முடியின் வேர்கால்களில் ஏற்படுகிற நீர்க்கட்டிகளுக்கு இதுவே சிறந்த மருந்து!

Posted By:
Subscribe to Boldsky

முடியின் வேர்கால்களில் ஏற்படுகிற நீர்க்கட்டிகள் பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். இந்தச் சிக்கல் உங்களில் பலருக்கும் வந்திருக்கும். சருமத்தில் ஏற்பட்டிருக்கும் சில நீர்க்கட்டிகள் உங்களுக்கு வலியை அதிகப்படுத்த அதில் முடியும் வளர்ந்து நமக்கு சிக்கலை ஏற்படுத்திடும்.

பல நேரங்களில் அந்த முடி எங்கேனும் பட்டு அதீத வலியை நமக்கு உண்டாக்கும். முடி சற்று நீளமாகவும் வளர்ந்திடாமல் பாதி வளர்ந்த நிலையிலேயே இருப்பதால் நமக்கு பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹேர் சிஸ்ட் என்றால் :

ஹேர் சிஸ்ட் என்றால் :

சருமத்தில் வளர்கிற முடியில் வளர்ச்சியில்லாமல் இருப்பது. அதன் வேர்கால்களில் நீர்க்கட்டி உண்டாவது தான் ஹேர் சிஸ்ட் எனப்படும்.

முதலில் அந்த இடத்தில் லேசாக நீர்க்கட்டி போல ஏற்படும். பின்னர் நாளடைவில் அதன் நடுவிலிர்ந்து முடி வளர்ந்திருக்கும். இது உடலில் பல பாகங்களிலும் ஏற்படும். குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று சொல்ல முடியாது.

குழப்பம் :

குழப்பம் :

பொதுவாக நம் சருமத்தில் ஏற்படுகிற பாக்டீரியா தொற்றினாலேயே இது போன்ற கட்டி ஏற்படுகிறது. சாதரணமாக ஏற்படுகிற நீர்க்கட்டிக்கும் இப்படியான முடி வளர்தல் கொண்ட கட்டிக்கும் இடையில் என்ன வித்யாசம் இருக்கிறது என்பதில் நிறைய குழப்பம் கொள்கிறார்கள்.

அந்த நீர்க்கட்டி ஏற்படுகிற இடம், அதன் அளவு பொருத்து சிகிச்சைகள் வேறுபடும்.

நீங்கள் சரியாக சேவ் செய்த பிறகு இந்தப் பிரச்சனை ஏற்படுகிறதென்றால் அதில் ஏதோ தவறு நடக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.

பாக்டீரியா தொற்று :

பாக்டீரியா தொற்று :

பிறப்புறுப்புகளில் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டால்,மருத்துவரை சந்திப்பது தான் நல்லது. வலி இருக்கும் போது வீட்டு வைத்திய முறைகளை கடைபிடித்து காலம் தாழ்த்தாதீர்கள்.

ஒரு கட்டத்தில் பாக்டீரியா தொற்று அதிகமாகி பிரச்சனை வீரியமாகிடும்.

ஷேவிங் மற்றும் வேக்சிங் :

ஷேவிங் மற்றும் வேக்சிங் :

இது போன்ற நீர்க்கட்டிகள் தோன்றுவதற்கு அடிப்படைக்காரணமாக முறையில்லாத ஷேவிங் மற்றும் வேக்சிங் தான் சொல்லப்படுகிறது.

செய்த பிறகு சருமத்தில் அதீத எரிச்சல் ஏற்பட்டால் விரைவில் உங்களுக்கு நீர்க்கட்டி ஏற்படும். உங்களுடைய சரும பராமரிப்பும் சரியாக இல்லை என்று அர்த்தம்.

சோப் :

சோப் :

பாதி வளர்ந்த நிலையில் இருக்கிற நீர்க்கட்டி முடிகளை போக்குவதற்கு சிறந்த வழி சோப் பயன்படுத்துவது தான். சில நேரங்களில் அதனை வராமல் கூடச் செய்திடும்.

மிகவும் முற்றிய நிலையில் இருக்கும் போது சோப் பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. இவை எல்லாம் ஆரம்பக்கட்டதில் அல்லது அதற்கும் முதலாக பயன்படுத்த வேண்டியது.

வேக்சிங் :

வேக்சிங் :

பெரும்பாலும் வேக்சிங் செய்யும் போது எதிர்புறத்திலிருந்து தான் வேக்ஸ் செய்வார்கள்.. இதனால் முடி தன் வேர்ப்பாகத்திலிருந்து நீங்கும் என்று சொல்லப்படும்.

இப்படி அடிக்கடி செய்வதால்,முடியின் வேர்கால்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் நீர்க்கட்டிகள் தோன்றலாம்.

சருமத் துவாரங்கள் :

சருமத் துவாரங்கள் :

சருமத்துவாரங்கள் வழியாக சருமத்தில் சேருகிற அழுக்கினை வெளியேற்ற முடியாத நிலை வந்தாலும் இதேப் பிரச்சனை தான்.

இதில் உங்கள் பராமரிப்புதான் முக்கியப் பங்காற்றுகிறது.

சிஸ்டிக் ஆக்னீ :

சிஸ்டிக் ஆக்னீ :

சிஸ்டிக் ஆக்னீ என்பது உங்கள் முகத்தில் தோன்றிடும் வளர்ச்சி குன்றிய நீர்க்கட்டிகளினால் வரும் ஒரு வகை ஆக்னீ. இதில் குறிப்பாக இந்த நீர்க்கட்டிகளில் முடி வளர்ந்திருக்கும்.

சிலருக்கு ஃபங்கல் தொற்றினால் கூட இப்படி ஏற்படலாம். நீங்கள் பயன்படுத்துகிற மேக்கப் சாதனங்கள் உங்களுக்கு அலர்ஜி ஏற்பட்டால் கூட அதன் அறிகுறியாக இது போன்ற நீர்கட்டிகள் தோன்றிடும்.

அறிகுறிகள் :

அறிகுறிகள் :

பெரும்பாலும் இந்த கட்டிகள் நீர் நிரம்பியதாக இருக்கும். சிலருக்கு வெள்ளை நிறத்திலும் அல்லது மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.இதைத் தவிர நிறத்தில் தெரிந்தால் குறிப்பாக பச்சை நிறத்திற்கு மாறுகிறது என்றால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம்.

பச்சை நிறத்தில் இருக்கிறது என்றால் அது மிகத் தீவிர நிலைமையில் இருக்கிறது என்று அர்த்தம்.

பிய்க்க வேண்டாம் :

பிய்க்க வேண்டாம் :

சிலர் சருமத்தில் இது போன்ற நீர்க்கட்டிகள் தோன்றினாலே உடனே பிய்த்துவிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அந்த நீர்க்கட்டிகளைச் சுற்றி அரிப்பு, வீக்கம் எரிச்சல் ஆகியவை ஏற்படும்.

இப்படி நீர்க்கட்டிகளை பிய்ப்பதால் அல்லது உடைப்பதால் அது பிரச்சனையின் தீவிரத்தை அதிகப்படுத்துமே தவிர குறைக்காது.

ஆண்ட்டி பயோட்டிக் :

ஆண்ட்டி பயோட்டிக் :

பெரும்பாலும் மருத்துவர்கள் இதற்கு ஆண்ட்டிபயோடிக் க்ரீம்கள் மற்றும் மாத்திரைகளை எழுதிக் கொடுப்பார்கள். அதனை தாரளமாக நீங்கள் பயன்படுத்தலாம்.

அதே போல சாலிசைலிக் அமிலம் நிறைந்த பொருட்களை பயன்படுத்தினால் மிகவும் நல்லது.

ரெட்டினாய்டு :

ரெட்டினாய்டு :

இதன் தீவிரம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மருத்துவர்கள் உங்களுக்கு ரெட்டினாய்டு ஊசி போடுவார்கள். இதுவும் சிறந்த பலனைத் தரும்.

மருத்துவர்களின் இந்த மருந்துகளை விட இது போன்ற நீர்க்கட்டிகளை வராமல் தவிர்க்க சிறந்த பராமரிப்பு என்பது மிகவும் அவசியம். இதைத் தாண்டி வீட்டு மருத்துவமாக என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேன் :

தேன் :

ஆரம்ப கட்டத்தில் மிகவும் வலியை ஏற்படுத்தும். அதற்கு சிறிது சுண்ணாம்புடன் தேன் குழைத்து கட்டி இருக்கும் இடத்தில தடவி வந்தால் கட்டி மறைந்து வலி குறையும்.

மஞ்சள் :

மஞ்சள் :

மஞ்சள் நிறைந்த ஆண்ட்டி செப்டிக் துகள்கள் கொண்டது.அதனை அரைத்து அப்படியே கட்டி இருக்கும் இடத்தில் பூசுங்கள். அதில் தண்ணீருக்கு பதிலாக பால் ஒரு ஸ்பூன் ஊற்றி பேஸ்ட்டாக்கலாம்.

சந்தனம் :

சந்தனம் :

பாக்டீரியா தொற்றினை போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. அதோடு இது குளிர்ச்சியைக் கொடுக்கும் என்பதால் நீங்கள் தாரளமாக பயன்படுத்தலாம்.

சந்தனத்தை அப்படியே குழைத்துப்பூசலாம். அல்லது அதில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Causes And Remedies Of Hair Cyst

Causes And Remedies Of Hair Cyst
Story first published: Friday, December 22, 2017, 15:25 [IST]