ஒரே வாரத்தில் பொலிவிழந்த சருமத்தை வெண்மையாக்க வேண்டுமா?

Written By: Hemalatha
Subscribe to Boldsky

எங்களுக்கு நடிகையைப் போல எல்லாம் நிறம் வேண்டாம். அட்லீஸ்ட் முகத்தில் இந்த கருமை எல்லாம் போய் அழகான தோற்றம் வந்தால் போதும் என்கிறீர்களா? கவலையை விடுங்கள்.

one simple face pack makes your skin fairer

இதற்காக கடையில் கிடைக்கும் க்ரீம்களை எல்லாம் போட்டு சருமத்தை பாழ்படுத்திக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இப்போது அவை நல்ல ரிசல்ட் கொடுத்தாலும் பின்னாளில் பக்க விளைவுகளைத் தரும்.

சீக்கிரம் முகம் தொய்வடைந்து வயதான தோற்றத்தை தந்துவிடும்.ஆகவே உணவும் சரி, அழகு சாதனங்களும் சரி,எப்போதும் இயற்கையையே நாடுங்கள்.

இந்த மாசுபட்ட சூழ்நிலை,குளிக்கும் உப்பு நீர்,வெயில்,புற ஊதாக் கதிர்களின் தாக்கம் என எல்லாம் சேர்ந்து நம் சருமத்தை பாதித்து கருமையடையச் செய்கின்றன. முகத்தை என்ன செய்தாலும் பொலிவேயில்லாமல், கருமையடைந்து இருக்கிறதா? அப்படியெனில் இந்த டிப்ஸ் உங்களுக்குதான்.செய்து பாருங்கள்.உங்கள் முகம் களையாகும் நேரம் வந்துவிட்டது.

நம் வீட்டு சமையலறையிலேயே நம்மை உலக அழகி ஆகும் பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன. சமைக்க முதலில் ஆரம்பிக்கும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயில் தொடங்கி , கடைசியில் போடும் கருவேப்பிலை வரை எல்லாமே நம்மை அழகாக்கக் கூடியவைதான். இன்று அப்படிப்பட்ட மூன்று பொருட்களைக் கொண்டு நம் நிறத்தை எப்படி மாற்றலாம் என பார்ப்போம்.

தேவையானவை:

மஞ்சள் -1 டேபிள் ஸ்பூன்

தக்காளி- 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு- 2 டீஸ்பூன்

one simple face pack makes your skin fairer

மஞ்சள்:

மஞ்சள் சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை அகற்றுகிறது. தினமும் பூசி வர தேகத்தில் ஒரு மினுமினுப்பை உண்டாக்குவதை காணலாம். அதிகப்படியான எண்ணெயை போக்குகிறது. சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும். ஆனால் கடையில் வாங்கும் மஞ்சள் பொடியை விட, நீங்களே மஞ்சள் கிழங்கு வாங்கி பொடித்து வைப்பது நல்லது. கடைகளில் வாங்கும் மஞ்சளில் கெமிக்கல் கலந்திருக்கும்.

தக்காளி:

தக்காளி கருமையைப் போக்கும்.சுருக்கங்களை நீக்கி, சருமத்தை மிருதுவாக்கும். எண்ணெய் சருமம் இருப்பவர்கள் தினமும் பூசி வந்தால் முகப்பருக்கள் வராமல் இருக்கும். நிறத்தைக் கூட்டும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை ஒரு இயற்கை ப்ளீச்சாகும். கழுத்துப் பகுதியில் ஏற்படும் விடாப்படியான கருமையைப் போக்கும்.

one simple face pack makes your skin fairer

உபயோகப்படுத்தும் முறை :

மஞ்சளுடன், தக்காளிசாறு மற்றும் எலுமிச்சைச் சாற்றினை நன்றாக கலக்கவும். இப்போது இந்த பேஸ்டினை முகத்தில் தடவி, காய்ந்தபின் குளிந்த நீரில் கழுவவும். தினமும் இரவில் செய்து வர , கருமை நீங்கி, நிறம் மெருகேறி , சருமம் அழகாகும். ஒரே வாரத்தில் வித்யாசம் காண்பீர்கள்.பிறகென்ன நீங்களும் உலக அழகிதான்.

English summary

one simple face pack makes your skin fairer

one simple face pack makes your skin fairer
Please Wait while comments are loading...
Subscribe Newsletter