For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்தில் சரும பொலிவை மேம்படுத்த சில டிப்ஸ்...

குளிர்காலத்தில் சருமத்திற்கு ஒருசில பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், சரும பொலிவை மேம்படுத்த முடியும்.

|

குளிர்காலத்தில் வறட்சியால் சருமத்தில் ஏராளமான பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. குளிர்ச்சியான காற்று வீசுவதால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி, சருமத்தில் வெடிப்புக்கள் ஏற்பட்டு, சரும பொலிவு பாதிக்கப்படும்.

Skin Care Tips For A Glowing Skin This Winter!

ஆனால் குளிர்காலத்தில் சருமத்திற்கு ஒருசில பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், சரும பொலிவை மேம்படுத்த முடியும். இங்கு குளிர்காலத்தில் சரும பொலிவை மேம்படுத்த சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர்

குளிர்காலத்தில் தவறாமல் கை, கால்களுக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமத்தில் ஈரப்பசை தக்க வைக்கப்படும். அதற்காக மிகுந்த எண்ணெய் பசை கொண்ட மாய்சுரைசரைப் பயன்படுத்தாமல், ஜெல் அல்லது க்ரீம் வகை மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவது சிறந்தது.

எண்ணெய்

எண்ணெய்

குளிர்காலத்தில் தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். இதனால் சரும செல்களுக்கு ஊட்டம் அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட செல்களும் புத்துயிர் பெறும்.

வெதுவெதுப்பான நீர்

வெதுவெதுப்பான நீர்

குளிர்காலத்தில் பலரும் நல்ல சூடான நீரில் குளிக்கத் தான் விரும்புவோம். ஆனால் சுடுநீர் சரும வறட்சியை அதிகரிக்கும். எனவே வெதுவெதுப்பான நீரையே எப்போதும் பயன்படுத்துங்கள்.

ஸ்கரப்

ஸ்கரப்

குளிர்காலத்தில் தவறாமல் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் மென்மையாகவும் பொலிவுடனும் இருக்கும். அதிலும் ஓட்ஸ், காபி பவுடர் போன்றவற்றைக் கொண்டு ஸ்கரப் செய்வது மிகவும் நல்லது.

ஒமேகா 3 கொழுப்புக்கள்

ஒமேகா 3 கொழுப்புக்கள்

குளிர்காலத்தில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளான நட்ஸ், மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை வயிற்று உப்புசத்தையும், முகப்பருக்களையும் உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Skin Care Tips For A Glowing Skin This Winter!

Here are some skin care tips for a glowing skin this winter. Read on to know more...
Story first published: Thursday, November 10, 2016, 18:42 [IST]
Desktop Bottom Promotion