Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா?
நரை முடியை தடுக்க கடுகு எண்ணெயை எப்படி உபயோகிப் படுத்த வேண்டும்?
கடுகு எண்ணெயில் அதிக விட்டமின் ஈ உள்ளது. முதுமையை தள்ளிப்போடும். சுருக்கங்கள் வராது.. கூந்தலுக்கு சிறந்த ஊக்கமளிக்கும் டானிக். நரை முடியை தடுத்து, அடர்த்தியான கூந்தல் வளர்ச்சியை தூண்டும்.
கடுகு எண்ணெய் வட இந்தியாவில் பிரசித்தமானது. நாம் நல்லெண்ணெய் சமையலுக்கும் தேய்த்து குளிப்பதற்கும் உபயோகிப்பது போல் அவர்கள் கடுகு எண்ணெயை உபயோகிப்பார்கள்.
மிகவும் குளிர் அங்கு இருப்பதால் சூட்டை தரும் வகையில் கடுகு எண்ணெயை அவர்கள் உபயோகிப்பார்கள். நாம் குளிர்ச்சியை வேண்டுமென நல்லெண்ணெயை உபயோகிக்கிறோம்.

கடுகு எண்ணெய் சருமத்திற்கும் கூந்தலுக்கும் உபயோகித்தால் அழகு இன்னும் மெருகேறும். கூந்தல் பட்டுப்போன்று இருக்கும். எப்படி உபயோகிக்கலாம் எனப் பார்க்கலாம்.

நரை முடியை தடுக்க :
20 ப்ளஸ்களில் வாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது. கடுகு எண்ணெயை லேசாக சூடு படுத்தி தலையில் மசாஜ் செய்து பாருங்கள். நரை முடி மறையும்.

கூந்தல் வளரச்சிக்கு :
இது சிறந்த முறையில் ஸ்கால்ப்பிற்கு ஊட்டம் அளிக்கிறது.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்துப் பாருங்கள். கூந்தல் அடர்த்தியாக வளரும். வட இந்தியர்களில் கூந்தல் அழகிற்கு இதுதான் காரணம்.

வறண்ட கூந்தலுக்கு :
கூந்தல் எப்போது வறண்டு ஜீவனில்லாமல் இருக்கிறதா? இது சிறந்த சாய்ஸ். இது அளிக்கும் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். எளிதில் வறட்சி அடையாது.

பொடுகு நீங்க :
உங்கள் ஸ்கால்ப் பொடுகு அரிப்பினால் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்து குளித்துப் பாருங்கள். ஆரோக்கியமான ஸ்கால்ப் கிடைக்கும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

அடர்த்தியான கூந்தல் கிடைக்க :
மெலிதான் கூந்தல் இருந்தால் நீங்கல் வாரம் மூன்று நாட்கள் கடுகு என்னெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளியுங்கள். அட்ர்த்தி அதிகரிக்கும்.

நுனிபிளவு அதிக ஏற்படுகிறதா?
கூந்தலில் நுனி அடிக்கடி பிளவு உண்டானால் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதனை தடுக்க கடுகு எண்னெயால் மசாஜ் செய்து பாருங்கள். குணம் பெற்று நுனி ஆரோக்கியமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
