தலையிலிருக்கும் பேனை ஒழிக்க சில எளிய வீட்டுக் குறிப்புகள்

Posted By:
Subscribe to Boldsky

தலையை சரியாக பராமரிக்கவில்லையென்றால் பல பிரச்சனைகள் வருவதுடன் இன்னொன்றும் சேர்ந்தே வரும். பேன். வேகமாக வளரக்கூடியது அத்துடன் ஒரே நேரத்தில் பல முட்டைகளையிட்டு பல்கி பெருகிடும். இதனால் பெரிய பிரச்சனைகள் ஏதும் இல்லையென்றாலும் பல நேரங்களில் சங்கடங்களை ஏற்படுத்திடும்.

பேன் மற்றும் ஈறு என்று சொல்லப்படும் பேன் முட்டைகளை அழிக்க சில குறிப்புகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு :

பூண்டு :

பூண்டு வாசம் பேன்களுக்கு ஒத்துக் கொள்ளாது. அவை பேன்களை அழித்திடும். பத்து பூண்டுகளை எடுத்து தோல் சீவி மைய அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு டீ ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து தலைவதும் தேய்த்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைக்குளித்துவிடலாம்.

பாதாம் :

பாதாம் :

பாதாம் பருப்பை ஊற வைத்து அதனை அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் ஹேர் பேக்காக போட்டு ஒரு மணி நேரம் வரை ஊற வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவிடலாம். வாரம் ஒரு முறை இப்படிச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உப்பு :

உப்பு :

பேனை ஒழிக்க சரியான தேர்வு இந்த உப்பு, உப்பு மற்றும் அத்துடன் வினிகர் கலந்து கொள்ளுங்கள். அதனை தலை முழுவதும் அப்ளை செய்து ஷவர் கேப் கொண்டு க்ளோஸ் செய்திடுங்கள். சுமார் இரண்டு மணி நேரங்கள் கழித்து ஷாம்பு போட்டு தலைக்குளித்துவிடலாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை இப்படிச் செய்யலாம்.

வேப்பிலை :

வேப்பிலை :

வேப்பிலையின் கசப்பு பேனை ஒழித்திடும். வேப்பிலையை அரைத்து தலையில் ஹேர் பேக்காக போட்டு அரை மணி நேரம் ஊறிய பின்னர் தலைக்கு குளிக்கலாம். அல்லது வேப்ப எண்ணெயும் தேங்காய் எண்ணெயும் சமமாக கலந்து தலையில் தேய்த்து தலைக்கு குளிக்கலாம்.

வெந்தயம் :

வெந்தயம் :

இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்திடுங்கள் இரண்டு மணி நேரம் கழித்து அதனை அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் நான்கு ஸ்பூன் தேங்காய் பால் கலந்து தலைக்கு தடவிடுங்கள். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் தலைக்கு குளித்திடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: beauty hair care tips home remedies
English summary

Tips To Get Rid Of Head Lice And Nits

Home Remedies to get rid of head lice and nit.
Story first published: Tuesday, July 25, 2017, 18:00 [IST]