உங்க பாத வெடிப்புகளை ஒரு சில நாட்களில் போக்கிடும் பாட்டி வைத்தியங்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

பாத வெடிப்பு நமது மதிப்பை இழக்கச் செய்யும் மிக முக்கிய விஷயங்களில் ஒன்று. என்னதான் முகம் ரதி போலிருந்தாலும் பாதங்களில் வெடிப்பு இருந்தால் நம்மைஇளக்காரமாகத்தான் பார்ப்பார்கள்.

இறந்த செல்கள், கொழுப்பு படிவங்கள், அதிக வறட்சி எல்லாம் ஒன்று சேர்ந்து தரும் அழுத்தத்தால் சருமம் வெடித்து விடுகின்றது. அதனைத்தான் வெடிப்பு என்று கூறுகிறோம்.

பாதவெடிப்பை போக்க நீங்கள் க்ரீம் வாங்கி போட்டாலும், போடுவதை நிறுத்தி விட்டால் சில நாட்களில் மீண்டும் வந்துவிடும். பாதவெடிப்பு தொடர்கதையாக இருக்கிறதா? அதற்கு முற்றுப் புள்ளி வைக்கனும்னு ஆசையா இருந்தா தொடர்ந்து படியுங்க.

உங்களுக்கு பாத வெடிப்பை போக்குவதற்கான எளிய குறிப்புகள் இங்கே விளக்கப்பட்டுள்ளன. அவற்றை செய்து பார்த்து பயன்பெறுங்கள். நல்ல பலன்களை தருபவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 எலுமிச்சை மற்றும் கிளிசரின் :

எலுமிச்சை மற்றும் கிளிசரின் :

தேவையானவை :

எலுமிச்சை சாறு- 1

கிளிசரின் - 2 ஸ்பூன்

ரோஸ் வாட்டர் - 3 ஸ்பூன்

செய்முறை :

செய்முறை :

இவை எல்லாவற்றையும் ஒன்றோன்று கலந்து கொள்ளுங்கள். ஃப்ரெஷாக செய்து பயன்படுத்தினல நல்ல பலன் தரும்.

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

இரவில் தூங்குவதற்கு முன் கால்களை நன்றாக கழுவிக் கொண்டு பின்னர் இந்த கலவையை பாதங்களில் தடவுங்கள். இவ்வாறு செய்தால் ஒரு சில நடகளிலேயே வெடிப்பு மறைந்து விடும்.

 சமையல் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய் :

சமையல் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய் :

தேவையானவை :

தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்

சமையல் சோடா - 1 1/2 ஸ்பூன்

 தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

இரண்டையும் பேஸ்ட் போல் ஆகும் வரை நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். தேங்கய எண்ணெய் செக்கு எண்ணெயாக இருந்தால் விரைவில் பலன் கிடைக்கு

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

இந்த பேஸ்டை பாதங்களில் தடவி மசாஜ் சிறிது நேரம் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து காலை கழுவிக் கொள்ளலாம்.

வாழைப்பழம் மற்றும் அவகாடோ :

வாழைப்பழம் மற்றும் அவகாடோ :

வாழைப்பழம் - 1

அவகாடோ- 1/2 பழம்

ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்.

தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

முதலில் வாழைப்பழம் மற்றும் அவகாடோவை நன்றாக மசித்து ப்யூரி போல் செய்து கொண்டு அவற்றுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

இந்த பேஸ்டை பாதங்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இரவு தூங்குவதற்கு முன் இப்படி செய்து பின்னர் கழுவலாம். நல்ல பலன் தரும்.

ஓட்ஸ் மற்றும் தேன் :

ஓட்ஸ் மற்றும் தேன் :

தேவையானவை :

ஓட்ஸ் - 2 ஸ்பூன்

தேன்- 2 ஸ்பூன்

 தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

ஓட்ஸை பொடித்துக் கொள்ளுங்கள். இதனுடன் தேன் கலந்து கெட்டியாக இருந்தால் சிறிது ரோஸ் வாட்டரை கலந்து கொள்ள வேண்டும்.

 பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

இதனை கால்களில் ஸ்க்ரப் போல் தேய்த்து 15 நிமிடங்கள் அப்படியே இருங்கள். இப்படி வாரம் 3 முறை செய்தால் நல்ல பலன் தரும்.

மெழுகு :

மெழுகு :

இந்த குறிப்பு மிகவும் அருமையான பலனைத் தரும். கடைகளில் வாங்கும் க்ரீமை விட பாதுகாப்பானது. உங்கள் பாதங்கள் மிருதுவாகும்.

தேவையானவை :

வெள்ளை மெழுகுவர்த்தி

விளக்கெண்ணெய்

தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

மெழுகுவர்த்தியிலிருக்கும் மெழுகை உதிர்த்து பொடி செய்து கொள்ளுங்கள். பின்னர் விளக்கெண்ணெயை சூடுபடுத்தி அதில் மெழுகை போடவும். அடுப்பிலிருந்து சற்று தூரமாகவே எண்ணெய் கரண்டியை பிடித்துக் கொள்ளுங்கள். மெழுகு முழுவதும் உருகியதும், அதனை ஆற விட வேண்டும்.

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

ஆறியதும் அது களிம்பு போல் மாறிவிடும். அதனை தினமும் இரவில் தடவிக் கொண்டு தூங்குங்கள். 3 நாட்களில் உங்கள் கால்களில் இருக்கும் வெடிப்பெல்லாம் மறைந்து மிருதுவான கால்களாய் காட்சியளிக்கும். கியாரெண்டி.

வாசலின் :

வாசலின் :

இதுவும் மிக எளிதான குறிப்பு. வாசலினில் இருக்கும் பெட்ரோலியம் ஜெல்லி பாதங்களில் இருக்கும் வெடிப்பை போக்கும். மிருதுவான தன்மையை தடும்.

தேவையானவை :

வாசலின் - 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு- அரை ஸ்பூன்

 செய்முறை :

செய்முறை :

வாசலின் ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். அதனை பாதங்களில் த்டவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து பாதங்களை கழுவலாம் அல்லது பாதங்களை இரவு முழுவதும் அப்படியே வைத்திருக்கலாம்.

அரிசி மாவு ஸ்கர்ப் :

அரிசி மாவு ஸ்கர்ப் :

இதனை வாரம் இருமுறை செய்தால் போதும். உங்கள் பாதங்களில் வெடிப்பு வராமல் தடுக்கும். இறந்த செல்களை நீக்கி பாதங்களை பட்டு போல் வைத்திருக்க உதவும்.

தேவையானவை :

அரிசி மாவு- 1 ஸ்பூன்

தேன்- 1 ஸ்பூன்

ஆப்பிள் சைடர் வினிகர் - 1 ஸ்பூன்

 செய்முறை :

செய்முறை :

அரிசி மாவில் சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். பின் மற்றவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

இந்த ஸ்க்ரப்பை குளிப்பதற்கு முன் பாதங்களில் தடவி தேய்க்க வேண்டும். 5 நிமிடம் கழித்து கழுவலாம்.. வாரம் இருமுறை செய்தால் பாதவெடிப்பை வராமல் காத்திட முடியும் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home remedies for cracked heels

Home remedies for cracked heels