சருமத்தில் உள்ள வெள்ளைத் திட்டுக்களைப் போக்கும் சில இயற்கை வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

சிலருக்கு சருமத்தில் வெள்ளை நிறத்தில் திட்டுகளாக இருக்கும். இம்மாதிரியான திட்டுக்கள் முகம், கைகள், கால்கள் மற்றும் பாதம் போன்ற பகுதிகளில் அசிங்கமாக காணப்படும். சரி, இப்படி வெள்ளைத் திட்டுக்கள் எதனால் வருகிறது என்று தெரியுமா? நிறத்தை வழங்கும் மெலனினை உற்பத்தி செய்யும் சரும செல்கள் முறையாக செயல்படாமல் போகும் போது வருவது தான் வெள்ளைத் திட்டுக்கள்.

Best Natural Tips to Treat White Patches on Skin

ஒருவரது உடலில் போதுமான அளவில் மெலனின் இல்லாத போது, ஆரோக்கியமான சரும செல்களானது இறந்து சருமத்தில் படிந்து, வெள்ளைத்திட்டுக்களாக படியும். சில நேரங்களில் இந்த வெள்ளைத் திட்டுக்கள் ஹைப்பர் தைராய்டு, உயர் இரத்த அழுத்தம், வைட்டமின் பி12 குறைபாடு, நீண்ட நேரம் சூரியக்கதிர்கள் சருமத்தை தாக்குவது, குறிப்பிட்ட மரபியல் பண்புகள் போன்றவற்றாலும் வரும்.

இப்படிப்பட்ட வெள்ளைத்திட்டுக்களை குறிப்பிட்ட சில இயற்கை வழிகளின் உதவியுடன் போக்க முடியும் என்பது தெரியுமா? இக்கட்டுரையில் சருமத்தில் உள்ள வெள்ளைத் திட்டுக்களை மறையச் செய்யும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள்

மஞ்சள்

* ஒரு பௌலில் சிறிது மஞ்சள் தூளை எடுத்துக் கொண்டு, அத்துடன் சில துளிகள் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, வெள்ளைத் திட்டுக்களின் மீது காலையிலும், மாலையிலும் தடவ வேண்டும்.

* இல்லாவிட்டால், சிறிது வேப்பிலையை அரைத்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, வெள்ளைத் திட்டுக்களின் மீது தடவ வேண்டும். இப்படி தினமும் 2 வேளை செய்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

* தண்ணீர் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை 2:1 என்ற விகிதத்தில் எடுத்து கலந்து, தினமும் பலமுறை வெள்ளைத்திட்டுக்களின் மீது தடவுங்கள்.

* இல்லாவிட்டால், தினமும் குளிக்கும் போது அந்நீரில் சில துளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து, அந்நீரில் வெள்ளைத்திட்டுக்கள் உள்ள இடத்தை 15 நிமிடம் ஊற வையுங்கள். இதனால் வெள்ளைத் திட்டுக்கள் மாயமாய் மறையும்.

தேன்

தேன்

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேனுடன், 1 டீஸ்பூன் சந்தனப் பவுடர், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் அரிசி பவுடர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, வெள்ளைத் திட்டுக்கள் உள்ள இடத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி தினமும் 2 முறை செய்தால், விரைவில் வெள்ளைத்திட்டுக்கள் மறையும்.

இஞ்சி

இஞ்சி

* இஞ்சியை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், அது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, வெள்ளைத் திட்டுக்களை விரைவில் மறையச் செய்யும். அதிலும் இஞ்சி சாற்றினை வெள்ளைத் திட்டுக்கள் உள்ள இடத்தில் தடவுங்கள்.

* இல்லாவிட்டால், சிறிது சிவப்பு களிமண்ணை இஞ்சி சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, வெள்ளைத் திட்டு உள்ள இடத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள்.

* இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, இஞ்சி சாற்றுடன், எலுமிச்சை சாறு மற்றும் நீர் சேர்த்து கலந்து, தினமும் 2 வேளை குடிக்க வேண்டும்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ்

* முட்டைக்கோஸ் ஜூஸை வெள்ளைத் திட்டுக்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இப்படி தினமும் பலமுறை செய்ய வேண்டும்.

* நீரில் சிறிது முட்டைக்கோஸ் இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரால் பாதிக்கப்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்.

வைட்டமின் ஈ எண்ணெய்

வைட்டமின் ஈ எண்ணெய்

வைட்டமின் ஈ எண்ணெயில் உள்ள சரும செல்களைப் புத்துணர்ச்சி செய்யும் பண்புகள், பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்கும். இத்தகைய வைட்டமின் ஈ எண்ணெயை தினமும் பலமுறை சருமத்தில் தடவ வெள்ளைத் திட்டுக்கள் சீக்கிரம் மறைந்துவிடும்.

காப்பர்

காப்பர்

காப்பர் பாத்திரத்தில் இரவில் படுக்கும் முன் நீரை ஊற்றி வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள். இப்படி செய்யும் போது, காப்பர் பாத்திரத்தில் உள்ள உட்பொருட்கள், மெலனின் உற்பத்தியை அதிகரித்து, வெள்ளைத் திட்டுக்களை மறையச் செய்யும்.

துளசி

துளசி

துளசி இலைகளை பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன், வெள்ளைத் திட்டுக்களின் மீது தடவிக் கொள்ளுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள வெள்ளைத் திட்டுக்கள் மறையும்.

வேப்பிலை மற்றும் தேன்

வேப்பிலை மற்றும் தேன்

* 1 கப் நீரில் சிறிது வேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால், சரும பிரச்சனைகள் அனைத்தும் அகலும்.

* இல்லாவிட்டால், வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, வெள்ளைத் திட்டுக்களின் மீது தடவுங்கள்.

ஆப்பிள்

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் பி12 கிடைத்து வெள்ளைத் திட்டுக்கள் மறையும். வேண்டுமானால் ஆப்பிள் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, தினமும் சருமத்தில் தடவுங்கள். இதனாலும் நல்ல பலன் கிடைக்கும்.

தயிர் மற்றும் மஞ்சள்

தயிர் மற்றும் மஞ்சள்

தயிருடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, வெள்ளைத் திட்டுக்கள் உள்ள இடத்தில் தடவி நன்கு காய்ந்த பின், வேப்பிலை நீரால் கழுவுங்கள். இந்த முறையால் வெள்ளைத் திட்டுக்கள் சீக்கிரம் மறைந்துவிடும்.

புளி விதை மற்றும் ஆலிவ் ஆயில்

புளி விதை மற்றும் ஆலிவ் ஆயில்

புளி விதையை வெயிலில் நன்கு காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பொடியை ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 2-3 மணிநேரம் ஊற வைத்து, பின் வேப்பிலை நீரால் கழுவுங்கள்.

இஞ்சி சாறு மற்றும் கற்றாழை ஜெல்

இஞ்சி சாறு மற்றும் கற்றாழை ஜெல்

1 டீஸ்பூன் இஞ்சி சாறுடன், 5-6 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, வெள்ளைத் திட்டுக்கள் உள்ள பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள்

சருமத்தில் அசிங்கமாக வெள்ளைத் திட்டுக்கள் இருப்பவர்கள், அத்திப்பழம், தர்பூசணி, மாம்பழம், அன்னாசி, ஆப்ரிகாட், ஆப்பிள், வாழைப்பழம், பசலைக்கீரை, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், இஞ்சி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அஸ்பாரகஸ் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Natural Tips to Treat White Patches on Skin

White patches can notice on different body parts such as back, face, scalp, hands, feet, arms, legs, around the eyes and genital area. Natural home remedies and foods to solve this problem are more effective than medication.
Story first published: Wednesday, January 10, 2018, 12:50 [IST]