வழுக்கை தலையிலும் அழகாக தெரிய சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

தற்போது பெரும்பாலான ஆண்களுக்கு இளமையிலேயே வழுக்கைத் தலை ஏற்படுகிறது. இதனால் பலரால் வெளியே தலைக்காட்ட முடியாமல் திணறுகின்றனர். அக்காலத்தில் தலை வழுக்கையானால், தலைக்கு விக் வைத்துக் கொள்வார்கள். ஆனால் தற்போது பலர் இதனை ஸ்டைலாக்கிக் கொண்டு, தனித்து அழகாக காட்சியளிக்கின்றனர்.

உங்களுக்கு வழுக்கை தலையா? எப்படி ஸ்டைலாக வைத்துக் கொள்வது என்று தெரியவில்லையா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளது. அதனைப் பின்பற்றினால் நிச்சயம் நீங்கள் வித்தியாசமாகவும், அழகான ஆண் மகனாகவும் காட்சியளிக்கலாம்.

வழுக்கை தலையாவதை தடுக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

How To Make Bald Beautiful

உங்கள் தலையில் ஒரு பக்கம் மட்டும் வழுக்கையாக உள்ளதா? பொதுவாக வழுக்கை வந்தால், சிலருக்கு தன்னம்பிக்கை குறையும். ஆனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்க வேண்டுமானால் மீதமுள்ள முடியையும் நீக்கி, தலையை மொட்டை அடித்துக் கொள்ளுங்கள். இப்படி எப்போதுமே மொட்டைத் தலையுடன் இருந்தால், அதுவே உங்கள் ஸ்டைலாகிவிடும். அதிலும் உங்கள் தலை நீள்வட்ட வடிவில் இருந்தால், அது இன்னும் அழகாக இருக்கும். முக்கியமாக வழுக்கையை மறைக்க தலைக்கு மொட்டை அடிக்க ஆரம்பித்தால், மறக்காமல் வாரம் ஒருமுறை தலையை ஷேவ் செய்ய வேண்டும்.

How To Make Bald Beautiful

தலைக்கு மொட்டை அடித்தால், தலை அழகாக மின்னும் படி வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு கடைகளில் விற்கப்படும் மாய்ஸ்சுரைசிங் ஜெல்லை தினமும் தடவி வாருங்கள்.

How To Make Bald Beautiful

வழுக்கை தலை வந்து மொட்டை அடித்துக் கொண்டால் ஒரு நன்மை உள்ளது. அது என்னவென்றால், எந்த ஒரு ஆடையை அணிந்தாலும் அட்டகாசமாக இருக்கும்.

How To Make Bald Beautiful

உங்களுக்கு டாட்டூ பிடிக்குமானால், டாட்டூ கூட போட்டுக் கொள்ளலாம். ஆனால் தலையில் நிரந்தரமாக இருக்கும் டாட்டூ போடுவதற்கு முன், பலமுறை யோசித்துக் கொள்ளுங்கள்.

How To Make Bald Beautiful

உங்கள் தோற்றத்தை இன்னும் வித்தியாசமாக வெளிக்காட்ட நினைத்தால், ஃபார்மலாக நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது ஃடோரா தொப்பியை அணிந்து கொள்ளுங்கள். அதுவே கேஷூவலாக செல்ல நினைத்தால் சாதாரண தொப்பி போதுமானது.

How To Make Bald Beautiful

ராக் ஸ்டார் போன்று காணப்பட வேண்டுமெனில், மொட்டை தலையுடன் ஒரு காது மட்டும் குத்திக் கொண்டு, அந்த காதுக்கு ஒரு வைர கம்மல் போட்டுக் கொள்ளுங்கள். இது அற்புதமான தோற்றத்தைக் கொடுக்கும்.

English summary

How To Make Bald Beautiful

While earlier men used to be conscious about being bald or balding — some of them even resorting to wearing wigs — of late, many have embraced the look and are even seen rocking it. Here are a few tips to keep in mind when styling a bald head.
Subscribe Newsletter