தினம் 2 முறை குளிச்சாலும் வேர்வை நாற்றம் போகலையா?.... நீங்க பண்ற தப்பு என்ன தெரியுமா?

Posted By: vijaya kumar
Subscribe to Boldsky

உடலில் ஏற்படும் தூர்நாற்றம் என்பது கொடுமையானது, நம்மில் பலர் தனது உடலில் துர்நாற்றம் வீசுகிறது என்பதை அறியாமலும் இருக்கிறார்கள், நமது உடலில் கெட்ட வாசனை வீசும் போது பலரும் நம் அருகில் வராமல் நாசுக்காக கர்ச்சீப்பை கொண்டு மூக்கை முடிகொண்டு நிமிடம் பேசுவார்கள்.

beauty

இதனால் அவர்கள் நம்மை வெறுக்கிறார்கள் என்று அர்த்தமில்லை, அவர்களுக்கு நம் மீது வீசும் நாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதுதான் அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் துர்நாற்றம்

உடல் துர்நாற்றம்

நமது உடலின் தகவமைப்பின்படி அதற்கு எந்த ஒரு வாசனையும் கிடையாது , வாசனை என்பது நிலையானது அதற்குள் எந்த மாற்றமும் ஏற்படாது. அப்படியிருந்தும் மக்கள் உங்கள் அருகில்வர பயந்து ஓட்டம் பிடித்தார்கள் என்றால், உங்கள் உடலில் வீசும் தூர்வாசனை தான் காரணமாக இருக்கக்கூடும்

உங்களிடம் உண்மையை தைரியமாக பேசும் உங்கள் நெருங்கிய நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ உங்கள் மீது வீசும் தூர்நாற்றத்தை பற்றி பேசுங்கள் , அவர்கள் சொல்வது உண்மையெனில் அந்த துர்நாற்றத்தை போக்க எளிய வீட்டு வைத்திய சிகிச்சைகளை இங்க வழங்குகிறோம்

விட்ச் ஹேசல்

விட்ச் ஹேசல்

அக்குள் மற்றும் இடுப்புப்பகுதி போன்ற பகுதிகளில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியின் காரணமாக உடல் தூர் நாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த இடங்களில் அபோகிரின் வியர்வை சுரப்பிகள் காரணமாக அதிக வியர்வை சுரக்கின்றது. இந்த வியர்வை பாக்டீரியாவிற்கு உணவளிக்கும்போது, ​​அவை மோசமான நாற்றத்தை ஏற்படுத்துகின்றது .

பாக்டீரியா வாழ்வதற்கு உயிர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படுகிறது. தோலில் உள்ள உயிர்ச்சத்தை குறைக்க சில பொருட்கள் உதவுகிறது அவற்றில் ஒன்று தான் விட்ச் ஹேசல் விட்ச் ஹேசலாய் நாம் நம் தோலில் பயன்படுத்தும் போது அது தோலில் உள்ள உயிர் சத்தின் ph அளவை குறைத்து பாக்டீரியாவை வளர்ச்சியை தடுத்து உடல் தூர்நாற்றத்தை போக்குகிறது. விட்ச் ஹேசலய் நம் நேரடியாகவோ ஸ்பிரேய மூலமாக பயன்படுத்தலாம். ஒரு காட்டன் பஞ்சை எடுத்து கொண்டு அதை விட்ச் ஹேசலில் நனைத்து சருமத்தில் நேரடியாக பயன்படுத்தலாம் , இதனை டீயூயோடரண்ட்டிற்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம். டீயூயோடரண்ட் உபயோகத்தை நிறுத்த விரும்பவில்லை என்றல் விட்ச் ஹேசல் பயன்படுத்தி அது நன்கு உலர்ந்த பின் டீயூயோடரண்ட்டை

பயன்படுத்தவும்.

வினிகர்

வினிகர்

விட்ச் ஹேசலின் தன்மையைத்தான் வினிகரும் கொண்டுள்ளது வினிகர் கூட உங்கள் உடலின் தூநாற்றத்தை நீக்கி கொள்ள பயன்படுத்தலாம். வினிகரால் உங்கள் தோலில் உள்ள pH நிலைகளை குறைக்க முடியும், அதனால் நீங்கள் உங்கள் உடல் நாற்றத்தை பற்றி கவலைப்படாமல் முழு நாளும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வினிகரை பயன்படுத்தலாம். உடல் நாற்றத்தை வெளியேற்ற வெள்ளை வினிகரை பயன்படுத்தவேண்டும்.

