வயதாகி விட்டது போல உணர்கிறீர்களா? இளமையை மீட்க உதவும் கரும்புச்சாறு!

Written By:
Subscribe to Boldsky

சுருங்கங்கள் வயதான காரணத்தினால் முகத்தில் தோன்றுகிறது. இது தவிர சுருக்கங்கள் உண்டாக உங்களது தவறான வாழ்க்கை முறையும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.

Home remedies for wrinkles

முகத்தில் சுருக்கங்கள் இருந்தால் உங்களது தோற்றமே நன்றாக இருக்காது. எனவே நீங்கள் முகத்திற்கு சில பராமரிப்புகளை தர வேண்டியது அவசியமாகும்.

இந்த பகுதியில் உங்களது முகத்தில் சுருக்கங்கள் உள்ளதை எப்படி கண்டறிவது, அது எதனால் உண்டாகிறது, அதற்கான தீர்வுகள் என்ன என்பதை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்:

அறிகுறிகள்:

கண்களின் அடிப்பகுதி, சிரிக்கும் போது உதடுகளின் இரண்டு ஓரங்களிலும் இருக்கும் கன்னங்களில் பல கோடுகள் விழுவது போன்றவை இதற்கான அறிகுறிகளாகும்.

சூரிய ஒளி

சூரிய ஒளி

அதிகமாக வெயிலில் செல்வது சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும். அதற்காக வெயிலே சருமத்தின் மீது படாமல் இருப்பதும் தவறானது. வெயிலில் செல்ல வேண்டிய தேவை இருந்தால், சன் க்ரீம்களை உபயோகப்படுத்துவது நல்லது.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

புகைப்பிடிப்பது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியாவதை தடை செய்யும் ஒன்றாக இருக்கும். இதனால் சருமத்தில் சுருக்கங்கள் உண்டாகும்.

முட்டை

முட்டை

முட்டையின் வெள்ளைக்கருவை முகம் மற்றும் கண்களின் அடிப்பகுதியில் அப்ளை செய்வதால் சுருக்கங்கள் போகும்.

விளக்கெண்ணை

விளக்கெண்ணை

சுத்தமான செக்கில் ஆட்டிய விளக்கெண்ணையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்வதால் முகம் ஆரோக்கியமாவதுடன் சுருக்கங்களும் மறையும்.

விட்டமின் ஈ

விட்டமின் ஈ

விட்டமின் ஈ கேப்சூல்களை உடைத்து அதிலிருக்கும் எண்ணெய்யை வெளியில் எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்ற வேண்டும். சிறிதளவு யோகார்ட், அரை டீஸ்பூன் தேன், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஒரு பஞ்சினால் முகத்தில் அப்ளை செய்து பத்து நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

சிறிதளவு தேங்காய் எண்ணெயை எடுத்து தினமும் இரவு தூங்கும் முன்பு சருமத்தில் நன்றாக மசாஜ் செய்வதால் சருமத்தில் சுருக்கங்கள் வராமல் இருக்கும்.

கரும்பு சாறு

கரும்பு சாறு

மஞ்சளுடன் கரும்பு சாறு கலந்து முகத்தில் மசாஜ் செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

அன்னாச்சி பழம்

அன்னாச்சி பழம்

அன்னாச்சிப் பழ சாறை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 10-15 நிமிடங்கள் கழித்து அதனை கழுவி விட வேண்டும் இது சுருக்கங்களுக்கு ஒரு சிறந்த தீர்வை அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home remedies for wrinkles

Home remedies for wrinkles
Story first published: Friday, July 28, 2017, 13:05 [IST]