உடல் துர்நாற்றம் இருக்கா? அதைப் போக்க எளிதான அற்புதமான டிப்ஸ்கள் !

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

உடல் துர்நாற்றம் என்பது உங்களை மற்றவர்கள் முன்னிலையில் இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடும். இதற்கு காரணமே இப்பொழுது உள்ள குளோபல் வார்ம்மிங் (Global warming) பிரச்சினை தான்.

நீங்கள் பார்த்தால் தெரியும் ஒவ்வொரு வருடமும் ட்டியோரெண்ட் விற்பனை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டே போகிறது .

40 வயதிற்குப் பின் உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? இந்த 6 காரணங்களால் இருக்கலாம்!!

கொஞ்சம் நினைத்து பாருங்கள் உங்கள் ரூமுக்குள் நுழைந்தவுடன் கெட்டுப் போன மீன் வாடை அடித்தால் எப்படி இருக்கும். உங்கள் நல்ல செயல்கள் கூட இந்த உடல் துர்நாற்றத்தால் வெளிச்சத்திற்கு வராமல் போய்விடும்.

Simple & Worth-trying Fixes For Body Odour

உடல் துர்நாற்றம் மரபணு சார்ந்தோ அல்லது ஹார்மோன் பிரச்சினையால் ஏற்படுகிறது. அதிகமான மக்களின் உடல் துர்நாற்றத்திற்கு அவர்கள் சுத்தமாக இல்லாமல் இருப்பதே காரணம். இதனால் அந்த பகுதியில் பாக்டீரியாக்கள் பெருகி பாதிப்புகளை ஏற்படுத்த ஆரம்பித்து விடும்.

இதற்கு நீங்கள் உங்கள் துர்நாற்றத்திற்கு முடிவு கட்டினால் மட்டுமே பாக்டீரியாக்களை தடுக்க முடியும்.எனவே இங்கே உங்கள் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில வீட்டு முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆன்டி பாக்டீரியல் சோப் பயன்படுத்துதல்

ஆன்டி பாக்டீரியல் சோப் பயன்படுத்துதல்

உடலில் பெருகும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை குறைக்க நல்ல ஆன்டி பாக்டீரியல் சோப்பை பயன்படுத்துங்கள் அல்லது ஆன்டி பாக்டீரியல் ஸ்சொலுசன் பயன்படுத்துங்கள். நன்றாக தேய்க்கும் பிரஷ்யை கொண்டு தேய்த்து குளிக்க வேண்டும்.

உடலில் உள்ள இறந்த செல்கள் தான் பாக்டீரியாவை வளர்க்கும் எனவே கண்டிப்பாக வாரத்திற்கு ஒரு முறை ஸ்க்ரப் பயன்படுத்தி இறந்த செல்களை நீக்க மறந்து விடாதீர்கள்.

உங்கள் உடலில் அதிகமாக வியர்க்கும் பகுதியை கவனத்தில் கொண்டு ஒரு காட்டன் பஞ்சில் ஆப்பிள் சிடார் வினிகரில் நனைத்து அந்த பகுதியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.

டவல் துடைப்பு

டவல் துடைப்பு

நல்ல சுத்தமான உலர்ந்த டவலை கொண்டு குளித்த பிறகு துடைக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் டவல் கண்டிப்பாக சுத்தமாகவும் ஒவ்வொரு தடவை துடைப்பதற்கு மாற்று டவுலும் வைத்திருப்பது முக்கியம்.

உங்கள் உடலை நன்றாக துடைத்து உலர்ந்த நிலையில் வைத்துக் கொண்டால் பாக்டீரியாக்கள் பெருகாது. பேபி பவுடர் அல்லது டால்கம் பவுடரை வியர்க்கும் பகுதியில் தடவி நீண்ட நேரம் உலர்ந்த நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

பயனுள்ள ட்டியோரெண்ட்

பயனுள்ள ட்டியோரெண்ட்

நல்ல ட்டியோரெண்ட்டை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். இது நல்ல நறுமணம் உள்ளதாகவும் நீண்ட நேரம் நிலைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

இது ஆன்டிஸ்பெர்பிரண்ட் ஆக அதாவது வியர்வையை தடுத்தல் மற்றும் நீண்ட நேரம் நறுமணம் கொடுப்பவைகளாக இருக்க வேண்டும். பயனுள்ள ட்டியோரெண்ட் உங்களை நாள் முழுவதும் நறுமணத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும்.

வேலைக்கு செல்லும் போது கூட உங்கள் ட்டியோரெண்ட்டை எடுத்துச் சென்று உங்கள் டேபிள் லாக்கரில் வைத்துக் கொள்ள மறந்துவிடாதீர்கள்.

சரியான உணவு

சரியான உணவு

மணமுள்ள உணவுகளான பூண்டு, வெங்காயம் மற்றும் சிவப்பு இறைச்சி போன்றவை உடல் துர்நாற்றத்தை அதிகரிக்கும். இதைத் தவிர்த்து நறுமணமுள்ள உணவான ரோஸ் மேரி, ஸ்ஷேஜ் (sage), லெமன் மற்றும் க்ரீன் டீ போன்றவற்றை எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் எளிதாக சீரணிக்காத உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

எப்பொழுதும் சுத்தமாக இருத்தல்

எப்பொழுதும் சுத்தமாக இருத்தல்

அடிக்கடி நீங்களே உங்களை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள். தொடர்ந்து குளிங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிங்கள். இதனால் உங்கள் வியர்வை மற்றும் தூசி படிந்த அழுக்குகள் தேங்குவது குறையும்.

இதனால் பாக்டீரியா பெருகுவதும் குறையும். வாரத்திற்கு ஒரு முறை உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிடுங்கள். படுப்பதற்கு முன் குளிக்காமல் செல்லாதீர்கள்.

அதே மாதிரி ஒவ்வொரு காலையிலும் குளிக்காமல் வெளியே செல்லாதீர்கள். குளிர்ந்த மற்றும் சூடான தண்ணீரில் மாற்றி மாற்றி 20 நிமிடங்களாவது குளிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple & Worth-trying Fixes For Body Odour

Simple & Worth-trying Fixes For Body Odour
Story first published: Monday, July 10, 2017, 9:00 [IST]