For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக்கால சரும வறட்சியைப் போக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க !!

By Hemalatha
|

மழைக்காலம் வந்தாலே வறட்சிபோய் ஆறு குளம் எல்லாம் நிறையும். நினைக்கவே மகிழ்ச்சியானதாக இருக்கும். ஆனால் சருமத்தில் இந்த சமயங்களில்தான் வறட்சியே அரம்பிகும். முகம் இறுகி எரிச்சல் தரும். என்ன க்ரீம்கள் போட்டாலும் பயன் தராது.

மழைக்காலத்தில், வெளியே உள்ள சுற்றுப்புறத்தில் அதிக ஈரப்பதம் காரணமாக கிருமிகளின் தாக்கம் அதிகரிக்கும். இதனால் எளிதில் சரும அலர்ஜி ஏற்படும்.அதுவும் சென்ஸிடிவ் சருமம் உள்ளவரகளுக்கு இந்த பிரச்சனை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

Natural remedy to reduce dry skin

தினமும் குளிக்கும் முன் தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயை பூசி பின் குளித்தால், சருமம் வறண்டு போவதை குறைக்கலாம்.

அது போன்று வாரம் ஒரு முறை அவகாடோவை உபயோகித்தால் , அந்த வாரம் முழுவதும் சருமம் வறண்டு போகாமல் புத்துணர்வோடு இருக்கும்.

அவகாடோ சருமத்தில் உள்ள காரத்தன்மையை சமன் செய்கிறது. மேலும் ஈரபதத்தை அளித்து சருமத்தை மென்மையாக்கும்.

அதனுடன் தேங்காய் எண்ணெயும் கலப்பதால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை நீக்குகிறது. வறட்சியின் காரணமாக சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி மிருதுவாக்குகிறது. இந்த இரு பொருட்களைக் கொண்டு எப்படி சருமத்தை பாதுகாக்கலாம் என தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை :

அவகாடோ பழம் - 1
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

அவகாடோவின் சதைப்பகுதியை எடுத்து அதனை நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். அவற்றில் தேங்காய் எண்ணெயை நன்றாக குழைத்து முகத்தில் போடுங்கள்.

இதமாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால் போதும் . சருமத்தை பற்றி பின் கவலைப்படவே தேவையில்லை.

English summary

Natural remedy to reduce dry skin

Natural remedy to reduce dry skin
Desktop Bottom Promotion