சளியால் மூக்கு ஓரமா காயமாகி இருக்கா? அதைப் போக்க இதோ சில வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது காலநிலை மோசமாக உள்ளதால், பலருக்கும் சளி பிடித்து அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். சளி பிடித்தால், உடலில் உள்ள ஆற்றல் குறைவதோடு, மூக்கு ஒழுகுவதால் மூக்கின் ஓரங்களில் வறட்சியும், காயங்களும் ஏற்படும்.

Ways To Prevent And Treat Cold-Induced Chapped Nose

Image Courtesy

ஆகவே சளி பிரச்சனையில் இருந்து விடுபடவும், அழகு பாழாகாமல் இருக்கவும் ஒருசில எளிய வழிகளைத் தமிழ் போல்ட் ஸ்கை கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் நிறைந்த ஒரு மாய்ஸ்சுரைசர். இதனை மூக்கின் ஓரங்களில் தடவினால், சளியினால் ஏற்படும் வெடிப்புக்கள் மற்றும் வறட்சி நீங்கும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

சளியினால் மூக்கின் ஓரங்களில் வறட்சியால் ஏற்படும் வெடிப்புக்களை மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதன் மூலம் தடுக்கலாம். அதற்கு கெமிக்கல் கலந்த மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தாமல், ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துங்கள்.

சோப்புக்கள்/சுடுநீர் வேண்டாம்

சோப்புக்கள்/சுடுநீர் வேண்டாம்

சளி பிடித்தால், பலரும் குடிக்கவும் சரி, முகத்தைக் கழுவவும் சரி சுடுநீரைத் தான் பயன்படுத்துவோம். ஆனால் மிகவும் சூடான நீருடன், சோப்புக்களைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள எண்ணெய் முழுமையாக நீக்கப்பட்டு, வறட்சி இன்னும் அதிகரிக்கத் தான் செய்யும். ஆகவே இந்த தவறைச் செய்யாதீர்கள்.

மூக்கை அதிகம் தேய்க்காதீர்கள்

மூக்கை அதிகம் தேய்க்காதீர்கள்

சளி பிடித்திருக்கும் போது, துணியால் கடுமையாக மூக்கைத் துடைக்கவோ, தேய்க்கவோ செய்யாதீர்கள். இதனால் அவ்விடத்தில் காயங்கள் தான் அதிகரிக்கும்.

யூகலிப்டஸ் ஆயில்

யூகலிப்டஸ் ஆயில்

வைட்டமின் ஈ எண்ணெயை யூகலிப்டஸ் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, மூக்கின் மேல் தடவினால், மூக்கைச் சுற்றி ஏற்படும் வறட்சி தடுக்கப்படுவதோடு, யூகலிப்டஸ் எண்ணெய் சளியில் இருந்து விடுவிக்கவும் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ways To Prevent And Treat Cold-Induced Chapped Nose

Here are some ways to prevent and treat cold-induced chapped nose. Read on to know more...
Subscribe Newsletter