நரைமுடி குறித்த கட்டுக் கதைகள் மற்றும் உண்மைகள்!!!

By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

ஆணும் சரி, பெண்ணும் சரி... கண்ணாடிக்கு முன் நின்று விட்டால் தங்களுடைய தலைமுடி அலங்காரத்தைத் தான் முதலில் சரி செய்து கொள்வார்கள். அழகான தலைமுடி என்பது இறைவன் கொடுத்த வரம். அது எப்போதுமே கருமையாகவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருப்பதற்கே அனைவரும் விரும்புவார்கள்.

ஆனால், காலத்தின் கோலத்தில் சிலருக்கு சிறு வயதிலேயே முடிகள் நரைத்துவிடும். அதுமட்டுமல்லாமல் மன அழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், காற்றில் கலந்து வரும் ரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட பல காரணங்களால் கூட இந்தக் காலத்தில் பலருக்கும் வேகமாக முடிகள் நரைக்கின்றன.

இருந்தாலும், முடிகள் நரைப்பதற்கான காரணங்களாக சில கட்டுக் கதைகளும் அவிழ்த்து விடப்படுகின்றன. அவற்றில் சில கட்டுக் கதைகள் மட்டும் உண்மையே! நரைமுடிகள் குறித்த 9 கட்டுக் கதைகளையும், அவற்றின் உண்மைகளையும் இப்போது நாம் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுக் கதை 1

கட்டுக் கதை 1

ஒரு நரைமுடியைப் பிடுங்கினால், பிடுங்கிய அந்த வேரிலிருந்து அதிகமான நரைமுடிகள் வளரும்.

உண்மை: இது உண்மையிலேயே கட்டுக் கதைதான்! ஒரு முடிக்கு ஒரு முடிவேர் தான் உண்டு. அதிலிருந்து பல முடிகள் வளராது. முடி பிடுங்கப்பட்ட இடம் மழுக்கென்று வழுக்கையாகுமே தவிர, அதிலிருந்து வேறு முடிகள் வளர வாய்ப்பே இல்லை. நரைமுடிக்கும் இதே கதைதான்!

கட்டுக் கதை 2

கட்டுக் கதை 2

நிரந்தர சாயத்தால் நரைமுடிகளை மறைக்க முடியும்.

உண்மை: இது உண்மையல்ல. சில நரைமுடிகளை மட்டுமே சாயத்தால் மறைக்க முடியும். மேலும், நிரந்தர சாயத்தால் அனைத்து நரைமுடிகளையும் நிரந்தரமாக மறைத்து விட முடியாது.

கட்டுக் கதை 3

கட்டுக் கதை 3

புகைப்பிடிப்பதால் முடி நரைக்கும்.

உண்மை: ஆம், புகை பிடிப்பவர்களின் முடிகள் மற்றவர்களை விட 4 மடங்கு வேகமாக நரைத்து விடுவதாக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, புகைப்பவர்களின் முடிகள் வேகமாகக் கொட்டி விடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

கட்டுக் கதை 4

கட்டுக் கதை 4

நரைமுடியைக் கருமையாக மாற்ற முடியும்.

உண்மை: இது ஓரளவு உண்மை தான். கேரட் ஜூஸை நிறையக் குடிப்பவர்களின் நரைமுடிகள் மீண்டும் கருப்பு நிறத்திற்கு மாறிவிடுவதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

கட்டுக் கதை 5

கட்டுக் கதை 5

பயம் அல்லது விபத்துக்களால் முடிகள் வேகமாக நரைக்கும்.

உண்மை: இது முழுக்க முழுக்க கட்டுக் கதைதான். ஒருவருக்குத் திடீரென ஏற்படும் பயமோ அல்லது விபத்து போன்ற அதிர்ச்சிகரமான சம்பவங்களோ, அவருடைய முடிகளை நரைகளாக மாற்றாது. இதற்கான ஆதாரங்களும் எதுவும் இல்லை.

கட்டுக் கதை 6

கட்டுக் கதை 6

ஹேர் ஜெல் பயன்படுத்துவதால் முடிகள் விரைவில் நரைக்கும்.

உண்மை: இதுவும் கட்டுக் கதையே! தங்கள் முடிகளை ஸ்டைலாக வைத்துக் கொள்வதற்கு ஏராளமான மக்கள் ஹேர் ஜெல்லை உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால், இதன் காரணமாக அவர்களுக்கு நரை ஏற்படுவதில்லை. இருந்தாலும், ஹேர் ஜெல் பயன்படுத்துபவர்களின் முடிகள் விரைவில் உதிர்ந்து அவர்களுக்கு விரைவில் வழுக்கை ஏற்படும் என்பது மட்டும் உண்மை!

 கட்டுக் கதை 7

கட்டுக் கதை 7

சூரிய ஒளி அதிகம் படுவதால் முடிகள் நரைக்கும்.

உண்மை: இது ஓரளவு உண்மையே! பழுப்பு மற்றும் செந்நிற முடிகளின் பளபளப்பை சூரிய ஒளி குறைக்கிறது. வினிகர் கொண்டு முடிகளைக் கழுவுவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம் அல்லது சூரிய ஒளியைத் தவிர்க்க, தொப்பி அணிந்து கொள்ளலாம்.

கட்டுக் கதை 8

கட்டுக் கதை 8

நரைமுடிகளைப் பராமரிப்பது மிகவும் கஷ்டமானது.

உண்மை: இது கட்டுக் கதையே! கருப்பு முடிகளை எப்படிப் பராமரித்து ஸ்டைல் செய்து கொள்கிறீர்களோ, அதே அளவுக்கு நரைமுடிகளைக் கொண்டும் ஸ்டைல் பண்ணி அசத்தலாம்!

கட்டுக் கதை 9

கட்டுக் கதை 9

நரைமுடியை ஹேர் டை பொலிவிழக்கச் செய்யும்.

உண்மை: இது உண்மை இல்லை. ஹேர் டை உண்மையில் முடிகளுக்கு ஈரப்பதத்தையும், பளபளப்பையும், நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

நரைமுடியைத் தடுக்கும் வழிகள்

நரைமுடியைத் தடுக்கும் வழிகள்

* நெல்லிக்காய் மற்றும் ஹென்னா ஆகியவற்றைக் கொண்டு ஹேர் பேக் தயாரித்து, அதை முடிகளில் தடவினால் நரைமுடிகள் மறைந்து கருமுடிகள் மீண்டு வரும்.

* கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் டீயைக் கலந்து, அந்த நீர் குளிர்ந்ததும் அதை முடியில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முடியை அலச வேண்டும்.

* நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதைக் கொதிக்க வைத்து, வாரத்திற்கு இருமுறை முடிகளில் தடவி வந்தால், நரைமுடிகள் மறைந்து ஒரிஜினல் நிறம் கிடைக்கும்.

நரைமுடியைத் தடுக்கும் வழிகள்

நரைமுடியைத் தடுக்கும் வழிகள்

* உணவில் கறிவேப்பிலையைச் அதிகம் சேர்த்துக் கொண்டால், நரைமுடிகள் சிறிது சிறிதாக மறைந்து விடும்.

* 'பேன் புஷ்ப்' என்ற மூலிகைச் சாற்றைத் தடவி வந்தால் நரைமுடிகள் விரைவில் மறையும்.

* பாதாம் எண்ணெயில் நெல்லிக்காயைக் கலந்து, தலைமுடிகளில் மசாஜ் செய்து வந்தால் நரைமுடிகளுக்கு குட்-பை சொல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Grey Hair Myths And Facts

Find out the “Truth” of every “Myth” about the hair graying as described below and take good care of your hair.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter