டேட்டிங்க் கிளம்பும் கடைசி நிமிஷத்துக்ல இருக்கீங்களா? உங்களை அழகாக்கும் 1 நிமிட குறிப்புகள்!!

Posted By: Bala Karthik
Subscribe to Boldsky

உங்கள் கைகளில் இருக்கும் நேரமோ குறைவாக இருக்க, அதனை நுனி விரலில் நீங்கள் பிடித்திருக்க, அந்த குறிப்பிட்ட நேரத்தில், நீங்கள் சிறந்த அலங்காரத்தை செய்துமுடிக்கவேண்டும் என ஆசையும் கொண்டு பறந்து தான் நிற்பீர்கள்.

பதட்டம் வேண்டாம் பெண்களே, பொறுமை காத்திருங்கள். நாங்கள், உங்களுடைய ஒப்பனை அலங்கார நேரத்தை கணக்கில் கொண்டு இருபது வகையான டிப்ஸ் உதவியுடன், உங்கள் குறுகிய நேரத்தில் அழகிய தோற்றத்தை தர முன்வந்துள்ளோம். அவை என்ன? என்பதை பட்டியலின் மூலம் தான் தெரிந்துகொள்ளுங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 உங்கள் தோற்றத்தில் தொடங்கும் தொடக்கம்:

உங்கள் தோற்றத்தில் தொடங்கும் தொடக்கம்:

நாம் நினைக்கும் தோற்றத்தை அழகின் மூலம் பெறுவதே ஆகும். உங்கள் தோற்றம் கம்பீரமாக காதல் கொள்ளும் அளவுக்கோ அல்லது நகரத்து நவீன நாகரிக தோற்றத்துடனோ இருக்க வேண்டுமா? இவற்றை முடிவு செய்வது நம்முடைய டேட்டிங்கிற்கான காலத்திட்டமே ஆகும். இவை தான் காரணமென தெரிந்தபிறகும், உங்கள் மனம் கவர்ந்த ஒருவரின் முன்னால் அழகிய தோற்றத்துடன் நிற்கத்தானே நீங்கள் ஆசைகொள்வீர்கள்.

 உங்களுடைய உள்ளங்கையில் கவனம் தேவை:

உங்களுடைய உள்ளங்கையில் கவனம் தேவை:

டேட்டிங்க் என்பது சிறப்பாக செல்லுமெனில்...இருவரும் கைக்கோர்த்து கொள்வது வழக்கமாகிறது. உங்கள் முகம் பார்த்து முதலில் தொடங்கும் இந்த டேட்டிங்க்., அடுத்து கைகளை கோர்ப்பதால் இனிமையுணர்வை தர, உங்கள் கைகள் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

உங்கள் கைகளை சுத்தப்படுத்தி, ஈரப்பதத்துடன் வைத்துகொள்வதோடு, நகங்களையும் அழகாக நறுக்கி சமபடுத்திகொள்வது என நகங்களுக்கு கலர் அடிப்பது வரை டேட்டிங்கில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

நகத்திற்கு பாலிஷ் போடும்பொழுது, முதலில்...வெள்ளை நிறம் அடித்து அதன் பின்னர் நீங்கள் விரும்பும் நிறத்தை தீட்டுவது சிறந்ததாகும்.

 முடியின் வளர்ச்சியை சரி பார்க்கவும்:

முடியின் வளர்ச்சியை சரி பார்க்கவும்:

டேட்டிங்க் செல்லும்முன் நம் முடியின் வளர்ச்சியை சரி பார்ப்பதில் கவனம் வேண்டும். உங்கள் முடியை சமீப காலத்தில் வளர்த்திருந்தாலோ...அல்லது லேசர் சிகிச்சை செய்திருந்தாலோ, கவலை வேண்டாம்.

இப்படி, சிறிய முறிவுகளை நீங்கள் கண்டிருந்தாலும் ரேஸர் உங்களை காப்பாற்றுகிறது. உங்கள் முடியானது முழுவதுமாக வளர்ந்திருக்குமெனில், உங்கள் தலை முதல் கால் வரை எதாவது அணிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. கடைசி நிமிடத்தில் உங்கள் முடியை ஷேவ் செய்வது சரும கொப்புளங்களை உண்டாக்கும்.

நீங்கள் காத்திருந்த நாள் வந்த பிறகு இப்படி ஒன்று தேவையில்லை என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நம்பிக்கையூட்டும் சிகை அலங்காரம் தேவை:

நம்பிக்கையூட்டும் சிகை அலங்காரம் தேவை:

டேட்டிங்க் என்ற வார்த்தை, நம் தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்த, பொதுவாக பெண்கள் தங்களுடைய ஹேர்ஸ்டைலில் கவனம் செலுத்துவது வழக்கமாகும்.

அது நல்லது தான், இருப்பினும், நாம் எந்த ஹேர்ஸ்டைலை வைத்துகொள்வது என்பதனை முடிவு செய்ய வேண்டியது முக்கியமாகும். உங்களுடைய முடியானது மிகவும் பழங்காலத்து பாணியில் இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டியதில் நமக்கு நிதானம் வேண்டும்.

நீங்கள், டேட்டிங்க் செல்வதற்கான கடைசி நிமிடத்தில், சுய சிந்தனையுடன் செய்யும் சிகை அலங்காரங்களை காட்டிலும், சலூனுக்கு சென்று சிகை அலங்காரம் செய்துகொள்வதே சிறந்தது.

அழகு சாதனப் பை :

அழகு சாதனப் பை :

அவசர தேவைக்கு பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள் அடங்கிய ஒரு பையை நீங்கள் தயார்படுத்திகொண்டு, அதனை உங்களோடு எடுத்து செல்வது சிறந்ததாகும். ஆம், அந்த பையில் அத்தியாவசிய பொருளான...சீப்பு, முகத்திற்கு தேவையான க்ரீம், வாசனை பொருள் (Perfume), உதட்டு சாயம் (Lipstick), ஈரத்தை துடைக்கும் பொருள் (Wet Wipes) என தேவையான பல பொருட்களும் அந்த பையில் இருக்க வேண்டியது அவசியமாகும்.

 நீர்சத்து :

நீர்சத்து :

நீரேற்றத்தை தொடர்வது, உங்கள் அழகை மேம்படுத்த உதவும் வழிமுறைகளுள் ஒன்றாகும். நீங்கள் வெளிபுறத்தில் பயன்படுத்தும் க்ரீமானது, உள் புறத்தில் நீரேற்றத்திற்கு ஒருபோதும் உதவாது. நீங்கள் டேட்டிங்க் செல்ல திட்டங்கள் தீட்டி, கற்றுக்கொள்ள முனைந்தால், உங்களால் முடிந்த அளவுக்கு தண்ணீரை குடிக்க வேண்டியது அவசியமாகும். இதனால், உங்கள் டேட்டிங்கின் போது, தோற்றமானது மேலும் மெருகேற்றத்துடன் காணப்படுகிறது.

 எதில் செல்கிறீர்கள் :

எதில் செல்கிறீர்கள் :

உங்களுடைய கடைசி நிமிட அழகு டிப்ஸாக, டேட்டிங்க் இடங்களுக்கு நாம் செல்ல தேர்ந்தெடுக்கும் போக்குவரத்தாக அமைகிறது. நீங்கள் காரில் செல்ல திட்டமிட்டால், அது சிறந்ததோர் வழியாக இருக்கிறது. ஒருவேளை, அது பைக்காக இருக்குமாயின், உங்கள் முடி இறுக்கி கட்டப்பட்டிருக்கிறதா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லை, நீங்கள் வெகு தூரம் நடந்து செல்ல முடிவு செய்திருந்தால்...எளிய காலணியை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகும்.

உதடுகள் :

உதடுகள் :

உதடுகள் என்பது, உங்களுடைய டேட்டிங்கின்போது., நீங்கள் பேச மற்றும் பிற செயல்களுக்கு துணைபுரியும் மனம் கவரும் ஒரு பகுதியாகும். இப்பொழுது, டேட்டிங்கில் நம் உதடுகள் சிறந்ததாக இருக்க...உதவும் மூன்று முக்கிய வழிகளை பற்றி நாம் பார்க்கலாம்.

1. உங்கள் உதட்டின் நடுவில், லைட் லிப் பென்சில் (Light Lip Pencil) தடவுவது முழுமையான தோற்றத்தை தருகிறது.

2. உங்கள் உதடுகள் பளபளப்புடன் காணப்பட, மிளகுக்கீரை எண்ணெய்யை சேர்ப்பது நல்லதாகும்.

3. உங்கள் உதட்டில் இருக்கும் சாயம் போகாமல் இருக்க, உங்கள் உதட்டில் திசுகாகிதங்களை பயன்படுத்தலாம். அதன்பின்னர், கசியும் தூளையும் (Translucent Powder) உதடின் மீது தூவலா

 பெர்ஃப்யூம்:

பெர்ஃப்யூம்:

உங்கள் மனம் கவர்ந்த ஒருவரை, டேட்டிங்கின்போது வசீகரிக்க செய்ய, உங்களிடமிருந்து வரும் மணமானது முதன்மை இடத்தை பிடிக்கிறது. அதனால், அவனுக்கு நீங்கள் தரக்கூடிய சிற்றின்ப வேட்கைக்காக, ஒரு சிறந்த வாசனை பொருளை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகும். அதன்பின்னர், மெல்லுவதற்கு ஏதுவான பொருள் (Chewing Gum) அல்லது இதழ்களில் அடிக்க பயன்படும் ஷ்ப்ரேவை (Mouth Spray) முயற்சி செய்வது சிறந்தது. உங்கள் டேட்டிங்கின் போது விடும் சுவாசகாற்றில் துற்நாற்றம் வீசுமெனில், நன்றாக இருக்குமா என்ன? கண்டிப்பாக இருக்காது தானே...

கவனிக்க வேண்டியது உதடுகளா? அல்லது கண்களா?

கவனிக்க வேண்டியது உதடுகளா? அல்லது கண்களா?

உங்கள் உதட்டை அழகுபடுத்த ஆசைகொண்டால், கவனம் முழுவதும் உதட்டில் மட்டுமே இருக்க வேண்டியது அவசியமாகும். ஒருவேளை கண்களில் உங்கள் கவனம் இருக்குமெனில், கண்களை கவர்ச்சிகரமாக மாற்ற வேண்டியதில் மட்டுமே நம் கவனம் இருக்க வேண்டும்.

 நிறங்கள் தேர்ந்தெடுக்கும்போது :

நிறங்கள் தேர்ந்தெடுக்கும்போது :

உங்கள் டேட்டிங்கிற்கு செல்லும்முன் கலர் கலராக எடுத்து வைப்பீர்கள். உதட்டு சாயத்திலிருந்து, கண் மை, அணியும் உடை, கண் நிழல், நகத்திற்கு பாலிஷ் என பல பொருட்களை பல வண்ணங்களை கொண்டு உங்கள் உடலை வடிவமைத்து மகிழ ஆசைகொள்வதுண்டு.

ஆனால், முதல் கட்ட அடிப்படை வழியாக... நாம் தேர்ந்தெடுக்கும் அனைத்தும் ஒரே டோனில் (Tone) இருக்க வேண்டும். அடுத்து நாம் பார்க்க வேண்டியது, ஒளி மாறுபாடு வண்ணம் (Contrast). நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறமானது, உங்களுக்கு பிடித்த ஒருவருக்கு ஏற்றார் போல் தேர்வு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

உணர்வுடன் இருப்பது அவசியம்:

உணர்வுடன் இருப்பது அவசியம்:

இறுதியாக, ஒப்பனை அலங்காரத்தில் ஓர் மணி நேரம் செலவிட்டு, மற்ற அனைத்தையும் நீங்கள் சிறப்பாக செய்துமுடித்தாலும், உங்கள் மனம் கவர்ந்த அந்த நபர் முன்னே நிற்கும்போது உணர்வினை வெளிக்கொணர முடியாமல் தவிக்கிறீர்கள்.

நீங்கள் அவர் முன்பு தோற்றத்தால் கவர்ந்து, அவர் மனதை கொள்ளை கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரிய வேண்டும். அப்படி ஓர் மன நிலையில் இருந்தால் மட்டுமே, எதிர்முனையில் இருப்பவர் உங்களை புகழ்ந்து பேசி, அவர் மனதில் இருப்பதை வெளிக்கொண்டு வர முயற்சி செய்வார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 Beauty Tips If You Have A Last-minute Date Planned Up,

20 Beauty Tips If You Have A Last-minute Date Planned Up
Story first published: Wednesday, June 28, 2017, 9:00 [IST]