பேக்கிங் சோடாவை கண்களைச் சுற்றி தடவுவதால் ஏற்படும் அற்புதங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பேக்கிங் சோடா சமையலில் மட்டும் பயன்படுவதில்லை, நம் அழகை பராமரிக்கவும் தான் பெரிதும் உதவியாக உள்ளது. குறிப்பாக இது பல அழகு பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. அதில் சருமத்தில் உள்ள உலர்ந்த தோல், பிம்பிள், செல்லுலைட் மற்றும் கருவளையங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

Woman Around The World Applying Baking Soda Under Their Eyes – The Reason Is Phenomenal!!!

தற்போது வேலைப்பளுவின் காரணமாக இரவில் நீண்ட நேரம் வேலை முடித்துவிட்டு, தாமதமாக தூங்கி, காலையில் வேகமாக எழுவதால், சரியான அளவு ஓய்வு கண்களுக்குக் கிடைக்காமல், கண்களைச் சுற்றி கருவளையங்கள் வந்து அழகைக் கெடுக்கிறது.

இந்த கருவளையங்களைப் போக்க எத்தனையோ வழிகள் இருக்கலாம். ஆனால் பேக்கிங் சோடா கொண்டு போக்க முயற்சித்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். மேலும் பேக்கிங் சோடா சருமத்தில் எந்த ஒரு பக்க விளைவையும் ஏற்படுத்தாது.

Image Courtesy: healthylifetricks

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்

சீமைச்சாமந்தி டீ - சிறிது

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

பேக்கிங் சோடாவை சீமைச்சாமந்தி டீ சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். பின் மாய்ஸ்சுரைசர் அல்லது தேங்காய் எண்ணெயை கண்களைச் சுற்றி தடவ வேண்டும்.

நன்மைகள்

நன்மைகள்

இந்த முறை கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்குவதோடு, கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளைப் போக்கி, கண்களின் அழகை அதிகரித்துக் காட்டும்.

குறிப்பு

குறிப்பு

இந்த செயலை தினமும் செய்ய வேண்டாம். வாரத்திற்கு 3 முறை இரவில் படுக்கும் முன் செய்யுங்கள். முக்கியமாக கண்களுக்கு போதிய ஓய்வைக் கொடுங்கள்.

வேறு சில குறிப்புகள்

வேறு சில குறிப்புகள்

* தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் 10 நிமிடம் வைத்து வர, கருவளையங்கள் நீங்கும்.

* டீ தயாரித்த பேக்கை கண்களின் மீது 10 நிமிடம் வைப்பதன் மூலமும் கருவளையங்கள் மறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Woman Around The World Applying Baking Soda Under Their Eyes – The Reason Is Phenomenal!!!

In this article we are going to see how baking soda will help you to eliminate the dark circles from our under eyes. Read on to know more...
Story first published: Tuesday, November 15, 2016, 13:45 [IST]
Subscribe Newsletter