For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க பல் அசிங்கமா மஞ்சள் நிறத்தில் இருக்கா? இதோ அதை வெள்ளையாக்கும் சக்தி வாய்ந்த வழிகள்!

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்க பல இயற்கை வழிகள் உள்ளன. அதுவும் நம் முன்னோர்கள் மேற்கொண்ட எளிய வழிகள் உள்ளன. அதற்கு வீட்டில் உள்ள ஒருசில பொருட்களே போதுமானது.

|

நம் அனைவருக்குமே நல்ல வெள்ளையான முத்துப் போன்ற பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். துரதிர்ஷ்டவசமாக அந்த பாக்கியம் பலருக்கு கிடைப்பதில்லை. இதற்கு காரணம் உண்ணும் சில உணவுகளும், புகைப்பழம் போன்ற கெட்ட பழக்கங்களும், முறையான பராமரிப்புக்களை பற்களுக்கு கொடுக்காமல் இருப்பதும் தான். ஆனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்க பல இயற்கை வழிகள் உள்ளன.

Best Ways to Naturally Whiten Yellow Teeth at Home

அதுவும் நம் முன்னோர்கள் மேற்கொண்ட எளிய வழிகள் உள்ளன. அதற்கு வீட்டில் உள்ள ஒருசில பொருட்களே போதுமானது. உங்களுக்கு மஞ்சள் நிற பற்களை வெள்ளையாக்கும் சக்தி வாய்ந்த இயற்கை வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாம்பல்

சாம்பல்

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் திறன் சாம்பலுக்கு உள்ளது. நம் முன்னோர்கள் முந்தைய காலத்தில் சாம்பலைக் கொண்டு பற்களைத் துலக்கினார்கள். சாம்பல் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், நீங்களும் இதை முயற்சிக்கலாம். ஒருவேளை சாம்பல் கிடைக்காவிட்டால், கடைகளில் விற்கப்படும் சாம்பல் மாத்திரையின் உள்ளே உள்ள பொடியைப் பயன்படுத்தலாம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், சாம்பலை ஈரமான டூத் பிரஷ்ஷில் நனைத்து, பற்களை வழக்கம் போல துலக்க வேண்டும்.

பால் பவுடர் மற்றும் டூத் பேஸ்ட்

பால் பவுடர் மற்றும் டூத் பேஸ்ட்

பால் பவுடர் பற்களை முத்துப் போன்ற நிறத்தில் மாற்ற உதவுவதோடு, ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். அதற்கு டூத் பிரஷ்ஷில் டூத் பேஸ்ட்டை வைத்து, அதன் மேல் சிறிது பால் பவுடரைத் தூவி பற்களைத் துலக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு முறை பற்களைத் துலக்க, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் வெள்ளையாக இருக்கும்.

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு

டூத் பிரஷ்ஷில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவைத் தூவி, சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, பற்களைத் துலக்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் விரைவில் நீங்கும். ஆனால் இப்படி வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் செய்யக்கூடாது. இல்லாவிட்டால், எனாமல் தேய்ந்துவிடும்.

ஹைட்ரஜன் பெராக்சைடு

ஹைட்ரஜன் பெராக்சைடு

ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்படுத்துவதாக இருந்தால், உங்கள் பற்கள் சென்சிடிவ்வாக இருக்கக்கூடாது. சென்சிடிவ் பற்கள் இல்லையெனில், ஹைட்ரஜன் பெராக்சைடை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து பற்களைத் தேய்க்க வேண்டும். ஆனால் இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. இல்லாவிட்டால், பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.

பேக்கிங் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு

பேக்கிங் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு

ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு பற்களில் மாயங்களை ஏற்படுத்தும். அதற்கு இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து, டூத் பிரஷ் பயன்படுத்தி பற்களில் 2 நிமிடம் தேய்க்க வேண்டும். ஆனால் 2 நிமிடத்திற்கு மேல் தேய்க்கக்கூடாது. வாரத்திற்கு ஒன்று-இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.

கல் உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் டூத் பேஸ்ட்

கல் உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் டூத் பேஸ்ட்

அரை டீஸ்பூன் கல் உப்பில், சிறிது எலுமிச்சை சாற்றினைக் கலந்து, அத்துடன் சிறிது டூத் பேஸ்ட்டையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை பற்களில் தடவி ஒரு நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக தேய்த்துக் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒன்று-இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.

எலுமிச்சை ஜூஸ் மற்றும் தண்ணீர்

எலுமிச்சை ஜூஸ் மற்றும் தண்ணீர்

எலுமிச்சை ஜூஸ் மற்றும் தண்ணீரை சரிசம அளவில் கலந்து கொண்டு, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்குவதோடு, பல் சொத்தையாவதும் தடுக்கப்படும்.

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீர்

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீர்

அரை டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த நீரால் தினமும் காலையில் பற்களைத் துலக்கிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

டூத் பேஸ்ட், உப்பு, பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு

டூத் பேஸ்ட், உப்பு, பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு

ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் டூத் பேஸ்ட்டில், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா மற்றும் 4-5 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையால் பற்களை 4-5 நிமிடம் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு முறை செய்தாலே ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இந்த முறையை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தான் பயன்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Ways to Naturally Whiten Yellow Teeth at Home

Here are some best ways to naturally whiten yellow teeth at home. Read on..
Story first published: Thursday, April 15, 2021, 19:14 [IST]
Desktop Bottom Promotion