முகத்தில் பருக்கள் அளவுக்கு அதிகமாக உள்ளதா? அதைப் போக்க இந்த மாஸ்க்கைப் போடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

பெண்கள், ஆண்கள் என இருபாலரும் அதிகம் அவஸ்தைப்படும் ஓர் பொதுவான சரும பிரச்சனை தான் முகப்பரு. முகத்தில் ஒன்று இரண்டு பருக்கள் இருந்தால் பரவாயில்லை. ஆனால் சிலருக்கு கன்னப் பகுதி முழுவதுமே பருக்களாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தங்கள் அழகை நினைத்து அதிகம் கவலைக் கொள்வார்கள்.

DIY: Camphor Oil Face Mask For Acne-prone Skin

மேலும் இந்த பருக்களைப் போக்க கண்ட க்ரீம்களை வாங்கியும் பயன்படுத்துவார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்திருக்காது. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு ஃபேஸ் மாஸ்க்கைப் போட்டு வந்தால், பருக்கள் முதல் கருவளையங்கள் வரை, முகத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு விரைவில் கிடைக்கும்.

சரி, இப்போது அந்த ஃபேஸ் மாஸ்க்கை எப்படி தயாரித்துப் பயன்படுத்துவது என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 3 ஸ்பூன்
கிளிசரின் - 2 ஸ்பூன்
கற்பூர எண்ணெய் - 2 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 3 ஸ்பூன்

செய்முறை #1

செய்முறை #1

முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

பின் அத்துடன் 2 ஸ்பூன் கிளிசரின் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வறட்சியான என்றால் இன்னும் சில துளிகள் கிளிசரினை சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை #3

செய்முறை #3

பின்பு அதில் 2 ஸ்பூன் கற்பூர எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #4

செய்முறை #4

அடுத்ததாக ரோஸ் வாட்டர் சேர்த்து, நன்கு பேஸ்ட் செய்து கொண்டால், ஃபேஸ் மாஸ்க் தயார்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

DIY: Camphor Oil Face Mask For Acne-prone Skin

Here’s how you can prepare this effective camphor oil face mask that helps to treat acne-prone skin with ease.
Story first published: Tuesday, February 28, 2017, 16:04 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter