வாரம் 3 முறை இத செஞ்சா, சரும சுருக்கமின்றி எப்போதும் இளமையுடன் இருக்கலாம் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய மோசமான சுற்றுச்சூழல், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால் விரைவிலேயே சருமத்தில் சுருக்கங்களும், முதுமைக் கோடுகளும் வந்துவிடுகின்றன. இதனால் 30 வயதிலேயே முதுமையானவர் போன்று காட்சியளிக்க நேரிடுகிறது.

Do This Every Week and Look Like You’re In Your 20s

நடிகர், நடிகைகள் தினமும் மேக்கப் போட்டும், பல வருடங்கள் சருமத்தில் சுருக்கமின்றி இளமையுடன் காட்சியளிப்பதற்கு, அவர்கள் மேற்கொள்ளும் போடாக்ஸ் சிகிச்சை தான் காரணம். இது சற்று விலை அதிகமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போடாக்ஸ்

போடாக்ஸ்

போடாக்ஸ் என்பது சரும சுருக்கங்களை விரைவில் போக்கி, உடனடி பலன் தரக்கூடியவை. ஆனால் போடாக்ஸில் போடுலினம் என்னும் டாக்ஸின் உள்ளது. இது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

நேச்சுரல் போடாக்ஸ் மாஸ்க்

நேச்சுரல் போடாக்ஸ் மாஸ்க்

சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்படி முதுமைத் தோற்றத்தைத் தடுக்க போடாக்ஸ் சிகிச்சையை மேற்கொள்வதற்கு பதிலாக, வீட்டிலேயே போடாக்ஸ் மாஸ்க்கைப் போட்டால், முதுமைத் தோற்றத்தைப் போக்கலாம். முக்கியமாக நேச்சுரல் போடாக்ஸ் மாஸ்க்கால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

கேரட் ஜூஸ் - 5 டேபிள் ஸ்பூன்

கொழுப்பு குறைவான மில்க் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* ஒரு பாத்திரத்தில் 100 மிலி நீரை ஊற்றி, அதில் சோள மாவு சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கலவை கெட்டியாகும் வர கிளறி விட்டு இறக்க வேண்டும்.

* பின் அதனை குளிர வைத்து, அத்துடன் கேரட் ஜூஸ், க்ரீம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்போது போடாக்ஸ் மாஸ்க் ரெடி!

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

போடாக்ஸ் மாஸ்க்கை முகத்திற்கு போடும் முன், முகத்தை நீரால் நன்கு சுத்தம் செய்துவிட்டு, பின் முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 3 முறை போட்டு வந்தால், சருமத்தில் சுருக்கங்கள் வருவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do This Every Week and Look Like You’re In Your 20s

The given homemade mask will make your skin firmer and smoother and will make you look more energized and fresh.
Story first published: Tuesday, November 22, 2016, 12:45 [IST]
Subscribe Newsletter