முகத்தில் இருக்கும் வெள்ளை புள்ளிகளை நீக்கும் 10 குறிப்புகள்!!

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

வெள்ளை புள்ளிகள் என்பது ஒரு சிறிய வடிவில் நெற்றி, தாடை, மூக்கு போன்ற இடங்களில் தோன்றி உங்கள் முகழையே கெடுத்து விடும். இந்த மாதிரியான புள்ளிகள் இறந்த செல்கள், நச்சு, தூசிகள் மற்றும் எண்ணெய் சீரம் போன்றவைகள் நமது சருமத் துளைகளை அடைப்பதால் உண்டாகிறது.

இந்த புள்ளிகள் பெரும்பாலும் நெற்றி, தாடை போன்ற பகுதிகளில் அதிகமாக தோன்றுகின்றனர். இந்த புள்ளிகள் தோன்றுவதால் உங்கள் முகழகை கெடுத்து விடும்.

இந்த மாதிரியான பகுதிகளில் தோன்றும் வெண்புள்ளிகளை சில பொருட்களை கொண்டு எளிதாக நீக்கலாம். இதை நீக்குவதற்கு நிறைய அழகு சாதனப் பொருட்களும் கடைகளில் உள்ளன.

10 Remedies To Get Rid Of Whiteheads From Chin And Forehead,

ஆனால் இந்த மாதிரியான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தும் போது அவை விலை அதிகமாகவும், வெளியில் அதை தடவி செல்ல முடியாத வண்ணமும் உள்ளது. எனவே தான் உங்களுக்காக தமிழ் போல்டு ஸ்கை இந்த வெண் புள்ளிகளிலிருந்து விடுபட சில பயனுள்ள டிப்ஸ்களை வழங்க உள்ளது. சரி வாங்க பார்க்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சந்தனம்

சந்தனம்

1/2 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடி உடன் 1 டீ ஸ்பூன் டிஸ்டில்டு வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

இந்த கலவையை உங்கள் மூக்கு, தாடை, நெற்றி போன்ற இடங்களில் 5 தேய்க்க வேண்டும்

பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

இதை தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்

டீ ட்ரி ஆயில்

டீ ட்ரி ஆயில்

3 சொட்டுகள் டீ ட்ரி ஆயிலுடன் 1/2 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும்

இதை உங்கள் சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்

5 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்

இதை வாரத்திற்கு என்ற முறையில் செய்து வந்தால் உங்கள் சரும வெள்ளை புள்ளிகள் காணாமல் போய் உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடன் ஜொலிக்கும்

ஆப்பிள் சிடார் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகர்

4 சொட்டுகள் ஆப்பிள் சிடார் வினிகரை 1 டீ ஸ்பூன் டிஸ்டில்டு வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

நெற்றியில், தாடையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த கலவையை தடவ வேண்டும்

5 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் கழுவ வேண்டும்

ஓட் மீல்

ஓட் மீல்

2 டேபிள் ஸ்பூன் சமைத்த ஓட்ஸூடன் 1 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

இந்த கலவையை தாடை மற்றும் நெற்றியில் தேய்க்க வேண்டும்

10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்

நல்ல மாற்றத்தை உங்கள் நெற்றி மற்றும் தாடை பகுதிகளில் காணலாம்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

1/2 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டீ ஸ்பூன் தண்ணீர் உடன் கலந்து கொள்ளவும்

பாதிப்படைந்த இடத்தில் இந்த கலவையை நன்றாக தேய்க்க வேண்டும்

பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

வாரத்திற்கு 2-3 தடவை இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

லெமன்

லெமன்

லெமனை நறுக்கி துண்டுகளாக்கி கொள்ளவும். அதன் மேல் 3-4 சொட்டுகள் தேன் சேர்த்து கலக்கவும்.

இப்பொழுது அதை நெற்றி, தாடை போன்ற பகுதிகளில் தடவவும்

பிறகு குளிர்ந்த நீரை கொண்டு கழுவ வேண்டும்

தினமும் இதை செய்து வந்தால் வெள்ளை புள்ளிகள் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

கடலை மாவு

கடலை மாவு

1/2 டீ ஸ்பூன் கடலை மாவு, 1 டீ ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்

பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த கலவையை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும்

பிறகு ஒரு ஈரமான துணியை கொண்டு துடைத்து எடுக்கவும்

இதை தினமும் செய்து வந்தால் நல்ல ஆச்சரியமூட்டும் மாற்றத்தை காணலாம்

களிமண்

களிமண்

1/2 டீ ஸ்பூன் பென்டோனைட் களிமண்ணுடன் 1 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

இந்த கலவையை புள்ளிகள் உள்ள இடத்தில் அப்ளே செய்யவும்

பிறகு குளிர்ந்த நீரை கொண்டு கழுவ வேண்டும்

இதை வாரத்திற்கு என்ற முறையில் செய்து வந்தால் எதிர்ப்பார்க்காத மாற்றத்தை காணலாம்

 ப்ரவுன் சுகர்

ப்ரவுன் சுகர்

1/2 டீ ஸ்பூன் ப்ரவுன் சுகரை 1டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து கலக்கவும்

இந்த கலவையை கொண்டு உங்கள் நெற்றி, தாடை போன்ற பகுதிகளில் நன்றாக தேய்க்க வேண்டும்

பிறகு 5 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்

இந்த முறையை வாரத்திற்கு 3-4 தடவை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்

விட்ச் ஹாசல் (ஒரு வகை காட்டுச் செடி)

விட்ச் ஹாசல் (ஒரு வகை காட்டுச் செடி)

ஒரு பெளலில் 1/2 டீ ஸ்பூன் விட்ச் ஹாசல் எடுத்து கொள்ளவும். அதனுடன் 2 டீ ஸ்பூன் டிஸ்டில்டு வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

ஒரு காட்டன் பஞ்சை இந்த கலவையில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்

பிறகு 5-10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்

வாரத்திற்கு என்ற முறையில் இதை செய்து வந்தால் வெள்ளை புள்ளிகள் பிரச்சினையிலிருந்து நல்ல மாற்றத்தை காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Remedies To Get Rid Of Whiteheads From Chin And Forehead

10 Remedies To Get Rid Of Whiteheads From Chin And Forehead
Story first published: Wednesday, December 6, 2017, 19:00 [IST]