இந்த 2 பொருட்கள் முகத்தில் உள்ள சுருக்கத்தை மாயமாய் மறையச் செய்யும் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தற்போது இயம் வயதிலேயே முகம், கை, கால்களில் உள்ள சருமம் சுருக்கமடைந்து, முதுமைத் தோற்றத்தைத் தருகிறது. ஆனால் இப்படி சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்க 2 பொருட்கள் நம் சமையலறையில் உள்ளது. அதனைக் கொண்டு ஃபேஸ் பேக் தயாரித்து, முகத்திற்குப் போட்டு வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கத்தைப் போக்கலாம்.

பொதுவாக வயது அதிகரிக்க அதிகரிக்க சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் இறுக்கத்தன்மை குறையும். இதற்கு போதிய சத்துக்கள் சரும செல்களுக்கு கிடைக்காமல் இருப்பது தான் காரணம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள 2 பொருட்கள் சருமத்திற்கு போதிய சத்துக்களை வழங்கி, விரைவில் சரும சுருக்கத்தைப் போக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை வெள்ளைக்கரு

முட்டை வெள்ளைக்கரு

சரும சுருக்கத்தைப் போக்கும் பொருட்களில் முதன்மையானது முட்டையின் வெள்ளைக் கரு. இதில் புரோட்டீன்கள் வளமான அளவில் உள்ளது. மேலும் இதில் சருமத்தை இறுக்கும் சக்தியும் உள்ளது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

சரும சுருக்கத்தை மறையச் செய்யும் மற்றொரு பொருள் வெள்ளரிக்காய். இந்த வெள்ளரிக்காய் சரும செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்யும். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் கே, சி போன்ற ப்ரீ-ராடிக்கல்களை அழிப்பவைகள் உள்ளன.

அதுமட்டுமின்றி, வெள்ளரிக்காயில் சிலிகா என்னும் முக்கியமான பொருளும் உள்ளது. இது இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பதோடு, சரும சுருக்கங்களைத் தடுக்கும்.

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

வெள்ளரிக்காயின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி,

மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக ஒரு பௌலில் போட்டு, அத்துடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

இந்த கலவையை சுருக்கமுள்ள முகம், கை, கால்களில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும செல்களுக்கு போதிய புரோட்டீன் கிடைத்து, புத்துணர்ச்சி அடைந்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, சரும சுருக்கம் மறைய ஆரம்பிக்கும்.

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம்?

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம்?

இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தினால், சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் வேகமாக மாயமாய் மறைவதைக் காணலாம்.

குறிப்பு

குறிப்பு

எந்த ஒரு பிரச்சனைக்கும் உடனடி தீர்வு காண நினைக்காதீர்கள். அதிலும் இயற்கை வழிகளைப் பின்பற்றினால், தாமதமாக பலன் கிடைத்தாலும், அவை நிரந்தரமானவை. எனவே சரும சுருக்கம் மறைய இந்த முறையைப் பின்பற்றும் போது பொறுமை என்பது மிகவும் அவசியம் என்பதை மறவாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

No More Wrinkles and Sagging Skin on Your Face – 2 Ingredients Only!

Wrinkles and sagging skin can be easily reduced with the help of two simple ingredients. The following natural recipe will help you tighten and rejuvenate the skin.
Story first published: Friday, August 12, 2016, 12:52 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter