30 களில் உங்கள் சரும நிறத்தை அதிகரிக்க இதையெல்லாம் செஞ்சு பாருங்க !!

Written By:
Subscribe to Boldsky

வயது ஏற ஏற இளமை, அழகு இரண்டும் குறைந்து கொண்டே போகும். அதோடு சரும நிறமும் மங்கும். ஆனால் நீங்கள் எப்படி பராமரிக்கிறீர்களோ, அதற்கு தகுந்தாற்போல் இளமையாகவே உங்கள் சருமத்தை வைத்திருக்க முடியும்.

சிறு வயதிலேயே அதிக கெமிக்கல் கலந்த க்ரீம் உபயோகிப்பது, தரமற்ற அழகு சாதனங்களை உபயோகிப்பது, அதிக கொழுப்பு உணவுகளை உண்பது ஆகியவை வயதான பிறகு பாதிக்கும். இதனால் சருமம் களையிழந்து கருமையாகிவிடும்.

சில நிமிடங்கள் செலவழித்து இந்த குறிப்புகளை செய்து பாருங்கள். கைமேல் பலனளிக்கும். இழந்த இளமையை மீட்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கன்னத்தில் உள்ள கருமை திட்டுக்களை போக்க :

கன்னத்தில் உள்ள கருமை திட்டுக்களை போக்க :

வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோலை சேர்த்து அரைக்கவும்.

இதனுடன் கால் டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

முகத்திலுள்ள கருமை , மங்கு ஆகியவை போய் விடும். வாரம் ஒருமுறை இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சிவந்த நிறம் பெற :

சிவந்த நிறம் பெற :

சிலர் இயற்கையிலேயே நிறமாக இருந்தாலும் சுற்றுப்புறத்தால் கருமையடைந்து இருப்பார்கள் அவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.

தேவையானவை :

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1

உலர்ந்த திராட்சை பழம்-10

சிவந்த நிறம் பெற :

சிவந்த நிறம் பெற :

பேரிச்சம் பழம் மற்றும் உலர் திராட்சையை ஒரு நாள் முழுவதும் வெந்நீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.

20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வாரம் 3 முறை செய்து பாடுங்கள். முகம் மிளிரும்.

கோதுமை தவிடு மற்றும் சந்தனம்

கோதுமை தவிடு மற்றும் சந்தனம்

சந்தனம் அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல், மருத்துவ மருத்துவ குணங்கள் கொண்டது. தினமும் இரவில் சந்தனத்தை அரைத்து அதனுடன் கோதுமை தவிடு, துளசி சாறு கலந்து முகத்தில் போடுங்கள். காய்ந்ததும் கழுவ வேண்டும்.

இது முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சு மிருதுவாக வைக்கும். அதோடு , எரிச்சல், படை மற்றும்கரும்புள்ளிகளையும் நீக்க உதவுகின்றது.

சுருக்கங்கள் போக்க :

சுருக்கங்கள் போக்க :

தேவையானவை :

ஆப்பிள் மசித்தது - அரை ஸ்பூன்

பால் - அரை ஸ்பூன்

பார்லி பவுடர் - அரை ஸ்பூன்

ஆப்பிளை மசித்து அரை ஸ்பூன் எடுத்து அதில் மேலே சொன்ன மற்றவற்றை கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவவும். முகச் சுருக்கங்கள் போய் சருமம் மின்னும்.

 முகம் பளிச்சென்று இருக்க :

முகம் பளிச்சென்று இருக்க :

ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவலாம். இதனால் முகம் பிரகாசமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to care after 30s

How to improve skin tone after 30s,
Story first published: Friday, September 30, 2016, 10:30 [IST]
Subscribe Newsletter