For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளைப்பருக்களா? அவற்றை அடியோடு விரட்ட அட்டகாசமான குறிப்புகள்!!

முகத்தில் தோன்றும் வெள்ளைப்பருக்களை நீக்க சில பேஸ் பேக்குகள்.

|

அழகுக்காக எக்கச்சக்க செலவு செய்ததெல்லாம் போதும் . வீட்டிலிருந்தபடியே எளிதாக உங்கள் சருமத்தை பளீச் ஆக்கிடலாம். ஆய்லி ஸ்கின் இருப்பவர்களுக்கும் மற்றும் சில காம்பினேசன் ஸ்கின் இருப்பவர்களுக்கு கரும்புள்ளிகளை விட வெள்ளைப் பருக்கள் அதிகமாக இருக்கும். அதனை நீக்க சில பேஸ் பேக்குகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Diffetent face Packs For Removing Whiteheads

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹனி பேக் :

ஹனி பேக் :

இந்த பேக்கிற்கு ஆரஞ்சு பழத்தோல், கடலை மாவு மற்றும் தேன் தேவைப்படும். ஆரஞ்சு பழத்தில் ஆன்ட்டி பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கின்றன.

அத்துடன் கடலை மாவு இயற்கை ஸ்க்ரப்பாக பயன்படும் என்பதால் இது நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை எல்லாம் நீக்கிடும். தேன் நம் சருமத்திற்கு ஒரு பாதுகாப்பு அரணாக செயல்படும்.

முதலில் ஆரஞ்சு பழத்தோலை காய வைத்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். அந்த பொடியுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் மூன்று டேபிள் ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ் பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடங்களில் கழுவிவிடலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதனை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஸ்ட்ராபெர்ரி பேக் :

ஸ்ட்ராபெர்ரி பேக் :

இந்த பேக்கிற்கு ஸ்ட்ராபெர்ரியுடன் தக்காளி சேர்க்கவேண்டும். உடனடியான மாற்றங்கள் தெரியும். சருமத்துவாரங்களில் அடைத்துள்ள அழுக்குகளை அகற்றும் வேலையை ஸ்ட்ராபெர்ரி கச்சிதமாக செய்திடும்.

அத்துடன் தக்காளியில் நிறைந்துள்ள விட்டமின் சி நம் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உகந்தது.

நான்கு ஸ்ட்ராபெர்ரிக்களுடன் ஒரு தக்காளி பழத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும்.பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவி விடலாம்.

முல்தானிமெட்டி பேக் :

முல்தானிமெட்டி பேக் :

வொயிட் ஹெட்ஸ் நீக்குவதில் முல்தானி மெட்டி மற்றும் சந்தனம் முக்கிய இடம் வகிக்கிறது. முல்தானிமெட்டியில் மக்னீசியம் நிறைந்திருக்கிறது இது முகத்தில் உள்ள வொயிட்ஹெட்ஸை நீக்கிடும்.

சந்தனம் மிகச்சிறந்த இயற்கையான ஆன்டி செப்டிக் மருந்தாக பயன்படுகிறது. அத்துடன் அது சருமத்திற்கு குளிர்ச்சியையும் தந்திடும்.

இரண்டு ஸ்பூன் முல்தானிமெட்டியுடன் இரண்டு ஸ்பூன் சந்தனம் சேர்த்துடன் அத்துடன் தேவையான அளவு தண்ணீரை கலந்து பேஸ்ட் பதத்திற்கு ஆக்கிக் கொள்ளுங்கள். அதனை முகத்தில் தடவி நன்றாக காய்ந்ததும் கழுவிவிடலாம்.

பாதாம் பேக் :

பாதாம் பேக் :

சருமத்தில் வொயிட்ஹெட்ஸ் வருவதற்கான முக்கிய காரணங்கள் காற்று மாசு, முகத்தில் சேரும் அழுக்குகள் தான்.இதனை பாதாம் உதவியுடன் நாம் நீக்க முடியும்.

பாதாம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கு ஆரோக்கியமானது. இதனை முகத்தில் தடவலாம். அத்துடன் அதில் சேர்க்கும் தேனினால், சருமத்துளைகளை அடைத்துள்ள எண்ணெயை நீக்க முடியும்.

ஒரு கைப்பிடியளவு பாதாமை ஊறவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து கொள்ளுங்கள்.வேண்டுமானால் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடங்களில் முகத்தை கழுவிட வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை இதனை செய்யலாம்.

ஆப்பிள் பேக் :

ஆப்பிள் பேக் :

இதிலும் நாம் தேன் சேர்க்க வேண்டும். ஆப்பிள் மற்றும் தேன் காம்பினேசன் நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை உடனடியாக நீக்கிடும்.

ஆப்பிளில் விட்டமின் சி நிறைந்திருக்கிறது. இது சருமப் பொலிவிற்கு வழிவகுக்கும்.

ஆப்பிளை நறுக்கி அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் மூன்று டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவுங்கள். பத்து நிமிடங்களில் முகத்தை கழுவி விடலாம்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் உடனடி ரிசல்ட் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: beauty face home tips
English summary

Diffetent face Packs For Removing Whiteheads

whiteheads on face is one of the common problems for Oily skin. Here some facepacks help to remove whiteheads.
Story first published: Wednesday, July 19, 2017, 12:24 [IST]
Desktop Bottom Promotion