For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 'ஜூஸ்'களை குடிச்சா போதுமாம்... உங்க முடி கொட்டாம...நீளமா பளபளன்னு வளருமாம் தெரியுமா?

நீங்கள் நீளமான, அழகான கூந்தலை பெற விரும்பினால், உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய சில சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறி மற்றும் பழச்சாறுகள் உள்ளன.

|

இன்றைய மக்களின் முக்கிய பிரச்சனையாக இருப்பது முடி உதிர்தல். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முடி உதிர்தல் பிரச்சனையை சந்திக்கிறோம். முடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கிய காரணங்களில் ஒன்று ஊட்டச்சத்து குறைபாடு என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஆதலால், உங்கள் தலைமுடியை பராமரிக்க வேண்டியது மிக அவசியம். சந்தையில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் இரசாயண பொருட்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இது உங்கள் முடியை மேலும் பாதிப்படையச் செய்யும்.

these-delicious-juices-can-promote-hair-growth-in-tamil

ஆதலால், முடி வளர்ச்சிக்கான சில இயற்கை வழிகளைப் பின்பற்றுங்கள். இவை உங்கள் முடி ஆரோக்கியத்தை பாதுகாக்கும். உங்கள் உணவில் நீங்கள் சேர்க்கக்கூடிய முடி வளர்ச்சிக்கான காய்கறி மற்றும் பழச் சாறுகள் பல உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரும்புச்சத்து நிறைந்த சாறுகள்

இரும்புச்சத்து நிறைந்த சாறுகள்

இந்தியாவில் பெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இரும்புச்சத்து குறைபாடு அல்லது இரத்த சோகை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பழச்சாறுகளில் சிறந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவற்றை பருகுவதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். இரும்புச் சத்து கூடுதலாக முடி வளர்ச்சியை மேம்படுத்தும். நீங்கள் நீளமான, அழகான கூந்தலை பெற விரும்பினால், உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய சில சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறி மற்றும் பழச்சாறுகள் உள்ளன.

கீரை

கீரை

இரும்புச்சத்து அதிகம் உள்ள பசலைக் கீரையை உங்கள் முடி பராமரிப்பு உணவில் சேர்க்கலாம். கீரையில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள் மற்றும் தாமிரம் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. சில கீரை இலைகளை ஒரு சாறுடன் சேர்ப்பதால், இரும்புச்சத்து நிறைந்த ஊட்டச்சத்தை பெறலாம். கீரையின் சுவை மட்டும் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் விரும்பும் பழத்துடன் கீரையை சேர்த்து அருந்தலாம்.

ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த சாறுகள்

ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த சாறுகள்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தைக் குறைக்கவும் உங்கள் உடலின் செல்களைப் பாதுகாக்கவும் உதவுகின்றன என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சில பழச்சாறுகளை நீங்கள் உட்கொள்ளலாம். இது உங்கள் முடி உதிர்வை குறைத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

நெல்லிக்காய் சாறு

நெல்லிக்காய் சாறு

உங்கள் உணவில் சேர்க்கும் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களில் ஒன்று வைட்டமின் சி ஆகும். நெல்லிக்காய் ஜூஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது செல் சேதத்தை குறைக்கும். இது புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முடி உதிர்வை திறம்பட கட்டுப்படுத்தும்.

வெள்ளரி சாறு

வெள்ளரி சாறு

வெள்ளரிக்காய் சாறு ஆக்ஸிஜனேற்ற நிறைந்தது மற்றும் முடியின் வேர்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. அடிப்படையில், இது உங்கள் தலைமுடியை மேற்பரப்பில் இருந்து நன்றாக உணர வைக்கிறது. முடி வளர்ச்சிக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த ஜூஸைப் பெற, நீங்கள் செய்ய வேண்டியது, வெள்ளரிக்காயின் சில துண்டுகளை தண்ணீர், புதினா இலைகள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் கலந்து அருந்தவும்.

வைட்டமின் ஏ நிறைந்த பழச்சாறுகள்

வைட்டமின் ஏ நிறைந்த பழச்சாறுகள்

முடி வளர்ச்சிக்கு உதவும் உங்கள் செல்கள் வளர வைட்டமின் ஏ முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியுமா? வைட்டமின் ஏ நிறைந்த காய்கறி மற்றும் பழச்சாறுகளை நீங்கள் அருந்த வேண்டும். ஊட்டச்சத்துக்கள் மற்றும் இனிப்பு சுவை நிறைந்த கேரட் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஏற்றது. நிபுணர்களின் கூற்றுப்படி, கேரட் சாற்றில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. இந்த வைட்டமின்கள் நுண்ணறைக்கு ஊட்டச்சத்தை வழங்கவும், முடி வளர்ச்சியைத் தூண்டவும் உதவுகின்றன.

வைட்டமின் பி12 மற்றும் பி9 நிறைந்த சாறுகள்

வைட்டமின் பி12 மற்றும் பி9 நிறைந்த சாறுகள்

வைட்டமின் பி12 மற்றும் பி9 ஆகிய இரண்டு வைட்டமின்களும் முடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை. காய்கறி மூலங்களை விட விலங்கு மூலங்களில் B12 பொதுவாகக் காணப்படுகிறது. இருப்பினும், B9 (ஃபோலேட்) பல காய்கறிகளில் உள்ளது. வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் (B9) நிறைந்த ஆரஞ்சு சாறு முடி வளர்ச்சிக்கு உதவும் பல நம்பமுடியாத ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. ஃபோலேட்டின் மற்றொரு சிறந்த ஆதாரம் ஸ்ட்ராபெர்ரி ஆகும். இதில் வைட்டமின் பி9 மட்டுமின்றி, வைட்டமின் சி, மாங்கனீஸ், பயோட்டின், ஒமேகா-3, பொட்டாசியம் போன்றவையும் நிறைந்துள்ளது.

புரதம்

புரதம்

இறுதியாக, உங்கள் தலைமுடிக்கு புரதம் மற்றொரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். முடியின் வேர்கள் பெரும்பாலும் புரதத்தால் ஆனது. போதுமான புரத உட்கொள்ளல் முடி வளர்ச்சியை மட்டுமல்ல, முடி அமைப்பு மற்றும் தரத்தையும் மேம்படுத்துகிறது. வீட்டில் தயாரிக்கப்பட்ட புரோட்டீன் ஷேக்குகள் புரதத்திற்கான ஒரு சுவாரஸ்யமான சேர்க்கை ஆகும். சுவையான புரோட்டீன் ஷேக்குகளை நீங்கள் அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

முடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில், ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு காரணம். தைராய்டு பிரச்சினைகள், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற மருத்துவ நிலைமைகள் போன்ற பிற சாத்தியமான காரணங்களை நிராகரிக்க உங்கள் தோல் மருத்துவரை அணுகவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These delicious juices can promote hair growth in tamil

Here we are talking about these delicious juices can promote hair growth in tamil.
Story first published: Friday, November 4, 2022, 19:09 [IST]
Desktop Bottom Promotion