அடர்த்தியாக முடி வளர வெங்காயத்தை உபயோகிக்கும் சிறந்த வழிகள்!!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

வெங்காயம் சேர்த்தாலே உணவிற்கு ஒரு தனி சுவை கிடைக்கும். வெங்காயம் சமையலுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவது அல்ல. முடி வளர்ச்சிக்கும் இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இப்போது வெங்காயத்தை பயன்படுத்தி தலை முடியை எப்படி பாதுகாக்கலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தலை முடிக்கு வெங்காயத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் :

வெங்காயத்திற்கு நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது. இதை தலை முடியில் பயன்படுத்துவதால் முடி கொட்டுவது தடுக்க படுகிறது.

Tips to Use Onion juice for hair growth

முடியின் வேர்கால்களுக்கு ஊட்டச்சத்து கொடுத்து தலை முடி இழந்த ஊட்டச்சத்தை திரும்ப உதவுகிறது. சல்பர் அதிகமாக இருப்பதால் முடி உடைவதையும், அடர்த்தி குறைவதையும் தடுக்கிறது.

பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை இருப்பதால்,உச்சந் தலையில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்த்து போராடும்.

இதனால் முடி கொட்டுவது குறையும்,இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் இளநரையை வர விடாமல் செய்யும்.

வெங்காயத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது முடிக்கு பளபளப்பு அதிகமாகிறது.

தலை மற்றும் கழுத்து பகுதியில் புற்று நோய் வரும் அபாயத்தை குறைக்கிறது.பேன் தொல்லை குறைகிறது.

வெங்காய சாறு பயன்படுத்துவதால் முடியில் அடர்த்தி அதிகரிக்கும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், முடி வளர்ச்சிக்கு ஏதுவாகிறது. பொடுகு தொல்லைக்கு சிறந்த ஒரு தீர்வு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெங்காய சாறை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

வெங்காய சாறை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

 • வெங்காயத்தை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
 • மிக்ஸி யில் நன்றாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
 • ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
 • வெங்காய திப்பிகள் முடிகளில் சேராதவாறு வெறும் சாறை மட்டும் பயன்படுத்தவும்.
வெங்காய சாற்றை முடியில் தடவும் முறை:

வெங்காய சாற்றை முடியில் தடவும் முறை:

 • வெங்காய சாறை எடுத்து தலையில் நன்றாக தடவவும்.
 • விரல்களால் சூழல் வடிவத்தில் நன்றாக மசாஜ் செய்யவும்.
 • ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.
 • வெங்காய வாசனை முடியில் இல்லாதவாறு வாசனையுள்ள ஷாம்பூவால் தலை நன்றாக அலசவும்.
 • வாரம் 1 முறை 2 மாதங்களுக்கு இந்த முறையை பின்பற்றி நல்ல பலன் பெறலாம்.
 • வெங்காய சாறுடன் வேறு சில பொருட்களை சேர்த்தும் வலுவான மற்றும் பொலிவான கூந்தலை பெறலாம்.

வெங்காய சாறுடன் தேன் :

வெங்காய சாறுடன் தேன் :

 • கால் கப் வெங்காய சாற்றை எடுத்துக் கொள்ளவும்.
 • ஒரு டேபிள் ஸ்பூன் தேனை இந்த சாறுடன் கலக்கவும்.
 • இந்த சாறை எடுத்து தலையிலும் வேர்கால்களிலும் நன்றாக தடவவும்.
 • 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசவும்.
வெங்காய சாறுடன் ஆலிவ் எண்ணெய்:

வெங்காய சாறுடன் ஆலிவ் எண்ணெய்:

ஆலிவ் எண்ணெய் தலை முடி மசாஜிற்கு ஏற்ற ஒரு பொருளாகும். இந்த எண்ணெய் தலைக்குள் ஊடுருவி தலை முடிக்கு ஊட்டச்சத்தை கொடுக்கிறது. பொடுகை போக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

 • 3 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றை எடுத்துக் கொள்ளவும்.
 • ஒன்றரை டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை இதனுடன் கலக்கவும்.
 • தலையில் நன்றாக இந்த சாறை தடவி மசாஜ் செய்யவும்.
 • 2 மணி நேரத்திற்கு பிறகு கூந்தலை அலசவும்.
 • இதனை தொடர்ந்து செய்வதால் வலிமையான மற்றும் பொடுகு இல்லாத கூந்தலை பெறலாம்.

வெங்காய சாறுடன் கறிவேப்பிலை :

வெங்காய சாறுடன் கறிவேப்பிலை :

முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலையின் பயன் மிகவும் அதிகம். முடி வளர்ச்சியை அதிகரித்து , வலுவான மற்றும் கருமையான முடியை தருகிறது.

 • ஒரு கை கறிவேப்பிலையை நன்றாக அரைத்து கொள்ளவும்.
 • இரன்டு டேபிள் ஸ்பூன் வெங்காய சாறுடன் இந்த பேஸ்டை கலக்கவும்.
 • இந்த பேஸ்டை தலையில் தடவி 1மணி நேரம் ஊற வைக்கவும்.
 • பிறகு ஷாம்பூவால் தலையை அலசவும்.

வெங்காய சாற்றை பயன்படுத்தும்போது தவிர்க்க வேண்டியவை:

வெங்காய சாற்றை பயன்படுத்தும்போது தவிர்க்க வேண்டியவை:

வெங்காய சாறை தயாரித்த பிறகு நன்றாக வடிகட்டி பயன்படுத்தவும். வெங்காய துகள்கள் தலையில் ஒட்டி கொண்டால் எடுப்பது சிரமமாக இருக்கும்.

 • வெங்காய சாறு பயன்படுத்தும்போது மென்மையான ஷாம்புக்களை பயன்படுத்த வேண்டும்.
 • ஆப்பிள் சீடர் வினிகர், பூண்டு போன்றவற்றையும் இதனுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
 • வெங்காயத்தின் வாசனை பிடிக்காதவர்கள் இதனுடன் வேறு எண்ணெய்யை சேர்த்து பயன்படுத்தலாம்.
 • முதலில் ஒரு சிறிய அளவு பயன்படுத்தி ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை அறிந்து கொண்டு தொடர்ந்து பயன்படுத்துவது நல்லது.
 • வெங்காயத்தின் நன்மைகளை தெரிந்து கொண்டீர்களா! வெங்காய விலை குறையும் போது இந்த முயற்சிகளை மேற்கொண்டு வளமான கூந்தலை உருவாக்கிடுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips to Use Onion juice for hair growth

Tips to Use Onion juice for hair growth
Story first published: Friday, September 8, 2017, 15:14 [IST]
Subscribe Newsletter