யாரெல்லாம் பீட்ரூட் ஜூஸ் குடிக்கக்கூடாது என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக காய்கறிகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு சத்துக்கள் அடங்கியிருக்கும். அதேப் போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான காய்கறிகள் பிடிக்கும். அப்படி பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் காய்கறி தான் பீட்ரூட். நல்ல அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் பீட்ரூட்டை, சிலர் பச்சையாகவோ, சிலர் வேக வைத்தோ, இன்னும் சிலர் ஜூஸ் வடிவிலோ உட்கொள்வார்கள்.

பீட்ரூட் இனிப்பான ஓர் காய்கறி என்பதால், சிலர் இதனை ஜூஸ் செய்து குடிப்பார்கள். அதோடு பீட்ரூட் ஜூஸ் உடலினுள் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தமாக வைத்துக் கொள்ளும். முந்தைய காலத்தில் பீட்ரூட்டின் இலைகள் மட்டும் தான் ஆரோக்கியமானது என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது இந்த ஒட்டுமொத்த காயிலும் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

Side Effects Of Beetroot Juice Must Know Before Including It In Your Diet

பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இது பசலைக்கீரை குடும்பத்தைச் சேர்ந்தது. பீட்ரூட் உடலை சுத்தம் செய்வதோடு மட்டுமின்றி, இரத்த சோகையைப் போக்கும் மற்றும் பல நன்மைகளை வாரி வழங்கும். ஆகவே பலரும் இதனை தங்களது டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் இந்த பீட்ரூட்டை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஒருசில பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தெரியுமா?

ஆம், கீழே யாரெல்லாம் பீட்ரூட் அல்லது அதன் ஜூஸை குடிக்கக்கூடாது மற்றும் ஒருவர் பீட்ரூட் ஜூஸை அளவுக்கு அதிகமாக குடித்தால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலோக தேக்கம்

உலோக தேக்கம்

ஒருவர் பீட்ரூட் ஜூஸை அளவுக்கு அதிகமாக குடித்தால், அதனால் உடலினுள் குறிப்பிட்ட உலோகங்களான காப்பர், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவை தேங்க ஆரம்பிக்கும். அதிலும் ஹீமோகுரோமடோடிஸ் பிரச்சனை இருப்பவர்கள், பீட்ரூட் ஜூஸைக் குடிப்பதாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஏற்கனவே இந்த குறைபாட்டினால், உடலில் இரும்புச்சத்தின் தேக்கம் அதிகம் இருக்கும். இந்நிலையில் இப்பிரச்சனை இருப்பவர்கள் இந்த ஜூஸைக் குடித்தால் நிலைமை மோசமாகிவிடும்.

சிறுநீரக பிரச்சனைகள்

சிறுநீரக பிரச்சனைகள்

ஏற்கனவே சிறுநீரக கோளாறு இருப்பவர்கள், பீட்ரூட் ஜூஸ் குடிப்பதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் பீட்ரூட்டில் உள்ள பீட்டைன், உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்துவிடும். ஆகவே சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள், பீட்ரூட் ஜூஸைக் குடிப்பதாக இருந்தால், மருத்துவரிடம் ஆலோசித்த பின் குடியுங்கள்.

கால்சியம் குறைவு

கால்சியம் குறைவு

பீட்ரூட் ஜூஸை தினமும் குடிப்பவராக நீங்கள்? உங்களது எலும்பு வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமானால், பீட்ரூட் ஜூஸ் குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பீட்ரூட் ஜூஸ் குடித்தால், உடலில் கால்சியத்தின் அளவு குறையும். இதன் விளைவாக குறிப்பிட்ட எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கர்ப்பம்

கர்ப்பம்

ஒரு பெண்ணின் வாழ்வில் கர்ப்ப காலம் என்பது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். இக்காலத்தில் உண்ணும் உணவுகளின் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக பீட்ரூட் சாப்பிடுவதில் கவனம் தேவை. ஏனெனில் பீட்ரூட்டில் உள்ள பீட்டைன் தீங்கு விளைவிக்கக்கூடியவை. ஆகவே பிரசவம் முடியும் வரை பீட்ரூட் ஜூஸை குடிக்காமல் இருப்பதே நல்லது. வேண்டுமானால் எப்போதாவது ஒருமுறை பீட்ரூட்டை பொரியல் செய்து சாப்பிடலாம்.

