தலை அரிப்பை போக்க இயற்கை முறையில் கைவைத்தியங்கள்!!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

அலுவலகத்தில் அல்லது பொது இடத்தில் நமது மரியாதையை அதிகப்படுத்தும் விதத்தில் நாம் செய்யும் செயல்கள் நம்மீது உள்ள அபிப்ராயத்தை உயர்த்தி காட்டும். நம்மை மீறி நாம் செய்யும் சில சிறு செயல்கள் கூட நம்மீதான அபிப்ராயத்தை குறைத்து நமது மரியாதையை குலைத்து விடும். இதில் தலை அரிப்பு, அடிக்கடி தலையை சொரிவது, நகம் கடிப்பது போன்றவை சில உதாரணங்களாகும்.

Home remedies to get rid of Itchy scalp using home ingredients

இந்த தலை அரிப்பிற்கு காரணம் வறண்ட முடி அல்லது தலையில் பொடுகு உண்டாவது போன்றவை. பொடுகு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், முடியில் வறட்சி, மோசமான கூந்தல் பராமரிப்பு,பூஞ்சை மற்றும் கிருமி தொற்று, மோசமான உணவு முறை, அதீத பதட்டம் போன்றவையாகும்.

பணத்தை அதிகம் செலவழிக்காமல் தலை அரிப்பை போக்குவதற்கான வழிகள் பல உள்ளன. அவற்றை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டீ ட்ரீ எண்ணெய் :

டீ ட்ரீ எண்ணெய் :

தலையில் ஏற்படும் அரிப்பை தடுக்க டீ ட்ரீ எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாகும். இதில் இருக்கும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை, வீக்கத்தை குறைக்கும் தன்மை மற்றும் கிருமிகளை அழிக்கும் தன்மை , அரிப்பை போக்க பெரிதும் உதவுகிறது.

பேபி ஷாம்பூவுடன் 10 முதல் 20 துளி டீ ட்ரீ எண்ணெய்யை சேர்த்து, தொடர்ந்து தலையை அலச பயன்படுத்தவும். இதன்மூலம் விரைவில் உங்கள் தலை அரிப்பு குறையும்.

மற்றொரு முறை, தாவர எண்ணெய்யுடன் சில துளி டீ ட்ரீ எண்ணெய்யை சேர்த்து தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். இதனை தொடர்ந்து செய்து வரும்போது, தலை அரிப்பு ஒரு சில வாரங்களில் மறைந்து, தலை முடி புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

 எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு:

எலுமிச்சையில் ஆன்டிசெப்டிக் தன்மை அதிகமாக உள்ளது. அதனால் தலையில் ஏற்படும் அரிப்பை போக்க இது பெரிதும் உதவுகிறது. பொடுகு தொந்தரவை குறைக்கவும் எலுமிச்சை அதிகமாக பயன்படுகிறது.

புதிதாக பிழிந்த எலுமிச்சை சாறை எடுத்து உச்சந்தலையில் தடவவும். 5 நிமிடங்கள் கழித்து தலைக்கு ஷாம்பு போட்டு அலசவும். பொடுகு இல்லாமல் அரிப்பு ஏற்படும்போது, எலுமிச்சை சாறை நீரில் கலந்து தலையை அலசலாம்.

மற்றொரு முறை, எலுமிச்சை சாறுடன் தயிர் சேர்த்து தலையில் மென்மையாக தடவவும். 5 நிமிடங்கள் ஊறியவுடன், மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசவும். தலைமுடியில் வறட்சி மற்றும் அரிப்பு குறையும் வரை இதனை தொடர்ந்து செய்யவும்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடா:

வீட்டில் எப்போதும் இருக்கும் ஒரு பொருள் பேக்கிங் சோடா. இதனை கொண்டு தலையில் உள்ள பூஞ்சை தொற்றை போக்கி அரிப்பை போக்கலாம்.

பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து தலையில் தடவவும். சிறந்த தீர்வுக்கு, பேக்கிங் சோடாவை தலையில் தடவுவதற்கு முன், சிறிது ஆலிவ் எண்ணெய்யை தலை முழுதும் தடவி கொள்ளவும்.

பேக்கிங் சோடா பேஸ்டை தடவி 10-15 நிமிடங்கள் கழித்து தலையை நீரால் அலசவும்.

 ஆப்பிள் சீடர் வினிகர்:

ஆப்பிள் சீடர் வினிகர்:

தலை அரிப்பை உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் ஆப்பிள் சீடர் வினிகருக்கு உண்டு. உச்சந்தலையின் pH அளவை பராமரிப்பதில் ஆப்பிள் சீடர் வினிகர் நல்ல பலனை தருகிறது.மேலும், தலை முடி வறட்சி மற்றும் அரிப்பை கட்டுப்படுத்துகிறது.

தலை முடியை நன்றாக தண்ணீர் கொண்டு அலசவும். பின்பு நன்றாக காய வைக்கவும்.

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவு எடுத்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும் . இதனை உங்கள் தலை முடியில் தெளித்து சில நிமிடங்கள் ஊற விடவும். பின்பு மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்யலாம்.

கற்றாழை:

கற்றாழை:

கற்றாழை ஜெல்லிற்கு ஈரப்பதத்தை கொடுக்கும் தன்மை உண்டு. தலையில் இருக்கும் அதிகமான வறட்சியை குறைத்து ஈரப்பதத்தை தந்து அரிப்பை கட்டுப்படுத்துகிறது. வீட்டில் கற்றாழை ஜெல்லை தயாரிக்க முடியாவிடில், கடையில் வாங்கி பயன்படுத்தலாம்.

கற்றாழை ஜெல்லை விரல்களில் தடவி, தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் நன்றாக ஊறிய பின், மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.

 தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் தலையை ஈரப்பதத்தோடு வைப்பதால் அரிப்பை கட்டுப்படுத்துகிறது.

தலையில் தேங்காய் எண்ணெய்யை தடவவும். 1 மணி நேரம் கழித்து நறுமண பொருள் சேர்க்காத ஷாம்பு கொண்டு தலையை அலசவும். வாரத்திற்கு 3 முறை இந்த எளிய முறையை பின்பற்றலாம்.

தேங்காய் எண்ணியே சூடாக்கி, அதனை தலையில் தடவி பிறகு ஷாம்பூவால் தலையை அலசலாம்.

 வாழைப்பழம்:

வாழைப்பழம்:

வாழைப்பழம் சாப்பிடுவதற்கு மட்டும் அல்ல , தலை அரிப்பை குணப்படுத்தவும் பயன்படுகிறது . இது தலை முடியை கண்டிஷன் செய்கிறது. வாழைப்பழத்தின் புத்துணர்ச்சியூட்டும் தன்மை மற்றும் ஈரப்பதத்தை உண்டாக்கும் தன்மை பொடுகை போக்கி, வீக்கத்தை குறைத்து, அரிப்பை தடுக்கிறது.

கனிந்த அவகேடோவுடன், 2 வாழை பழத்தை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலையில் தடவவும். ½ மணி நேரம் கழித்து நீரால் தலையை அலசவும்

நல்லெண்ணெய்:

நல்லெண்ணெய்:

வறண்ட தலையில் அரிப்பை போக உதவும் மிக முக்கியமான ஒரு பொருள் நல்லெண்ணெய் . இது தலை முடிக்கு போஷாக்கை தருகிறது. உச்சந்தலையை குளிர்வித்து, அரிப்பை குறைக்கிறது. இரவு நேரத்தில் இதனை செய்வது நல்ல பலனை தரும்.

நல்லெண்ணெய்யை சூடாக்கவும். எண்ணெய்யை எடுத்து, தலையில் மென்மையாக மசாஜ் செய்யவும். ஒரு துண்டை வெந்நீரில் நனைத்து தலையில் சுற்றி கட்டவும். 10 நிமிடங்கள் அப்படியே இருக்கவும். 10 நிமிடம் கழித்து துண்டை எடுத்து விட்டு, இரவு முழுதும் அப்படியே விடவும். மறுநாள் காலை, மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசவும். தலையில் அரிப்பு போகும்வரை இதனை தொடர்ந்து செய்து வரவும்.

 விட்ச் ஹேசல்:

விட்ச் ஹேசல்:

இது இயற்கையான முறையில் தலை அரிப்பை குணப்படுத்துகிறது. ஹேர் கலரிங் செய்வதால் உண்டாகும் அரிப்பை இந்த மூலிகை குணப்படுத்துகிறது.

1 பங்கு விட்ச் ஹசெல் மூலிகையுடன் 2 பங்கு தண்ணீர் சேர்க்கவும்.

இந்த கலவையை உங்கள் தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.

15 நிமிடங்கள் கழித்து தலையை அலசவும்.

ஜோஜோபா எண்ணெய்:

ஜோஜோபா எண்ணெய்:

தலை முடியின் வறட்சியை குறைக்கவும் அரிப்பை தடுக்கவும், ஜோஜோபா எண்ணெய் ஒரு மாய்ஸ்ச்சரைசேர் போல் பயன்படுகிறது. நமது சருமத்தில் உற்பத்தியாகும் செபம் என்ற ஒரு வகை எண்ணெய்யை போன்ற கூறுகள் உள்ளதால் இந்த எண்ணெய், சருமத்திற்கு நல்ல புத்துணர்ச்சியை தருகிறது,

இரவு உறங்க செல்லும் முன் சிறிதளவு ஜோஜோபா எண்ணெய்யை எடுத்து உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். இரவு முழுதும் அப்படியே விடவும். மறுநாள் காலையில் மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்யலாம்.

மேலே கூறிய முறைகளை தொடர்ந்து பயன்படுத்தும்போது விரைவில் நல்ல தீர்வுகள் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home remedies to get rid of Itchy scalp using home ingredients

Home remedies for Itchy scalp
Story first published: Monday, October 23, 2017, 9:00 [IST]
Subscribe Newsletter