ஒரே வாரத்தில் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்குமே வெள்ளையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக பலர் அழகு நிலையங்களுக்குச் சென்று பல சரும பராமரிப்பு செயல்களை மேற்கொள்வார்கள். இப்படி பையில் உள்ள ஒட்டுமொத்த பணத்தையும் செலவழிப்பதற்கு பதிலாக, நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சருமத்தை பராமரித்தால் போதும்.

Natural Bleaching Agents To Lighten Skin Tone!

பொதுவாக சருமத்தில் உள்ள கருமையைப் போக்க ப்ளீச்சிங் என்ற முறை அழகு நிலையங்களில் மேற்கொள்ளப்படும். கெமிக்கல் நிறைந்த பொருட்களைக் கொண்டு ப்ளீச்சிங் செய்வதற்கு பதிலாக, சமையலறையில் இருக்கும் ப்ளீச்சிங் தன்மை நிறைந்த பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும கருமை நீங்கி, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயிர்

தயிர்

தயிரில் லாக்டிக் அமிலம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது சருமத்தில் இருக்கும் கருமையைப் போக்கி, சருமத்திற்கு ஊட்டமளித்து, பிரகாசமான சருமத்தைப் பெற உதவும்.

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

முதலில் 1 டேபிள் ஸ்பூன் தயிருடன், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

பின்பு கலந்து வைத்துள்ள கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும்.

கடலை மாவு

கடலை மாவு

கடலை மாவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களை ஆழமாக சுத்தம் செய்து, புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்யும்.

செய்முறை:

செய்முறை:

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்துக் கழுவ வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி, சருமத்தில் உள்ள கருமையைப் போக்குவதோடு, தழும்புகளையும் மறையச் செய்யும்.

செய்முறை #1

செய்முறை #1

ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சர்க்கரையுடன், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

முகத்தை பால் கொண்டு துடைத்து எடுத்து, 10 நிமிடம் கழித்து, நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்கவும். பின் தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Bleaching Agents To Lighten Skin Tone!

Listed in this article are natural skin bleach agents. To lighten and brighten your skin tone, try these herbal ingredients.
Subscribe Newsletter