For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்ஸிடிவ் சருமத்தினை அழகாக்கும் வாழைப்பழ ஸ்க்ரப்

|

சென்ஸிடிவ் சருமம் இருப்பவர்களுக்கு எதுவும் சீக்கிரமாய் ஒத்துக்காது.வெயிலில் எளிதில் கருமையாகிவிடும்.பனியில் வறண்டு விடும்.எந்த க்ரீம் போட்டாலும்,ஏன் சன் ஸ்க்ரீன் லோஷன் கூட அலர்ஜியைத் தரும்.

அழகு சாதனங்களோ, அல்லது கடைகளில் விற்கும் ஸ்க்ரப், சோப் என எது போட்டாலும் அலர்ஜி தருகிறதே என கவலை கொள்கிறீர்களா? இந்த டிப்ஸ் உங்களுக்காகததான்.

Home made effective face scrub for sensitive skin

கடைகளில் வாங்கும் கெமிக்கல் கலந்த ஸ்கரப் சருமத்தை பதம் பார்க்குமே என பயந்து, பயந்து போட வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உங்கள் சருமத்தை பாதுகாப்பாக அழகு படுத்ததான் இந்த எளிய டிப்ஸ் .

சென்ஸிடிவ் சருமத்தில் இறந்த செல்கள் எளிதில் போகாது. அவை சருமத்தில் அரிப்பு, மேடுபள்ளம் ஆகியவற்றை உண்டு பண்ணி முக அழகை கெடுக்கும், நாள்தோறும் இறந்த செல்கள் அகன்றுவிட்டால், முகம் பொலிவாகவும் கிளீன் அண்ட் கிளியராக இருக்கும்.

வாழைப்பழம்+ஓட்ஸ் ஸ்க்ரப்:

உங்கள் வீட்டில் வாழைபழம், மற்றும் ஓட்ஸ் கிடைக்கக் கூடியதே. இவற்றைக் கொண்டு தயாரிக்கும் இந்த ஸ்க்ரப் இறந்த செல்களை போக்கி, சருமத்திற்கு உயிர் கொடுக்கிறது.

பாதிக்கப்பட சருமத்தை ரிப்பேர் செய்து, சருமத்திற்கு போஷாக்கு தருகிறது.இது சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது. மேலும் தொடர்ந்து இந்த ஸ்க்ரப் உபயோகிக்கும்போது, மற்ற அழகு சாதனங்களை உபயோகப்படுத்தும் போது அலர்ஜி ஏற்படாது.

தேவையானவை:

ஓட்ஸ்- 3 டேபிள் ஸ்பூன்
வாழைப்பழம் -1

வாழைப்பழத்தை மசித்து அதனுடன் ஓட்ஸ் கலக்கவும். இப்போது இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தேய்த்து, 10 நிமிடங்கள் முகம் முழுக்க ஸ்க்ரப் செய்யவும். பின்15 நிமிடங்கள் அப்படியே வையுங்கள்.

பிறகு குளிர்ந்த நீரினால் கழுவவும். வாரம் மூன்று முறை செய்தால், உங்கள் சருமத்தில் கருமை அகன்று, மினுமினுப்பு கூடும். நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளாது. முயன்று பாருங்கள். நீங்களே உணர்வீர்கள்.

மண்மணம் மாறாத மணப்பாறை முறுக்கு..!!

English summary

Home made effective face scrub for sensitive skin

Home made effective face scrub for sensitive skin
Desktop Bottom Promotion