இரவில் படுக்கும் முன் இந்த ஃபேஸ் பேக்கை போட்டால், சீக்கிரம் வெள்ளையாகலாம்!

Posted By:
Subscribe to Boldsky

உப்தன் ஃபேஸ் பேக்குகள் என்பது பாரம்பரிய அழகு பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஓர் ஃபேஸ் பேக்காகும். இந்த மாதிரியான ஃபேஸ் பேக்குகள் சரும கருமையைப் போக்கவும், இறந்த செல்களை நீக்கவும், சரும பிரச்சனைகளான கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்றவற்றை நீக்கவும் செய்யும்.

Ubtan Face Mask Recipe For Skin Lightening

இந்த ஃபேஸ் பேக்கை செய்ய நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களே போதும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் போட்டால், சருமத்தின் நிறம் மேம்படுவதைக் காணலாம். இங்கு ஓர் அற்புதமான உப்தன் ஃபேஸ் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு மாவு - 1 ஸ்பூன்
பயித்தம் பருப்பு மாவு - 1 ஸ்பூன்
வெள்ளை சந்தன பவுடர் - 1/2 ஸ்பூன்
சிவப்பு சந்தன பவுடர் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் - 1 சிட்டிகை
ரோஸ் வாட்டர் - தேவையான அளவு

செய்முறை #1

செய்முறை #1

முதலில் ஒரு பௌலில் உளுத்தம் பருப்பு மாவு மற்றும் பயித்தம் பருப்பு மாவை போட்டுக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

பின் அத்துடன் சந்தனப் பொடிகள் இரண்டையும் சேர்த்து, மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #3

செய்முறை #3

பின்பு ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் செய்து கொண்டால், ஃபேஸ் பேக் தயார்.

செய்முறை #4

செய்முறை #4

அடுத்து இந்த ஃபேஸ் பேக்கை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15 நிமிடம் நன்கு உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

செய்முறை #5

செய்முறை #5

இறுதியில் மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவிக் கொள்ள வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்தால், சருமம் எப்போதும் பொலிவோடும், பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ubtan Face Mask Recipe For Skin Lightening

Here is a simple Ubtan recipe, which you could make right at the comfort of your home that could give you glowing skin.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter