Just In
- 1 hr ago
சூட்டைக் கிளப்பும் பிகினியில் தாறுமாறு போஸ்களைக் கொடுத்து சூடேற்றிய வேதிகா!
- 1 hr ago
எந்தெந்த ராசிக்காரர்கள் காதலில் ஏமாற்றுவார்கள் தெரியுமா? ஏன் ஏமாற்றுவார்கள் தெரியுமா?
- 3 hrs ago
சன்னா பட்டர் மசாலா
- 3 hrs ago
விநாயகருக்கான சதுர்த்தி தினம் பற்றியும் சடங்குகள் மற்றும் இந்த நாளின் முக்கியத்துவம் என்ன தெரியமா?
Don't Miss
- Finance
தங்க நகை வாங்க இது சரியான நேரம்.. சவரனுக்கு ரூ.712 சரிவு.. சவரன் கிட்டதட்ட ரூ.34,000.. !
- News
100 நாட்களை எட்டும் டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. விரைவில் 12-ம் கட்ட பேச்சுவார்த்தை
- Movies
குட்டி தல ஆத்விக்குக்கு 6 வயசாகிடுச்சு.. போஸ்டர், டிரெண்டிங் என தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!
- Automobiles
பாதுகாப்பான காரை வாங்க சபதமெடுக்கும் இந்தியர்கள்... ராக்கெட் வேகத்தில் முன்னேறும் டாடா மோட்டார்ஸ்...
- Sports
விராட் கோலி இத மட்டும் செஞ்சா போதும்.யாரும் செய்யாத மெகா சாதனையை படைக்கலாம்..எகிறும் எதிர்பார்ப்பு
- Education
வேலை, வேலை, வேலை!! தஞ்சாவூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்களுக்கு வழுக்கை வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...
தற்போது ஆண்களிடையே வழுக்கைத் தலை ஒரு ஃபேஷனாகிவிட்டது. வழுக்கைத் தலையுடன் இருப்பது ஒரு அழகு என்றாலும் அந்த வழுக்கைத் தலை ஒருவருக்கு முதுமைத் தோற்றத்தைத் தருவதால், இளமையிலேயே அது வராமல் இருப்பது தான் நல்லது. தற்போதைய மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதுடன், தலைமுடி உதிர்வு பிரச்சனையாலும் மிகுதியாக அவஸ்தைப்பட வேண்டியுள்ளது.
தலைமுடி உதிர ஆரம்பிக்கும் ஆரம்ப காலத்திலேயே, முடியின் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்து, முடிக்கு வலு சேர்க்கும் வழிகளை மேற்கொண்டு வந்தால், நிச்சயம் வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம். தற்போது தலைமுடி உதிர்வைத் தடுக்கும் பல எண்ணெய்கள் மார்கெட்டுகளில் கிடைக்கின்றன. ஆனால் அந்த எண்ணெய்களை மட்டும் பயன்படுத்தினால், தலைமுடி உதிர்வது குறைந்துவிடாது. தலைமுடியின் ஆரோக்கியம் மற்றும் வலிமை மேம்பட, அதற்கான சில உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.
MOST READ: தைராய்டு பிரச்சனைக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

ஒருவருக்கு எந்த காரணத்தினால் வழுக்கை ஏற்படக்கூடும்?
வழுக்கைத் தலையானது பரம்பரை, ஹார்மோன் மாற்றங்கள், மருத்துவ நிலைகள் மற்றும் வயதாவதன் ஒரு சாதாரண பகுதியாகவும் இருக்கலாம். யாருக்கு வேண்டுமானாலும் தலையில் வழுக்கை ஏற்படலாம். ஆனால் இது ஆண்களில் அதிகம் காணப்படுகிறது. வழுக்கை என்பது ஸ்கால்ப்பில் இருந்து அளவுக்கு அதிகமாக ஏற்படும் முடி உதிர்வைக் குறிக்கிறது.

வழுக்கைத் தலையில் முடி மீண்டும் வளருமா?
வழுக்கைத் தலையில் முடி வளர்வது என்பது ஒருவரது மயிர்காலைப் பொறுத்தது. மயிர்கால்கள் முழுமையாக மூடப்பட்டிருந்தாலோ அல்லது மறைந்துவிட்டாலோ அல்லது ஒரு ஆண்டில் ஒரு புதிய முடியைக் கூட உருவாக்கவில்லை என்றாலோ, அந்த மாதிரியான வழுக்கைத் தலையில் முடி வளர வாய்ப்பில்லை. ஒருவேளை மயிர்கால்கள் இன்னும் திறந்திருந்தால், மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது. இம்மாதிரியான தருணத்தில் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும் அல்லது முடிக்கு ஊட்டமளிக்கும் உணவுகளை உட்கொண்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
இப்போது தலைமுடி அதிகம் உதிர்வதைத் தடுக்கும் மற்றும் வழுக்கை ஏற்படாமல் தடுக்கும் சில உணவுகளைக் காண்போம்.

முட்டை மற்றும் பால் பொருட்கள்
முட்டை மற்றும் பால் பொருட்கள் வழுக்கையால் அவஸ்தைப்படும் மக்களுக்கு முடியின் வளர்ச்சியைத் தூண்டும் ஒரு சிறப்பான உணவுப் பொருள். ஏனெனில் இவற்றில் பயோடின் என்னும் வைட்டமின் பி7 உள்ளது. முட்டையுடன் பால், தயிர், சீஸ் மற்றும் பிற பால் பொருட்களை எடுக்கும் போது, பயோடினுடன் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான புரோட்டீன், வைட்டமின் பி12, இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும் கிடைக்கும்.

ஓட்ஸ்
பலரும் ஓட்ஸ் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு சிறப்பான காலை உணவாக மட்டுமே அறிவர். ஆனால் ஓட்ஸ் வழுக்கைத் தலையை எதிர்க்க உதவும் ஒரு அற்புதமான உணவுப் பொருள். இதில் உள்ள நார்ச்சத்து, ஜிங்க், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களுடன், பி வைட்டமின்களும் அதிகம் உள்ளதால், இது தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவுகிறது. அதோடு ஓட்ஸில் மயிர்கால்களை வலுவாக்கும் பீட்டா க்ளுக்கன் உள்ளது.

பாதாம்
பாதாமில் பயோடின் மற்றும் மக்னீசியம் போன்ற ஆரோக்கியமான தலைமுடியின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் அதிகளவில் உள்ளன. தினமும் பாதாமை சாப்பிட்டு வந்தால், தலைமுடி அடர்த்தியாக வளர்வதோடு, ஆரோக்கியமாகவும், வேகமாகவும் வளர்ச்சி பெறும்.

வால்நட்ஸ்
வால்நட்ஸில் இருக்கும் ஒமேகா கொழுப்பு அமிலங்களுடன் வைட்டமின் பி7 என்னும் பயோடின், தலைமுடி உதிர்வதைத் தடுக்க உதவுவதோடு, ஏற்கனவே இருக்கும் மயிர்கால்களை வலுவாக்கி, அவ்விடத்தில் மீண்டும் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஆகவே தலைமுடி உதிர்வால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் ஒரு கையளவு வால்நட்ஸ் சாப்பிடுவது நல்லது.

ஸ்ட்ராபெர்ரி
பெர்ரி வகை பழமான ஸ்ட்ராபெர்ரியில் சிலிகா என்னும் கனிமச்சத்து அதிகளவில் உள்ளது. இச்சத்து முடியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. அதோடு ஸ்ட்ராபெர்ரியில் எலாஜிக் அமிலம் உள்ளது. இது முடி உதிர்வது மற்றும் முடி மெலிவதைத் தடுக்கக்கூடியது. எனவே உங்களுக்கு எலிவால் போன்ற முடி இருந்தாலோ அல்லது முடி அதிகமாக கொட்டினாலோ, ஸ்ட்ராபெர்ரி பழங்களை வாங்கி சாப்பிடுங்கள்.