கை கால் முட்டுகள் கருப்பா இருக்கா? இந்த டிப்ஸ் படிங்க!

Posted By:
Subscribe to Boldsky

கண்ணுக்கு கீழே வரும் கருவளையம் முகத்தின் அழகையே கெடுத்துவிடுவது போல கைமுட்டுகளில் படரும் கறுப்பு நிறம் விரல்களின் அழகையே கெடுத்து விடுவது உண்டு. அதிகப்படியாக சுரக்கும் மெலனின், நீங்காது இருக்கும் இறந்த செல்கள், போன்றவை அதற்கு காரணமாக இருக்கலாம்.

Home Remedies For Dark Knuckles

கை மற்றும் கால் மூட்டுகளில் இருக்கும் கறுப்பு நிறத்தை போக்க சில எளிய டிப்ஸ்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள் அதுனுடன் இரண்டு டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு அரை டீஸ்ப்பூன் தேன், ஒரு டேபிள் ஸ்பூன் பால் மற்றும் தயிர் ஒரு டேபிள் ஸ்பூன் பாதாம் ஆயில், எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்னர் அந்த கலவையை கைகளில் தேய்த்து, 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். கலவையை கைகளில் தடவியிருக்கும் போது கை முட்டிகளில் அழுத்த தேய்த்து மசாஜ் செய்திடுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இப்படிச் செய்யலாம்.

பாதாம் :

பாதாம் :

10 பாதாம் எடுத்துக் கொள்ளுங்கள் அதனை தண்ணீரில் ஆறு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை அரைத்து பேஸ்ட்டாக எடுத்துக்கொள்ளுங்கள் அதனுடன் பால் க்ரீம் சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் அதில் ஐந்து சொட்டு ஆலிவ் ஆயில் ஊற்றி நன்றாக கலந்து கைகளில் தடவுங்கள். தினமும் இதனை செய்யலாம். நல்ல பலன் கிடைத்திடும்.

முட்டை :

முட்டை :

முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு டீஸ்ப்பூன் தேன் மற்றும் இரண்டு டீஸ்ப்பூன் கடலை மாவு சேர்த்து கைகளில் பூசி வந்தால் நல்ல பலன் கிடைத்திடும். பேஸ்ட்டை கைகளில் தடவி ப்யூமிக் ஸ்டோன் கொண்டு ஸ்க்ரப் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் வாரத்தில் இரண்டு முறை இதனை செய்யலாம்.

அரிசி மாவு :

அரிசி மாவு :

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் ஆற்றல் அரிசி மாவுக்கு உண்டு. அரிசி மாவுடன் பால் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளுங்கள். அந்த பேஸ்ட்டை கைகளில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும் இதனை தினமும் செய்யலாம்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு :

ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, அத்துடன் இரண்டு டீஸ்ப்பூன் சர்க்கரை சேர்த்து கை மற்றும் கால்களில் தடவிக் கொள்ளுங்கள் சுமார் 15 நிமிடங்கள் கழித்து அதனை கழுவிவிடலாம். சருமத்தை பொலிவாக்கும் எலுமிச்சை அத்துடன் அதிலிருக்கும் சர்க்கரை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவிடும்.

ரோஸ் வாட்டர் :

ரோஸ் வாட்டர் :

ரோஸ் வாட்டருடன் பேக்கிங் சோடா கலந்து பேஸ்ட்டாக கைகளில் தடவிக் கொள்ளுங்கள் பின்னர் க்ளிசரின் அல்லது எலுமிச்சம்பழத்தைக் கொண்டு அந்த கலவை தடவிய இடங்களில் லேசாக ஸ்க்ரப் செய்திடுங்கள். பின்னர் பத்து நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

பப்பாளி :

பப்பாளி :

நன்கு பழுத்த பப்பாளி பழத்தை எடுத்து மசித்துக் கொள்ளுங்கள் அவற்றுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இந்த கலவையை கை மற்றும் கால்களில் கருப்பாக உள்ள இடங்களில் தடவி நன்றாக காய்ந்ததும் இளஞ்சூடான நீரைக் கொண்டு கழுவி விடுங்கள். வாரத்தில் ஒரு முறை இப்படிச் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies For Dark Knuckles

Some beauty tips to get tid of dark knuckles