதவியுடன் முகம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். கவனம் எப்போதும் கீழிருந்து மேலாக அப்ளை செய்வது நல்லது.

ஒரே நிறம் :

ஒரே நிறம் :

முகம் முழுவதும் அப்ளை செய்து முடித்ததும் கழுத்துக்கும் அப்படியே தடவுங்கள். முகத்திற்கு தருகிற முக்கியத்துவத்தை கழுத்துக்கு யாரும் கொடுப்பதில்லை.

இதனால் முகம் ஒரு நிறமாகவும் கழுத்து வேறொரு நிறமாகவும் தெரியும். இதனை தவிர்க்க கழுத்துக்கும் சேர்த்தே ஃபேஸ் பேக் போடுவது நல்லது. இதனை கழுத்துக்கும் சேர்த்து போட்டபிறகு சுமார் பதினைந்து நிமிடம் கழித்து நீங்கள் கழுவிடலாம்.

அழுக்குகள் :

அழுக்குகள் :

கழுவியதும் இது கூலிங் எஃபக்டை கொடுக்கும். அதோடு சருமத்திலிருக்கும் அழுக்களை எல்லாம் நீக்கிடும். பீட்ரூட்டில் அதிகப்படியான ஃபாலிக் அமிலம் மற்றும் அத்தியவசியமான விட்டமின்கள் இருக்கிறது. இவை சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுப்பதுடன் சரும சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்க உதவுகிறது.

இதனை நீங்கள் வாரம் ஒரு முறை என இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து முயற்சித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

எண்ணெய் பசையுள்ள சருமம் :

எண்ணெய் பசையுள்ள சருமம் :

எண்ணெய் பசையுள்ள சருமம் கொண்டவர்கள் என்றால் உங்களுக்கு அடிக்கடி பரு மற்றும் கரும்புள்ளி பிரச்சனைகள் ஏற்படும்.இவர்களுக்கு பீட்ரூட் சாறு ஃபேஸ்பேக் மிகச் சிறந்த தீர்வாக அமையும்.

சருமத்தில் பேக் போடுவது மட்டுமின்றி தொடர்ந்து பீட்ரூட் ஜூஸ் குடிக்கவும் செய்திடலாம். பீட்ரூட்டின் சுவை பிடிக்காதவர்கள் அதில் வெள்ளரி மற்றும் கேரட்டையும் சேர்த்து அரைத்து ஜூஸ் தயாரித்துக் கொள்ளுங்கள். இவற்றை சருமத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தழும்புகளையும் போக்கிடும்.

நிறம் :

நிறம் :

இதனை சருமத்தில் தடவுவதால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை எல்லாம் நீக்குவதுடன் ரத்த ஓட்டத்தையும் துரிதப்படுத்துவதால் பொலிவான சருமம் உண்டாகும்.

ஃபேர்னஸ் க்ரீம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சிலருக்கு அதிலிருக்கும் கெமிக்கல்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.இதனை தவிர்க்க பீட்ரூட் சாறு பயன்படும்.

வறட்சி :

வறட்சி :

சருமத்தில் ஏற்படுகிற வறட்சியும் சரும சுருக்கங்களுக்கு அடிப்படை காரணமாய் இருக்கிறது. இதற்கு சருமத்தை எப்போது ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

சருமத்தில் வறட்சியில்லாமல் பாதுகாக்க நீங்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டியது தண்ணீர் குடிப்பது. தண்ணீர் குடிப்பதால் உடல் நலத்திற்கு நல்லது, உணவு செரிமானம் வேகமாக நடக்கும் என்று சொல்லித் தான் கேட்டிருப்போம். ஆனால் இவை உங்கள் சருமத்திற்கும் மிகவும் நல்லது. தண்ணீரை எடுத்துக் கொள்வதை விட உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை இந்த பீட்ரூட் ஃபேஸ்பேக் செய்திடும்.

கருவளையம் :

கருவளையம் :

இன்றைக்கு பலரது கவலையாக இருப்பது கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையம் தான். அதனை போக்கவும் இந்த பீட்ரூட் ஃபேஸ்பேக் பயன்படும். அதோடு இவை உங்களது ரத்த ஓட்டத்தையும் சீர்படுத்துவதால் இவை கருவளையத்தை போக்கிட உதவிடுகிறது.

அதோடு முகத்தில் இருக்கிற கருந்திட்டுக்கள் எல்லாம் போக்கிடும்.

சரும சுருக்கங்கள் :

சரும சுருக்கங்கள் :

உங்களுக்கு 30 வயதை தாண்டி விட்டாலே சருமத்தை இன்னும் சிரத்தையாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த ஃபேஸ்பேக் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் சுருக்கங்கள் வராமல் தவிர்க்கவும் உதவுகிறது.

இதனை வாரம் இரண்டு முறை நீங்கள் பயன்படுத்தினால் விரைவில் சிறந்த பலனை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beetroot Juice Face Pack For Glowing Skin

Beetroot Juice Face Pack For Glowing Skin
Desktop Bottom Promotion