இவைகள் இளமையிலேயே சருமத்தை சுருங்கச் செய்யும் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் சருமம் இளமையிலேயே சுருக்கத்துடன் காணப்படுகிறதா? இதற்கு புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் தான் காரணம் என்று நினைக்கிறீர்களா? அப்படியெனில் தவறு. நம் அனைவருக்கும் இளமையிலேயே சருமம் சுருங்குவதற்கான பொதுவான காரணங்கள் தெரியும்.

Surprising Causes Of Early Or Premature Skin Ageing

ஆனால் அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்போன்கள் அல்லது மின்சார பொருட்களைப் பயன்படுத்தினாலும், இளமையிலேயே சருமம் சுருஙககமடையும் என்பது தெரியுமா? இங்கு இளமையிலேயே சருமத்தை சுருங்கச் செய்யும் சில வியப்பூட்டும் காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெறத் தூண்டும். இப்படி உடலுழைப்பற்ற வாழ்க்கையை வாழ்ந்தால், டிஎன்ஏ-வில் மாற்றங்கள் ஏற்பட்டு, அது முதுமைத் தோற்றத்தை விரைவில் பெறச் செய்யும்.

சருமத்தை வெள்ளையாக்கும் பொருட்கள்

சருமத்தை வெள்ளையாக்கும் பொருட்கள்

சருமத்தின் கருமையைப் போக்கி வெள்ளையாக்கும் பொருட்களில் ஹைட்ரோகுயினேன் அல்லது பாதரசம் இருக்கும். இவை இளமையிலேயே சருமத்தை சுருங்கச் செய்யும். மேலும் இந்த பொருட்களை சருமத்திற்குப் பயன்படுத்திய பின் வெயிலில் செல்லும் போது, அது புறஊதாக் கதிர்களுடன் வினைப்புரிந்து, சருமத்தை வேகமாக சுருங்கச் செய்கின்றன.

மன அழுத்தம்

மன அழுத்தம்

ஒருவர் அதிகளவு மன அழுத்ததுடன் இருந்தால், அது சருமத்தை வேகமாக பாதித்து, முதுமைத் தோற்றத்தை விரைவில் பெறச் செய்யும்.

ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்களை நாள் முழுவதும் பயன்படுத்தினால், அதனாலும் விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும். எப்படியெனில் போனைப் பயன்படுத்தும் போது குனிந்து கொண்டே இருப்பதால், கழுத்துப் பகுதி நீண்ட நேரம் சுருங்கி, அதன் காரணமாக கழுத்தில் தசை தொங்க ஆரம்பிப்பதுடன், தசைகள் சுருங்க தொடங்கும்.

வெயிலில் சுற்றுவது

வெயிலில் சுற்றுவது

வெயிலில் அளவுக்கு அதிகமாக சுற்றினால், சூரியக்கதிர்கள் சரும செல்களைப் பாதித்து, வறட்சியடையச் செய்து, சருமத்தை சுருக்கமடையச் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Causes Of Early Or Premature Skin Ageing

Here we listed some surprising causes of early or premature skin ageing. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter