பற்கள் மஞ்சளா இருக்கேனு கவலையா? இதோ உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்!

Written By:
Subscribe to Boldsky

உங்களது பற்கள் தினசரி டீ , காபி, புகைப்பிடிப்பது, ஆன்டி பயோடிக் மாத்திரைகளை பயன்படுத்துவது போன்றவற்றால் மஞ்சளாகி விட்டதா? நீங்கள் இதற்காக கவலைப்படவோ அல்லது உடனடியாக பல் மருத்துவரிடம் செல்லவோ தேவையில்லை. நீங்கள் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள மிக எளிமையான டிப்ஸ்களை இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. பேக்கிங் சோடா

1. பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா மஞ்சள் கரைகளை போக்கி பற்களை பளிச்சிட வைக்க ஒரு சிறந்த தீர்வாகும். அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை நீங்கள் உங்களது டூத் பேஸ்டுடன் கலந்து நன்றாக பிரஸ் செய்யுங்கள். இதனை வாரத்தில் இரண்டு முறை செய்ய வேண்டும்.

நீங்கள் பேக்கிங் சோடாவை டூத் பேஸ்ட்டுடன் கலந்து பற்களில் அப்ளை செய்து கொள்ளுங்கள். பின்னர் கடைகளில் உணவு ஆறாமல் இருக்க பேக் செய்து தரும் அலுமினியத்தாளை கொண்டு பற்களை மூடிக்கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் கழித்து இதனை கழுவி விடுங்கள். நல்ல பலன் கிடைக்க இதனை வாரத்தில் இரண்டு முறை செய்யலாம்.

2. ஆரஞ்ச் தோல்

2. ஆரஞ்ச் தோல்

தினசரி நீங்கள் ஆரஞ்ச் தோலை கொண்டு உங்களது பற்களை சுத்தம் செய்து கொண்டு வந்தால், உங்களது பற்களில் மஞ்சள் கரை குறையும். தினமும் இரவு தூங்க போகும் முன்னர் நீங்கள் இதனை செய்யலாம். இதில் விட்டமின் சி மற்றும் கால்சியம் உள்ளது. இவை இரண்டும் சேர்ந்து இரவில் உங்களது பற்களை சுத்தம் செய்துவிடும். முழுமையான பலனை பெற இந்த முறையை சில வாரங்கள் செய்ய வேண்டும்.

3. ஸ்ட்ராபெர்ரி

3. ஸ்ட்ராபெர்ரி

விட்டமின் சி அதிகம் நிறைந்த மற்றொரு பழம் ஸ்ட்ராபெர்ரி தான். இதனை கொண்டு நீங்கள் உங்களது பற்களை வெள்ளையாக்கலாம். சில ஸ்ட்ராபெர்ரிகளை எடுத்து, அவற்றை பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனை கொண்டு பற்களை ஸ்கிரப் செய்ய வேண்டும். இதனை தினமும் இரண்டு முறை சில வாரங்களுக்கு செய்ய வேண்டும். பின்னர் பற்களை கழுவி விட்டு பிரஷ் செய்ய வேண்டும்.

4. எலுமிச்சை

4. எலுமிச்சை

எலுமிச்சையில் அதிகளவு ப்ளிச்சிங் தன்மை உள்ளது. இது உங்களது பற்களை வெண்மை மற்றும் பளபளப்பாக்குகிறது. நீங்கள் எலுமிச்சை சாறை கொண்டு அல்லது எலுமிச்சையின் தோலை கூட ஸ்க்ரப் செய்யலாம்.

5. உப்பு

5. உப்பு

உப்பு மிக நீண்ட காலமாக பற்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்களுக்கு மினரல் குறைபாடு இருந்தால், பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். உப்பு இந்த குறைபாடை நிவர்த்தி செய்ய உதவுகிறது. நீங்கள் இதனை கரி அல்லது பேக்கிங் சோடாவுடன் கலந்து டூத் பேஸ்ட்டிற்கு பதிலாக பற்பொடியாக பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how to whiten the teeth

how to whiten the teeth
Story first published: Thursday, September 21, 2017, 17:35 [IST]