For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் எண்ணெய் வழிந்து கருமையாக காட்சியளிப்பதைத் தடுக்க சில டிப்ஸ்....

|

முன்பெல்லாம் கோடைக்காலத்தில் மட்டும் தான் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால் இப்போதோ அனைத்து காலங்களிலும் வெயில் கொளுத்துவதால், சரும பிரச்சனைகளும் நீடித்து அழகு பாழாகிக் கொண்டே போகிறது. மேலும் எந்நேரமும் முகத்தில் எண்ணெய் வழிந்தவாறும் இருக்கிறது. இதனால் முகம் கருமையாக காட்சியளிக்கும்.

ஆண்களே! முகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க...

இதனைத் தடுக்கவே முடியாதா என்று பலர் கேட்கலாம். நிச்சயம் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதைத் தடுக்க ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. இங்கு அவற்றில் சக்தி வாய்ந்த மற்றும் விரைவில் பலன் தரக்கூடிய சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் அழகை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

மஞ்சளில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் உள்ளது. இது முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதைத் தடுக்கும். அதற்கு மஞ்சள் தூள் சிறிது எடுத்துக் கொண்டு, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைத்துக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை சிறிது எடுத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 5-10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பிம்பிள் நீங்குவதோடு, எண்ணெய் பசையும் கட்டுப்படுத்தப்படும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்யும். மேலும் சருமத்தின் pH அளவை தக்க வைக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை நீர் சேர்த்து கலந்து, காட்டன் பயன்படுத்தி முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவி, ஏதேனும் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.

வினிகர்

வினிகர்

வினிகர் மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், சருமத்தில் எண்ணெய் அதிகம் சுரப்பது தடுக்கப்படும்.

பப்பாளி

பப்பாளி

தினமும் பப்பாளியை சிறிது அரைத்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, முகத்தில் எண்ணெய் வழிவது தடுக்கப்பட்டு, முகம் பிரகாசமாக இருக்கும்.

சோள மாவு

சோள மாவு

சோள மாவும் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் குறைக்கும். அதற்கு சிறிது சோள மாவை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தக்காளி

தக்காளி

தக்காளியில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது சருமத்துளைகளை இறுக்கமடையச் செய்து, எண்ணெய் வழிவதைக் கட்டுப்படுத்தும். அதற்கு தக்காளியை அரைத்தோ அல்லது ஒரு துண்டை எடுத்தோ, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை உங்கள் வீட்டில் இருந்தால், அதை விட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது. தினமும் கற்றாழையை முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து கழுவி வர, எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்பட்டு, முகம் பொலிவோடு காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eight Best Natural Ingredients To Reduce Oily Skin

Here are the best natural ingredients to reduce oily skin and make sure you have amazing, hydrated skin that does not shine too much.
Desktop Bottom Promotion