பட்டுப்போன்ற மென்மையான முடி வேண்டுமா? அப்ப கற்றாழை ஹேர் பேக் போடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

அழகை அதிகரித்துக் காட்டும் விஷயங்களில் ஒன்று தான் முடி. இந்த முடி சிலருக்கு வறட்சியாகவும், நார் போன்றும் இருக்கும். இதனால் பலரும் தங்கள் முடியை நினைத்து கஷ்டப்படுவார்கள். மேலும் தங்கள் முடியை மென்மையாக்க கடைகளில் விற்கப்படும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவார்கள்.

இருப்பினும் அந்த கண்டிஷனர்களின் சக்தி வெறும் இரண்டு நாளைக்கு தான். பிறகு என்ன மீண்டும் நார் போன்று மாறிவிடும். கெமிக்கல் பொருட்களைப் பயன்படுத்தினால், முடி தற்காலிகமாகத் தான் பலனைத் தருமே தவிர, நிரந்தர தீர்வைத் தராது. அதுமட்டுமின்றி, அதனால் பல்வேறு பக்க விளைவுகளான முடி உதிர்வது, ஸ்கால்ப் வறட்சியால் பொடுகுத் தொல்லை, முடி வெடிப்பு போன்றவற்றையும் சந்திக்கக்கூடும்.

சரி, அதற்கு வேறு என்ன தான் தீர்வு என்று கேட்கிறீர்களா? ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கும் கற்றாழை ஜெல்லைக் கொண்டு முடிக்கு ஹேர் மாஸ்க் போட்டு வந்தால், முடி பட்டுப்போன்று மென்மையாக இருக்கும். சரி, இப்போது பட்டுப்போன்ற முடியைப் பெற உதவும் சில கற்றாழை ஹேர் பேக்குகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் பால்

கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் பால்

குளிக்கும் முன் கற்றாழை ஜெல்லை, தேங்காய் பாலுடன் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, முடியும் பட்டுப்போன்று இருக்கும்.

கற்றாழை ஷாம்பு

கற்றாழை ஷாம்பு

கற்றாழை ஜெல்லைக் கொண்டு ஷாம்பு தயாரித்தும் பயன்படுத்தலாம். அதற்கு கற்றாழை ஜெல்லில், ஆப்பிள் சீடர் வினிர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி மென்மையாக மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் அலசுங்கள். இதனால் முடியின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

கற்றாழை கண்டிஷனர்

கற்றாழை கண்டிஷனர்

கற்றாழை ஜெல்லை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, முடியில் தடவி நன்கு 5 நிமிடம் ஊற வைத்து பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், முடி பொலிவோடு இருப்பதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

வெறும் கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து பின் குளித்தால், மயிர்கால்கள் வலிமையடைவதோடு, முடியும் நன்கு நீளமாக வளர்ச்சியடையும்.

கற்றாழை, முட்டை, நெல்லிக்காய்

கற்றாழை, முட்டை, நெல்லிக்காய்

கற்றாழை ஜெல்லுடன், முட்டை, தயிர் மற்றும் நெல்லிக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து, முடியில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முடி ஆரோக்கியமாகவும், வறட்சியடையாமலும் இருக்கும்.

சிறந்த ஹேர் ஸ்டைலிங் பொருள்

சிறந்த ஹேர் ஸ்டைலிங் பொருள்

தலைக்கு குளித்த பின் முடியில் சிக்கல் அதிகம் இருக்கும். அப்போது சீப்பால் சீவினால், முடி உடைவதோடு, அதிகமாக உதிரவும் ஆரம்பிக்கும். எனவே கற்றாழை ஜெல்லை, நீரில் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, முடி உலர்ந்த பின் லேசாக முடியில் ஸ்ப்ரே செய்து கொண்டால், சிக்கல் நீங்கி, முடி மென்மையாகிவிடும்.

குறிப்பு

குறிப்பு

கற்றாழை ஜெல் ஹேர் பேக்குகளை தலைக்கு எண்ணெய் தடவிய நிலையில் தான் போட வேண்டும். அதுவும் வாரம் 2 முறை இந்த ஹேர் பேக்குகளைப் போட வேண்டும். மேலும் இந்த கற்றாழை ஹேர் பேக்குகளை தலையில் நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டாம். ஹேர் பேக் கலவையை தயார் செய்த உடனேயே பயன்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hair Care Tips With Aloe Vera Recipes

Here are the hair care tips from aloe vera recipes. These are the best aloe vera recipes for hair care. Take a look at the hair care recipes by aloe vera.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter