அவசரமா வெளிய போறீங்களா? டை இல்லாம முடியை எப்படி கருப்பாக்கலாம்?

Written By:
Subscribe to Boldsky

நீங்கள் அழகாக இருக்க விரும்புகிறீர்கள் என்றால் முதலில் உங்களது கூந்தலை பராமரிக்க வேண்டியது அவசியம். முக அழகிற்கு மட்டுமில்லாமல் கூந்தல் பராமரிப்பிற்கும் சற்று நேரம் ஒதுக்குங்கள்.

ஹேர் டையை தூக்கி போடுங்க! நரை முடியை போக்க 11 சூப்பர் டிப்ஸ்!

உங்களது முடி நரைமுடியாக இருந்தாலோ அல்லது உங்களது கூந்தலை நீங்கள் கலர் செய்ய விரும்பினாலோ நீங்கள் சந்தைகளில் கிடைக்கும் ஹேர் டைகளை தான் உபயோகிப்பீர்கள்.

How to color your gray hair without hair dye

சந்தைகளில் கிடைக்கும் ஹேர் டையில் அமோனியா உள்ளது. இது உங்களது முடியை சேதப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. எனவே இந்த பகுதியில் உங்களுக்காக சில இயற்கையான ஹேர்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. காபி

1. காபி

காபி உங்களது முடியை அடந்த கருப்பு நிறமாக மாற்ற உதவுகிறது. நீங்கள் டார்க் கலர் உடைகளை அணிந்து வெளியே செல்லும் போது உங்களது முடி அடர்ந்த கருமை நிறத்தில் இருந்தால் பார்க்க நன்றாக இருக்கும்.

இதற்கு காபியை திக்காக காய்ச்சிக்கொள்ள வேண்டும், இது ஆறிய பின்னர் இரண்டு ஸ்பூன் காபி தூள் போட்டு தலையில் பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து முடியை அலசிவிட வேண்டும். கண்டிஷ்ணருக்கு பதிலாக வினிகர் உபயோகித்தால் நிறம் நீண்ட நாட்கள் அப்படியே இருக்கும்.

2. டீ பேக்

2. டீ பேக்

உங்களுக்கு மிக அடர்ந்த நிறம் வேண்டாம். இயற்கையான கருமை நிறம் போதும் என்றால், நீங்கள் டீ பேக்கை டிரை செய்யலாம். இது நரை முடிகளை மறைக்க உதவுகிறது. இதற்கு 2-3 டீ பேக்குகளையோ அல்லது அதற்கு சமமான டீத்தூளையோ எடுத்து, நீரில் நன்றாக கொதிக்க விட வேண்டும்.

இதனை கண்டிஸ்னருடனோ அல்லது தனியாகவோ தலையில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு கழுவினால், உங்களுக்கு தேவையான கருமை நிறம் கிடைத்துவிடும்.

3. வண்ண முடிகள்

3. வண்ண முடிகள்

நீங்கள் பல வண்ணங்களில் முடி இருக்க வேண்டும் என விரும்பினால், அதற்காக ஹேர் கலரிங் செய்து முடியின் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையாகவே நிறங்களை பெறலாம். அது எப்படி என்று காணலாம்.

4. சிவப்பு நிறம்:

4. சிவப்பு நிறம்:

நீங்கள் முடியில் சிவப்பு நிறல் நிழல் தெரிய வேண்டும் என்றால் அதற்கு சாமந்தி, ரோஜா இதள் மற்றும் செம்பருத்தி இதள்கள் பயன்படும். இவற்றை சூடான நீரில் காய்ச்சினால் அதன் நிறம் வெளிப்படும்.

இந்த நீரை முடிக்கு ஸ்பேரே அல்லது அப்ளை செய்து முடிந்தால் சூரிய ஒளியில் சிறிது நேரம் உலர்த்தினால், இயற்கையான நிறம் கிடைக்கும். இதனை அடிக்கடி கூட செய்யலாம், இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

5. பொன் நிற முடி

5. பொன் நிற முடி

ரோஸ் மேரியை குறைந்த வெப்பத்தில் காய்ச்சி, ஆற வைத்து பின் தலைக்கு தடவினால் நல்ல பொன் நிற நிழல் கிடைக்கும். இதனை ஐந்து முறை செய்தால் மட்டுமே வித்தியாசம் கண்களுக்கு தெரியும். எனவே அவசரம் வேண்டாம்.

6. பீட்ரூட் மற்றும் கேரட்

6. பீட்ரூட் மற்றும் கேரட்

சிவந்த நிறத்தை பெற பீட்ரூட் மற்றும் கேரட்டை ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ கூட பயன்படுத்தலாம். பீட்ரூட் அடர்ந்த சிவப்பு நிறத்தை வெளிப்படுத்தும். கேரட் ஆரஞ்ச் போன்ற சிவப்பு நிறத்தை வெளிப்படுத்தும்.

7. பயன்படுத்தும் முறை

7. பயன்படுத்தும் முறை

இதன் சாறை கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலச வேண்டும். இதனை அப்ளை செய்யும் போது முடி மிருதுவாக தோன்ற தேங்காய் எண்ணெய்யை இதனுடன் கலந்து முடிக்கு தடவிக்கொள்ளலாம். கூந்தலை அலசிய பின்னர் ஆப்பிள் சீடர் வினிகரை கண்டிஸ்னராக பயன்படுத்தினால் நிறம் நீடித்திருக்கும்.

8. மருதாணி

8. மருதாணி

மருதாணி காலம் காலமாக முடி, கை, கால், நகங்களுக்கு நிறமூட்டவும், குளிர்ச்சியை கொடுக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சிவப்பு - ஆரஞ்ச் நிறத்தை முடிக்கு கொடுக்கும்.

9. பயன்படுத்தும் முறை

9. பயன்படுத்தும் முறை

இரண்டு டேபிள் ஸ்பூன் மருதாணி பௌடர், எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகரை ஒன்றாக கலந்து தலைமுடிக்கு அப்ளை செய்து 2 முதல் 6 மணி நேரம் இருந்தால் முடிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

10. பளப்பளப்பான முடி

10. பளப்பளப்பான முடி

பளபளப்பான முடியை பெற நீங்கள் எலுமிச்சை சாறை முடிக்கு ஸ்பேரே செய்தால் போதும். சூரிய ஒளியில் வைத்து உலர்த்தினால் முடிக்கு நல்ல நிறமும், பளபளப்பும் கிடைப்பது உறுதி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to color your gray hair without hair dye

How to color your gray hair without hair dye