வழவழப்பான சருமம் பெற வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய இயற்கை மாய்ஸ்ரைசர்கள்!

Posted By: Bala latha
Subscribe to Boldsky

எந்தப் பருவ காலமாக இருந்தாலும் உங்கள் சருமம் ஏராளமான அழுத்தத்திற்கு உள்ளாகிறது. நம்மில் பெரும்பாலானோர் மழைக் காலங்களில் சருமத்திற்கு மாய்சரைஸர் தேவைப்படாது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் தேவைப்படுகிறது. மாய்சரைஸர் மிகவும் லேசானதாக இருப்பதால் இதை நாம் குளிர்காலங்களிலும் மற்றும் கோடைக்காலங்களிலும் பயன்படுத்துகிறோம். காற்று ஈரப்பதமாக இருந்தாலும் கூட நீங்கள் மாய்சரைஸரை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

சூரியகாந்தி எண்ணெய் முகத்தை பளிச்சென மாற்றுமா?

ஒரு நல்ல மாய்சரைஸர் என்பது சருமத்திற்கு ஈரப்பதம் அளிப்பது மட்டுமல்லாமல் மேலும் சருமத்தில் உள்ள நுண்ணிய கோடுகளையும் மற்றும் சுருக்கங்களையும் குறைக்கிறது. மேலும் இதற்கு சருமத்தின் மேற்பரப்பிலுள்ள ஒற்றை மின்னணு அயனிகளுக்கு எதிராக போராடும் திறனும் உள்ளது.

10 Best Homemade Organic Moisturizers For Healthy Skin

கடைகளில் வாங்கும் மாய்சரைஸர்கள் சிறந்தவை. ஆனால் அதிக விலையானவை. பெரிய தொகையை செலுத்தி வாங்கினாலும் அது உங்கள் சருமத்திற்கு பொருந்தாமலும் போகலாம். அதில் மிகப்பெரும் அளவில் பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் நமக்குள்ள ஒரே தேர்வு வீட்டிலேயே தயாரிக்கும் மாய்சரைஸர்களாகும். ஆமாம், இதை மொத்தமாக செய்து ப்ரிட்ஜில் சேமித்து வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இது 100% இயற்கையானது.

நீங்கள் ஆரோக்கியமான சருமத்தைப் பெற விரும்பினால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டிலேயே தயாரிக்கும் 10 மாய்சரைஸர்களின் செய்முறையை நீங்களே முயற்சித்துப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. லாவெண்டர் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்

1. லாவெண்டர் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்

1/2 கப் தேங்காய் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் விட்டமின் ஈ எண்ணெய் மற்றும் சில துளிகள் லாவெண்டர் நறுமண எண்ணையைக் கலக்கவும். இந்த மாய்சரைஸரில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அது சருமத்தில் வடுக்களைக் குறைப்பதோடு மேலும் தசைகளையும் தளர்த்துகிறது.

 2. பால் ஸ்ப்ரே :

2. பால் ஸ்ப்ரே :

ஒரு ஸ்பிரே பாட்டிலில் பாலை ஊற்றி, அதில் சில துளிகள் பன்னீரையும் சேர்த்துக் கொள்ளவும். புத்துணர்ச்சியான ஆரோக்கியமான சருமத்திற்காக ஒரு நாளுக்கு மூன்று முறை இந்த திரவத்தை முகத்தில் தெளிக்கவும்.

3. சோற்றுக் கற்றாழை மாய்சரைஸர்

3. சோற்றுக் கற்றாழை மாய்சரைஸர்

1 கப் சோற்றுக் கற்றாழை ஜெல், 1 டீஸ்பூன் ஈ விட்டமின் எண்ணெய் மற்றும் 2 மேசைக் கரண்டி பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். மேலும் அத்துடன் உங்களுக்கு விருப்பமான நறுமண எண்ணையையும் சில துளிகள் கலந்து கொள்ளலாம். ஆனால் பெரும்பாலானோர் அதன் வலுவான வாசனை காரணமாக அதைத் தவிர்க்கிறார்கள்.

4. ஷியா வெண்ணெய்

4. ஷியா வெண்ணெய்

ஷியா வெண்ணெயும் ஒரு சிறந்த மாய்சரைஸர் ஆகும். இது நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மை கொண்டது மேலும் ஒற்றை மின்னணு அயனிகளைச் சுத்தப்படுத்தும் மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது.

இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், நீங்கள் மிகச் சிறிதளவே இதை சருமத்தில் தடவினாலும் கூட பிசுபிசுப்பான எண்ணெய் வடியும் தோற்றத்தை தந்து விடும். அத்துடன் ஷியா வெண்ணெய் ஒரு சிறந்த ஒப்பனைக்கு முன் தடவும் அடித்தளமாகவும் பயன்படுகிறது.

 5. பேரிக்காய் பாலேடு (பியர் க்ரீம்)

5. பேரிக்காய் பாலேடு (பியர் க்ரீம்)

புத்தம் புதிதாக தயாரிக்கப்பட்ட பேரிக்காய் சாற்றையும் அடர்த்தியான பாலேட்டையும் சம அளவு எடுத்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். அதை மாய்சரைஸராக தினமும் பயன்படுத்துங்கள். எப்பொழுதும் ஃப்ரிட்ஜில் வைத்திருங்கள். வெளியில் வைத்தால் அடர்த்தியான பாலேடு ஊசிப் போன நாற்றமுண்டாக வாய்ப்புள்ளது.

 6. கிளிசரின் மற்றும் பன்னீர் மாய்சரஸைர்

6. கிளிசரின் மற்றும் பன்னீர் மாய்சரஸைர்

2 மேசைக் கரண்டி கிளிசரின் மற்றும் 1 டீஸ்பூன் பன்னீரையும் நன்கு கலந்துக் கொண்டு இந்தக் கலவையை மாய்சரைஸராகப் பயன்படுத்துங்கள். இது அனைத்து வகையான சருமங்களின் மீதும் நன்றாக செயல்புரிவதுடன் சருமத் துளைகளையும் சுருங்கச் செய்கிறது.

7. அவகடோ முகப் பூச்சு

7. அவகடோ முகப் பூச்சு

இந்த முகப் பூச்சு வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய மிகச் சிறந்த இயற்கையான மாய்சரைஸர் ஆகும். ஒரு முழு அவகடோ பழத்தின் சதைக் கூழுடன் 1 டீஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, மற்றும் அரை கப் கெட்டித் தயிர் ஆகியவற்றைக் கலந்துக் கொள்ளுங்கள். இதை உங்கள் முகத்தில் பூசுவதற்கு முன்பாக, 30 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்துப் பின்னர் பயன்படுத்தவும். சிறந்த பலன்களுக்கு வாரம் ஒரு முறை தடவவும்.

8. க்ரீன் டீ மாய்சரைஸர்

8. க்ரீன் டீ மாய்சரைஸர்

ஒரு கப் பச்சை தேயிலைத் தேநீர் தயாரித்து அது சூடு ஆறியதும், அதிலிருந்து 2 டீஸ்பூன் தேநீரை எடுத்து அத்துடன் 2 டீஸ்பூன் கிளிசரின் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளுங்கள். நீங்கள் மேக் அப் போடுவதற்கு முன்பாக இந்தக் கலவையை உங்கள் முகத்தில் தடவி அதை சருமம் உள்ளீர்த்துக் கொள்ளும் வரை விட்டு பின்பு கழுவி மேக் அப் போட்டால் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

 9. பாதாம் எண்ணெய் மாய்சரைஸர்

9. பாதாம் எண்ணெய் மாய்சரைஸர்

ஒரு சாஸ் பேனில் 1 டீஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லியை சூடுபடுத்துங்கள். அது உருகிய பின்பு, அதில் 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து கொள்ளுங்கள். இந்த மாய்சரைஸர் சருமத்தில் மிகச் சரியான அளவு எண்ணைப் பசை மற்றும் ஈரப்பதத்தின் சமநிலையை பராமரிக்கிறது.

10. ஆப்பிள் முகப்பூச்சு

10. ஆப்பிள் முகப்பூச்சு

ஒரு முழு ஆப்பிளை கூழாக்கி அதில் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு தினம் மாற்றி தினமும் உபயோகிக்கவும். இது எண்ணைப் பசை வகை சருமத்தின் மீது சிறப்பாக வேலை செய்வதுடன் அதிகப்படியான எண்ணையை உறிஞ்சி விடுகிறது மேலும் சருமத்திற்கு ஈரப்பதத்தைக் கூட்டுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Best Homemade Organic Moisturizers For Healthy Skin

10 Best Homemade Organic Moisturizers For Healthy Skin
Story first published: Tuesday, July 4, 2017, 7:00 [IST]