முகம் உடனடியாக ஜொலிக்க இந்த 5 வழிகளை யூஸ் பண்ணுங்க !!

Written By:
Subscribe to Boldsky

எல்லா சமயத்திலும் நாம் புத்துணர்ச்சியோடு இருக்க முடியாது. அதுவும் ஏதாவது விசேஷங்களுக்கு போகும்போதுதான் முகம் டல்லா இருக்கும்.

திடீரென பார்லருக்கும் செல்ல முடியாது. அதே சமயம் முகமும் பொலிவா இருக்கனும் என்ன செய்யலாம்.

Beauty hacks for instant glowing

உடனடியாக உங்கள் சருமத்திற்கு மெருகை தரும் பல இயற்கை அழகு பொருட்கள் இருக்கின்றன. அவற்றை எப்படி உபயோகப்படுத்தலாம் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 எண்ணெய் மற்றும் முகப்பரு இருப்பவர்கள் :

எண்ணெய் மற்றும் முகப்பரு இருப்பவர்கள் :

எண்ணெய் சருமம், முகப்பருக்கள் இருப்பவர்களுக்கு முகம் பளிச்சென்று இருப்பது கஷ்டம். அவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து முகம் கழுவினால் , அதிகப்படியான எண்ணெய் மற்றும் முகப்பருக்களின் தீவிரம் குறைந்து முகம் பளபளக்கும்.

வறண்ட சருமம் இருப்பவர்கள் :

வறண்ட சருமம் இருப்பவர்கள் :

வறண்ட சருமம் இருப்பவர்கள் , லிப் பாம் அல்லது வாசலின் போன்ற பெட்ரோலியம் ஜெல்லியை கன்னத்தில் மேல் நோக்கி தேய்த்தால் கன்னம் பார்ப்பதற்கு பளபளக்கும். சிவப்பாக மாறும்.

 கண்களுக்கு அடியில் சதைப்பை :

கண்களுக்கு அடியில் சதைப்பை :

கண்களுக்கு அடியில் சதைப்பை இருந்தாம் கண்கள் வீங்கி வயதான தோற்றத்தை தரும். இதனை தவிர்க்க விச் ஹாஜல் என்ற திரவம் அழகு சாதன கடையில் கிடைக்கும்.

அதனை வாங்கி எப்போதும் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு பஞ்சினால் எடுத்து கண்களை சுற்றிலும் வைத்தால் கண்களுக்கு அடியிலிருக்கும் நீர் வற்றி கண்கள் இளமையாக காண்பிக்கும்

மேக்கப் க்ரீமை எப்படி பயன்படுத்துவது :

மேக்கப் க்ரீமை எப்படி பயன்படுத்துவது :

பழைய முறையில் ஃபவுண்டேஷனை உபயோகிக்காதீர்கள். சிறிது ஃபவுண்டேஷனை எடுத்து அதில் தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் சில சொட்டு விட்டு முகத்தில் போடுங்கள். மேக்கப் போட்டது போல் தெரியாது. இயற்கையான பொலிவு கிடைக்கும்.

உருளைக் கிழங்கு சாறு :

உருளைக் கிழங்கு சாறு :

இதுவும் உடனடியாக பொலிவை தரக் கூடியது. உருளைக் கிழங்கில் சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பொலிவாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Beauty hacks for instant glowing

Use these Simple beauty hacks for instant glowing
Story first published: Tuesday, October 25, 2016, 17:35 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter