இரண்டே வாரத்தில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க வேண்டுமா? அப்ப இத படிங்க...

Posted By:
Subscribe to Boldsky

முகத்தின் அழகைக் கெடுப்பதில் முகப்பரு மட்டுமின்றி, அது விட்டுச் செல்லும் தழும்புகளும் தான் காரணம். பருக்கள் மட்டும் சருமத்தில் தழும்புகளை ஏற்படுத்துவதில்லை, வெட்டுக் காயங்கள், சிறு கீறல்களும் விரைவில் நீங்கா தழும்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும் சருமத்தில் தழும்புகள் வந்தால், அது அவ்வளவு எளிதில் போகாது.

ஆகவே நாம் கடைகளில் விற்கப்படும் தழும்புகளை மறைக்கும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவோம். இருப்பினும் அதனால் எந்த ஒரு பலனும் கிடைத்திருக்காது. ஆனால் இயற்கை வழிகளைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் தழும்புகளை நீக்கலாம்.

மேலும் தற்போது பலரும் இயற்கை வழிகளையே நாடுவதால், தமிழ் போல்ட் ஸ்கை சரும அழகைக் கெடுக்கும் தழும்புகளைப் போக்க வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சில க்ரீம்களைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அந்த இயற்கை க்ரீம்களைப் பயன்படுத்தி வந்தால், சீக்கிரம் முகத்தில் உள்ள தழும்புகளை நீக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ரீம் 1

க்ரீம் 1

1/2 கப் ஷியா வெண்ணெய், 3 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும். பின் ஷியா வெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை வெட்டி அதிலுள்ள எண்ணெயை சேர்த்து கலந்து, பின் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி வைத்து, தினமும் இரவில் படுக்கும் போது இந்த க்ரீம்மை முகத்தில் தடவி வர, முகத்தில் உள்ள தழும்புகள் மறையும்.

க்ரீம் 2

க்ரீம் 2

1/4 கப் கொக்கோ வெண்ணெயை உருக்கி, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 4 துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து குளிர வைத்து, காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி வைத்து, பின் தினமும் இரவில் முகத்தில் தடவி வர, முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.

க்ரீம் 3

க்ரீம் 3

ஒரு சிறிய பௌலில் 4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 முட்டை வெள்ளைக்கரு மற்றும் 4 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி இரண்டு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் சருமத்தில் உள்ள தழும்புகள் சீக்கிரம் மறைந்துவிடும்.

க்ரீம் 4

க்ரீம் 4

2 டேபிள் ஸ்பூன் தேன் மெழுகை வெதுவெதுப்பாக சூடேற்றி உருக்கி இறக்கி, அதில் 3 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ், 10 துளிகள் லாவெண்டர் எண்ணெய், 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். பின் தினமும் இரவில் படுக்கும் போது அதனைக் கொண்டு மசாஜ் செய்து வர, தழும்புகள் போய்விடும்.

க்ரீம் 5

க்ரீம் 5

1 டேபிள் ஸ்பூன் கொக்கோ வெண்ணெயை உருக்கி இறக்கி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர், 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பூண்டு எண்ணெய் சேர்த்து கலந்து, டப்பாவில் ஊற்றி வைத்து, நன்கு குளிர்ந்ததும், அந்த க்ரீம்மை தினமும் இரவில் முகத்தில் தடவி வாருங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

க்ரீம் 6

க்ரீம் 6

1 டேபிள் ஸ்பூன் கொக்கோ வெண்ணெயை உருக்கி, அதில் 2 ஆஸ்பிரின் மாத்திரையை பொடி செய்து சேர்த்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 2 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெய் சேர்த்து கலந்து, தினமும் காலையில் இக்கலவையை தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

க்ரீம் 7

க்ரீம் 7

2 டேபிள் ஸ்பூன் தேன் மெழுகை வெதுவெதுப்பாக சூடேற்றி உருக்கி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் சீமைச்சாமந்தி டீ, 1 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டேபிள் ஸ்பூன் டீ-ட்ரீ ஆயில் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தினமும் இக்கலவையை காலை, இரவு என இரு வேளைகளிலும் தடவி மசாஜ் செய்து வர, முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் இதர பிரச்சனைகள் விரைவில் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Homemade Creams To Remove Face Marks In Just 2 Weeks

These home made creams remove all marks of acne, pimples, burns, cuts on your face. Use these creams for less than 2 weeks and get a clear skin. Read on to know more...
Story first published: Wednesday, January 6, 2016, 11:05 [IST]
Subscribe Newsletter