குரல் நாண்கள்

குரல் நாண்கள்

என்ன ஆச்சரியமாக உள்ளதா? பீட்ரூட் ஜூஸ் குடித்தால் குரல் நாண்கள் பாதிக்கப்படும் என்று சொல்வது உங்களுக்கு சற்று ஆச்சரியத்தை தான் வழங்கும். ஆனால் ஒருவர் அளவுக்கு அதிகமாக பீட்ரூட் ஜூஸைக் குடித்தால், தற்காலிகமாக குரல் நாண்களில் இடையூறு ஏற்பட்டு, பேச முடியாமல் போகலாம். ஆகவே பீட்ரூட் ஜூஸ் தயாரிப்பதாக இருந்தால், அத்துடன் சிறிது செலரி அல்லது கேரட் சேர்த்து தயாரித்துக் குடியுங்கள். குறிப்பாக அளவாக குடிக்க வேண்டும்.

வயிற்றுப் போக்கு

வயிற்றுப் போக்கு

மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் பீட்ரூட்டை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இது உண்மை தான். ஆனால் பீட்ரூட் ஜூஸை ஒருவர் அளவுக்கு அதிகமாக குடித்தால், அதனால் வயிற்றுப் போக்கு ஏற்படும். எனவே அளவாக குடித்து நன்மைப் பெறுங்கள்.

பீட்டூரியா

பீட்டூரியா

பீட்டூரியா என்ற பெயரைக் கேட்டதும், பெரிய நோயோ என்று அச்சம் கொள்ள வேண்டாம். இது மலம் மற்றும் சிறுநீரின் நிறம் சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் இருப்பதைக் குறிப்பதாகும். எவர் ஒருவர் அளவுக்கு அதிகமாக பீட்ரூட் ஜூஸைக் குடிக்கிறார்களோ, அவர்கள் இந்நிலையை சந்திப்பார்கள். எனவே அடுத்த முறை உங்கள் சிறுநீர் அல்லது மலம் பிங்க் நிறத்தில் இருந்தால், அதற்கு நீங்கள் குடிக்கும் பீட்ரூட் ஜூஸைத் தான் குறை கூற வேண்டும்.

நச்சுமிக்க கல்லீரல்

நச்சுமிக்க கல்லீரல்

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பீட்ரூட் ஜூஸை பயன்படுத்தும் போது, கல்லீரலில் ஏராளமான டாக்ஸின்கள் தேங்கி, கல்லீரலை நச்சுமிக்கதாக்கிவிடும். ஆகவே உங்களுக்கு ஏற்கனவே கல்லீரல் பிரச்சனைகள் இருந்தால், பீட்ரூட் ஜூஸை அதிகமாக குடிக்காதீர்கள். வேண்டுமானால், அளவாக எப்போதாவது ஒருமுறை குடிக்கலாம்.

வாந்தி

வாந்தி

சகிப்புத்தன்மை குறைவாக இருப்பவர்கள் பீட்ரூட் ஜூஸைக் குடித்தால் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை தான் வாந்தி. சிலர் இந்த ஜூஸை அதிகமாக குடிக்கும் போது, வாந்தியுடன், உடல் பலவீனத்தையும் உணர்வார்கள். சுத்தமான பீட்ரூட் ஜூஸ் மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை பலவீனமாக இருப்பவர்கள் அல்லது குமட்டல் உணர்வு கொண்டவர்கள் குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

காய்ச்சல்

காய்ச்சல்

பீட்ரூட் ஜூஸ் குடித்தால் அனைவருக்குமே காய்ச்சல் வராது. ஆனால் சில ரிப்போர்ட்டுகளில் சிலருக்கு காய்ச்சல் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. உடலினுள் நடக்கும் நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறையினால், சிலருக்கு லேசான காய்ச்சல் வரும். அதே சமயம் ஒருவருக்கு காய்ச்சல் வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆகவே காய்ச்சல் வந்ததற்கு சரியான காரணம் தெரியாமல் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் தான் வந்தது என்று முடிவெடுக்காதீர்கள்.

அரிப்புகள்

அரிப்புகள்

அளவுக்கு அதிகமாக பீட்ரூட் ஜூஸை குடிப்பதால் சந்திக்கும் பக்க விளைவுகளுள் ஒன்று அரிப்பு. ஆனால் காய்ச்சலைப் போன்றே, அரிப்பு ஏற்படுவதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆகவே உங்களுக்கு அரிப்பு ஏற்படுவதற்கு பீட்ரூட் ஜூஸ் குடித்தது தான் காரணமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

பீட்ரூட் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா? இது ஒரு நல்ல விஷயம் தான். ஆனால் இதை ஏன் பக்க விளைவுகளின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தான் கேட்கிறீர்கள். ஏனெனில் பீட்ரூட் ஜூஸ் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. ஆனால் குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஆபத்தானது. அதேப் போல் உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்து மாத்திரைகளை எடுப்பவராயின், பீட்ரூட் ஜூஸைக் குடிக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Side Effects Of Beetroot Juice Must Know Before Including It In Your Diet

Here are some side effects of beetroot juice you must know before including it in your diet. Read on to know more...