பயன்படுத்தும் வழிகள்

பயன்படுத்தும் வழிகள்

வெள்ளை வினிகரை ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து உங்கள் அக்குள்களில் தடவவும் .

ஒரு ஸ்பிரேவில் வினிகரை சேமித்து குளித்தபின் உங்கள் அக்குள்களில் அதை தெளிக்கவும். வினிகர் பயன்படுத்தி பின்னர் எந்த டியோடரன்டனும் பயன்படுத்த வேண்டாம். தண்ணீரில் குவளையில் சில வெள்ளை வினிகரை கரைத்துக்கொண்டு குளிக்கும்போது,வினிகர் கலந்த தண்ணீரால் உங்கள் அக்குள்களை கழுவவும்

4. ஏற்கனவே ஷேவ் செய்யப்பட்ட இடத்தில் வினிகரைப் பயன்படுத்த வேண்டாம் இது எரிச்சல் தன்மையை உண்டாக்கும். இருப்பினும், சிலருக்கு வினிகர் பயன்படுத்தி குணமாகாத போது , அவர்களின் உடல் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சை பழச்சாற்றை பயன்படுத்தலாம்

சிலருக்கு வினிகரில் பயன்பாடு நல்ல பலன்களை தராது , அப்படிப்பட்டவர்கள் அவர்களின் உடல் தூர் நாற்றத்தை போக்க எலுமிச்சை பழச்சாறுகளை அவர்கள் உடம்பில் பயன்படுத்தலாம்.

எலுமிச்சை பழச்சாறு

எலுமிச்சை பழச்சாறு

விட்ச் ஹேசல் மற்றும் வினிகர் போலவே எலுமிச்சை சாரும் உங்கள் தோலில் உள்ள ph அளவை குறிக்கிறது . மற்றும் துர்நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாவை வளரவிடாமல் தடுக்கிறது , வினிகரை பயன்படுத்தி குணமடையாதவர்கள் , சென்சிடிவ் தோல் உடையவர்களும் எலுமிச்சை சாற்றை பயன்படுத்தலாம். ஒரு முழு எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக வெட்டிக்கொள்ளவும். அதை நேரடியாக உங்கள் அக்குள்களில் தேய்க்கவும். மாற்றாக காட்டன் பஞ்சின் உதவியுடன் எலுமிச்சை சாற்றை எடுத்து உங்கள் அக்குள்களில் தடவலாம். உங்களுக்கு லேசான துர்நாற்றம் தான் என்றாலும் அல்லது எலுமிச்சையின் சூப்பர் அசிடிக் தன்மை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் , நீங்கள் எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் கலந்து உங்கள் அக்குள்களை கழுவுங்கள் .

பேக்கிங் சோடா - எலுமிச்சை சாறு

பேக்கிங் சோடா - எலுமிச்சை சாறு

சிலருக்கு லேசாக வியர்க்கும் அவர்களுக்கு வினிகர் எலுமிச்சைசாறு கலவை போதுமானது. ஒரு சிலருக்கு அதிகமாக வியர்க்கும் அவர்களுக்கு பேக்கிங் சோடா - எலுமிச்சை சாறு கலவை மிக பொருத்தமான ஒரு தீர்வாகும். பேக்கிங் சோடா வியர்வை குறைப்பதுமட்டுமில்லாமல் பாக்டீரியாவையும் வெளியேற்றுகிறது இது ஒரு இயற்கையான டியோடரண்ட்டாக செயல்படுகிறது. ஒரு அரை எலுமிச்சைபழத்தில் சாறுஎடுத்து கொள்ளவும் பேஸ்ட் செய்வதற்கு தேவையான அளவு பேக்கிங் சோடாவை எடுத்துக்கொள்ளவும் இரண்டையும் கலந்து ஒரு பேஸ்ட் போல் தயார் செய்து உங்கள் அக்குள்களில் தடவவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவி விட்டு , குளிக்க செல்லவும்

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

முன்னர் கூறியபடி பேக்கிங் சோடா வியர்வை குறைப்பதுமட்டுமில்லாமல் பாக்டீரியாவையும் வெளியேற்றுகிறது இது ஒரு இயற்கையான டியோடரண்ட்டாக செயல்படுகிறது .அனால் அதிக படியான வியர்வை தூண்டுதல் உடையவர்களுக்கு பாக்கிங் சோடாவைக்காட்டிலும் சோளமாவு மிகசிறந்தது .

சோளமாவு பாக்கிங் சோடாவிக்காட்டிலும் மிகவும் உறுஞ்சும் தன்மையுடையது .

பாக்கிங் சோடா அல்லது சோளமாவு இரண்டில் ஒன்றை நீங்கள் அக்குள்களில் தடவலாம்

சிறந்த பலனுக்கு இரண்டியும் கலந்து உங்கள் அக்குள்களில் தடவலாம்

இது வியர்வையும் துர்நாற்றத்தையும் போக்கவல்லது

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் (ACV)என்பது ஒரு நன்கு அறியப்பட்ட இயற்கை பாக்டீரியா-எதிர்ப்பு பொருள். வெள்ளை வினிகர் போன்ற ACV உங்கள் தோலின் pH அளவை சமநிலைப்படுத்துவதன் மூலம் உடல் தூர் நாற்றத்தை அகற்ற உதவுகிறது.

மூல நிரப்பப்படாத ஆப்பிள் சீடர் வினிகர் ஓர் அருமையான தீர்வை தருகிறது

ஆப்பிள் சீடர் வினிகரை தோலில் தடவுவது மட்டுமில்லாமல், இதனை குடித்து வந்தால் ,உங்கள் வியர்வை கட்டு படுத்தி நல்ல பலனை தரவல்லது. உடல் தூர் நாற்றத்தை போக்க ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்ததும் வழிகள்

1 . குளிப்பதற்கு முன்னாள் சுத்திகரிக்கப்படாத ஆப்பிள் சீடர் வினிகரை காட்டன் பஞ்சில் நனைத்து உங்கள் அக்குள்களில் தேய்க்கவும் இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து குளிக்கவும்

2 ஆப்பிள் சீடர் வினிகரை நீங்கள் குளிக்க பயன் படுத்தும் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும் 8 முதல் 10 நிமிடம் கழித்து குளிக்கவும் , இடுக்கு போன்று செய்து வந்தால் உடல் துர்நாற்றத்தை மட்டுமில்லாமல் இது வேனிற் கட்டிகளையும் போக்குகிறது

3 . சாப்பிடுவதற்கு முன்னாள் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து குடிக்கவும் இது உங்களின் வியர்வை சுரக்கும் தன்மையை கட்டுப்படுத்துகிறது. இது போல் குடிப்பதற்கு சங்கடமா இருந்தால் இதனுடன் தேனையும் சேர்த்து பருகலாம்

4 . கால் வாசனையால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் தண்ணீரில் 1/3 கப் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்து வெந்நீரில் கலந்து . உங்கள் கால்களை 15 நிமிடங்கள் இந்த தண்ணீரில் உங்கள் கால்களை ஊறவையுங்கள் . நல்ல பலன்கள் கிடைக்கும்

ஒவ்வொரு வாரமும் நீங்கள் அதை செய்ய முடியும்.

தேயிலை எண்ணெய்

தேயிலை எண்ணெய்

தேயிலை எண்ணெய் ஓர் இயற்கையான கிருமி நாசினி, மேலும் இது நல்ல நறுமணத்தையம் கொண்டுள்ளது. இது கிருமி மற்றும் பூஞ்சை களை கொல்லவல்லது

இருப்பினும் தேயிலை எண்ணெய் பயன்படுத்தும் போது சிலருக்கு எரிச்சல் ஏற்படும், அப்படி பட்டவர்கள் வேறு சிகிச்சைமுறைகளை பயன்படுத்தவும். பயன்படுத்தும் முறைகளை பார்ப்போம். 30 மிலி தண்ணீர், இரண்டு சொட்டு தேயிலை எண்ணையை கலந்து அக்குள்களில் பயன்படுத்தவும்.

சேஜ் ஹெர்ப்

சேஜ் ஹெர்ப்

சேஜ் ஹெர்ப் உடலில் வியர்வை சுரப்பிகளை குறைத்து தூநாற்றத்தை போக்குகிறது , இது கிருமி நாசினியாகவும் இருப்பதால் தொழில் உள்ள கிருமிகளை அகற்றுகிறது ,

இது நறுமணத்தன்மையோடு இருப்பதால் இதை இயற்கை டுயோடரண்ட்டாக பயன்படுத்தலாம். ரோஸ்மேரி குடும்பத்தைச் சேர்ந்த இந்த சேஜ் ஹெர்ப் , நறுமணமுள்ள கலவைகளான கற்பூரம் மற்றும் அசிஜெனின், டைமாஸ்ட்டின், லுட்டோலின் மற்றும் ரோஸ்மரினிக் அமிலம் போன்ற ஆவியாகும் எண்ணெய்களைக் கொண்டிருக்கிறது. இது உங்களை நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வைக்கும் . எனவே, மோசமான உடல் துர்நாற்றத்தை போக்க சேஜ் ஹெர்ப் பயன்படுத்தவும்

இரண்டு கரண்டி சேஜ் ஹெர்ப்பை 1 4 லிட்டர் வெந்நீரில் கலந்து தேநீர் பதத்தில் தயாரித்து உங்கள் அக்குள்களை கழுவவும். இந்த தேநீரை பயன்படுத்திய பின்பு உங்கள் கைகளை நன்றாக கழுவிவிடுங்கள், கைகளை கழுவாமல் உங்கள் முகத்தை தொடவேண்டாம். ஒன்று அல்லது இரண்டு கரண்டி சேஜ் ஹெர்ப்பை தண்ணீரில் பத்து நிமிடம் கொதிக்கவைத்து தேனீர் தயாரித்து சிறிதளவு அருந்துங்கள் ,

இது உங்கள் வியர்வையை குறைக்க உதவும்

இந்த தேநீரை சிறிதளவு மட்டும் அருந்துங்கள் , சேஜ் ஹேர்பின் தொடர்ச்சியான பயன்பாடு தலைவலி மற்றும் வலிப்புத்தாக்கங்களை ஏற்படுத்தும் . நீங்கள் கர்பமாக இருந்தால் இதனை முற்றிலும் தவிர்க்கவும்

ரோஸ்மெர்ரி

ரோஸ்மெர்ரி

இத்தாலி சமயல்களில் பரவலாக பயன்படுத்தப்படும் ரோஸ்மேரி மூலிகை, உங்கள் உடலுக்கு நல்ல மனத்தை அளிப்பதோடு மட்டுமில்லாமல் பாக்டீரியா மற்றும் பூஞ்சை கொல்லும் ஆற்றல் படைத்தது. இதை நாம் பயன்படுத்தும்போது போது நல்ல பலன்களை தரவல்லது.

அரை கப் காய்ந்த ரோஸெமெர்ரி இலைகளை நான்கு கப் சாதாரண தண்ணீரில் ஊறவைத்து நாம் குளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். காய்ந்த ரோஸெமெர்ரி இலைகளை நன்றாக பொடித்து, பவுடர் போல் பயன்படுத்தலாம் இந்த பவுடர் உங்களை நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். ரோஸெமெர்ரி பயன்படுத்தும் பொது உங்களுக்கு ஏதெனும் எரிச்சல் ஏற்பட்டால் அதை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திவிடவும்

கோதுமை புல் சாறு

கோதுமை புல் சாறு

கோதுமை புல்லில் (கிளோரோபில்ல்) பச்சையம் உள்ளது இது உடல் துர்நாற்றத்தை போகும் ஆற்றல் வாய்ந்தது. இரண்டு கரண்டி கோதுமை புல் சாற்றை ஒரு கப் தண்ணீரில் கலந்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்

நூல்கோல் சாறு

நூல்கோல் சாறு

நூல்கோல் சாறு வைட்டமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆதாரம் உள்ளது , நூல்கோல் சுவையான உணவாகவும், உடல் தூர்நாற்றத்தை போக்கும் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது நூல்கோல் உடல் தூர்நாற்றத்தை உருவாக்கும் கிருமிகளை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. நூல்கோலய் தூண்டு துண்டாக வெட்டி ஒரு பேஸ்ட் பதத்திற்கு கொண்டுவரவும் , பின்பு அதில் இருந்து சாறு எடுக்கவும். எடுத்த சாற்றை உங்கள் அக்குள் மற்றும் இடுப்பு பகுதிகளில் தடவி உலரவிடவும். இதன் மூலம் அடுத்த பத்து மணி நேரத்திற்கு உங்கள் உடலில் துர்நாற்றம் வீசாமல் இது பாதுகாக்கும்

தக்காளி சாறு

தக்காளி இயற்கையாகவே ஒரு கிருமிநாசினியாக செயல்படுகிறது, இது கிருமிகளை கொள்கிறது. பண்டைய இந்திய மருத்துவத்தில் தக்காளி சாற்றை உடல் துர்நாற்றத்தை போக்க பயன்படுத்தி இருக்கிறார்கள். தற்போதைய நவீன மருத்துவத்திலும் உடல் தூர்நாற்றத்தை போக்க தக்காளி சாற்றை பரிந்துரைக்கிறார்கள். ஒரு நாளைக்கு தக்காளி சாற்றை முன்று முறை அருந்தி வர உடல் துர்நாற்றம் குணமாகும். 8 முதல் 10 தக்காளிகளை எடுத்து கூழாக்கி சாறு எடுக்கவும் , எடுத்த சாற்றை ஒரு பக்கெட் தண்ணீரில் கலந்து குளிக்கவும், நீங்கள் குளிப்பதற்கு அதிக தண்ணீர் தேவைப்பட்டால் தக்காளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கொள்ளவும்

இயற்கை டீயூயோடரண்ட்

இயற்கை டீயூயோடரண்ட்

அலுமினிய அடிப்படையிலான டீயூயோடரண்ட்களை பயன்படுத்தும் போது உடல் துர்நாற்றத்தை க்காட்டுப்படுத்தும். ஆனால் உங்கள் தோலை சேதப்படுத்தக்கூடும்

மேலும் இதில் உள்ள ரசாயனங்கள் உங்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம். எனவே இயற்கை முறையில் தயாரிக்கும் டீயூயோடரண்ட் பயன்படுத்த வேண்டும், அதற்கான செய்முறைகளை பார்ப்போம்

கொத்தமல்லி எண்ணெய் , லாவெண்டர் எண்ணெய் மற்றும் விட்ச் ஹஸில்லுடன் சேர்த்து நன்றக கலந்து ஸ்பிரே பாட்டிலில் அடைத்து பயன்படுத்தவும்

உணவுக்கட்டுப்பாடு

உணவுக்கட்டுப்பாடு

உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் வேலையில் உணவு கட்டுப்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. சில உணவுகளை தவிர்ப்பதன் மூலம் உடல் துர்நாற்றம் வராமல் தடுக்கலாம். அதிகமாக தண்ணீர் அருந்துவதன் மூலம் நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடலில் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கிறது. புரத உணவு, முழு தானியங்கள், மீன் அல்லது மெலிந்த கோழி, பருப்பு வகைகள், ஆரோக்கியமான கொழுப்புகள், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் அனைத்து வகையான உணவுகளையும் சமநிலையில் உட்கொள்ளவேண்டும் .

வறுத்த இறைச்சியை தவிர்க்கவும் , இது எளிதில் செரிமானம் ஆகாது ,எளிதில் செரிமானம் ஆகாத உணவுகள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, வெள்ளை மாவு மற்றும் கொழுப்பு உணவுகள் முதலியன ஜங்க் பூட் என படுகின்ற குப்பை உணவுகள் உடல் நாற்றத்தை உட்பட பல கேடுகளை உண்டாக்கும். காரமான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டாம் . வெங்காயம், பூண்டு ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவைதான் என்றாலும் அதிகம் பயன்படுத்தும் போது உடல் தூர்நாற்றத்தை ஏற்படுத்தும். காஃபினேற்றப்பட்ட பானங்கள், தேநீர், காபி, கோலாஸ் மற்றும் மது ஆகியவற்றை தவிர்க்கவும்.

தளர்வான ஆடை

தளர்வான ஆடை

நீங்கள் உங்கள் உடலை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்து வந்தால், எந்த வித வீட்டு வைத்திய சிகிச்சைகளும் தேவைப்படாது. மேற்கொண்ட அனைத்து வழிகளை பின்பற்றியும் உங்கள் உடல் துர்நாற்றம் போகவில்லையென்றால் உடன்றடியாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Really Effective Home Remedies for Body Odor

Body odor is socially disastrous! How does it feel when people don’t want to come close to you.