Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
ஒரே மாதத்தில் பருக்கள், கருவளையங்கள் மற்றும் சுருக்கங்களைப் போக்கும் அற்புத ஃபேஸ் பேக்!
இங்கு ஒரே மாதத்தில் பருக்கள், கருவளையங்கள் மற்றும் சுருக்கங்களைப் போக்கும் அற்புத ஃபேஸ் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் முகத்தில் பருக்கள், கருவளையங்கள் மற்றும் சுருக்கங்கள் உள்ளதா? இதனால் உங்கள் அழகு பாழாகிக் கொண்டிருக்கிறதா? இதனைப் போக்குவதற்கு கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தியும் பலன் கிடைக்கவில்லையா?

இங்கு முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் ஓர் அற்புத ஃபேஸ் பேக் குறித்து கொடுக்கப்ப்டடுள்ளது. இந்த ஃபேஸ் பேக்கில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே வீட்டு சமையலறையில் இருப்பவை. சரி, இப்போது அந்த ஃபேஸ் பேக்கை எப்படி தயாரிப்பது என்றும், பயன்படுத்துவது என்றும் காண்போம்.

செய்முறை #1
முதலில் 1 1/2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2
பின்பு அதில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #3
பின் அதில் பால் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இப்போது ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது.

கிளின்சிங்
முதலில் முகத்தை பால் கொண்டு துடைத்து, 10 நிமிடம் கழித்து, நீரில் நனைத்த சுத்தமான பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை
பின்பு தயாரித்து வைத்துள்ள ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

எத்தனை முறை பயன்படுத்தலாம்?
இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1-2 முறை முகத்தில் போட்டால், முகத்தில் உள்ள கருவளையங்கள், பருக்கள், சுருக்கங்கள் போன்றவை நீங்கும்.



Click it and Unblock the Notifications
