For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வியர்வை...வியர்வை...! கைகள், கால்கள் முழுக்க வியர்வையா..? இதனால் மிகவும் வருந்துகிறீர்களா..? தீர்வு

நமது உடலில் தண்ணீர் 60 % உள்ளது. இந்த தண்ணீரானது சிறுநீராகவோ அல்லது வியர்வையாகவோ வெளியேறுவது இயற்கையே.ஆனால் கை, கால்கள் என எல்லா இடத்திலும் அதிக வியர்வை வருவது உடலுக்கு மிகவும் கெடுதலை தர கூடியது. விய

|

நமது உடலில் தண்ணீர் 60 % உள்ளது. இந்த தண்ணீரானது சிறுநீராகவோ அல்லது வியர்வையாகவோ வெளியேறுவது இயற்கையே.ஆனால் கை, கால்கள் என எல்லா இடத்திலும் அதிக வியர்வை வருவது உடலுக்கு மிகவும் கெடுதலை தர கூடியது. வியர்வை என்பது உடலில் இருந்து வெளியேற வேண்டியது அவசியமே. ஆனால் தயக்கம், மன அழுத்தம், பயம் மற்றும் சில ஹோர்மோன் மாற்றங்கள் என இவையே அதிக வியர்வையை வெளிப்படுத்துகிறது.

beauty

இது நமக்கு எரிச்சலையும், கடுப்பையும், வெறுப்பையும் இயல்பாகவே தந்தும் விடுகிறது. இதன் விளைவு நாம் பிறரிடம் கடுப்பாக பேசுவது, வேளையில் கவனம் குறைவு, அதிக மன அழுத்தம். இதற்கெல்லாம் தீர்வு என்னவென்று கேட்கிறீர்களா..? நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே இதனை சரி செய்து விடலாம்.ஆம்,வீட்டு வைத்தியம்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1 தண்ணீர்

#1 தண்ணீர்

முள்ளை முள்ளால் எடுப்பது போல...நீரை வைத்தே இந்த வியர்வை பிரச்சனையை நாம் சரி செய்ய முடியும். தண்ணீரே அதிக வியர்வை வெளியேறுவதை கட்டுப்படுத்தும் முதல் வீட்டு மருந்து. தினமும் 10-12 க்ளாஸ் தண்ணீர் குடித்தாலே பலவித பிரச்சனைகள் தீர்வுக்கு வரக்கூடும். அதில் ஒன்றுதான் இந்த அதிக வியர்வை வெளியேறுவதை கட்டுப்படுத்துவதே. மேலும் கைகள் மற்றும் கால்களை குளிர்ந்த நீரில் 15-20 நிமிடங்கள் ஊற வைத்தால் சிறிது நேரத்திற்கு இதில் இருந்து விடுபடலாம்.

#2 பேக்கிங் சோடா

#2 பேக்கிங் சோடா

இந்த பேக்கிங் சோடாவில் அல்கலைன் இருப்பதால், அதிக வியர்வை வெளியேறுவதை தடுக்க உதவுகிறது. 3 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை மிதமான தண்ணீரில் கலந்து அதனுள் உங்கள் கை,கால்களை, 30 நிமிடம் வைத்து வர வேண்டும். பிறகு காட்டன் துணியை கொண்டு துடைத்து விடவும். இவ்வாறு செய்து வந்தால் நீங்கள் இந்த அதிக வியர்வை பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

#3 எலுமிச்சை

#3 எலுமிச்சை

அதிக வியர்வையை கட்டுப்படுத்த இந்த அற்புதமான எலுமிச்சை வழி செய்யும். அதற்கு முதலில் சிறிது எலுமிச்சை சாற்றையும்,பேக்கிங் சோடாவையும் மிதமான தண்ணீரில் கலந்து விடவும்.பிறகு உங்கள் கை, கால்களை அதனுள் 15-20 நிமிடம் விட்டு எடுக்கவும்.அல்லது சின்ன எலுமிச்சை துண்டு எடுத்து கொண்டு அதில் சிறிதளவு உப்பை தூவி வியர்வை அதிகம் வருகின்ற இடத்தில் வறண்டு போகும் வரை தேய்க்கவும். எலுமிச்சை, வியர்வை அதிகமாக கை,கால்களில் வருவதை குறைப்பதுடன் அந்த இடங்களில் வரும் துர்நாற்றத்தையும் கட்டுப்படுத்த வல்லது.

#4 ஆப்பிள் சிடர் வினிகர்

#4 ஆப்பிள் சிடர் வினிகர்

இந்த ஆப்பிள் சிடர் வினிகர், ஒரு நல்ல நிவாரணியாக செயல்படும். இது கை,கால்களில் அதிக வியர்வை வருவதை கட்டுப்படுத்துவதோடு உடலின் pH அளவை சீராக வைக்க உதவுகிறது. சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகரை மிதமான தண்ணீரில் கலந்து அதில் உங்கள் கை, கால்களை இரவு முழுவதும் ஊற வையுங்கள்.பிறகு காட்டன் துணியால் துடைத்து எடுங்கள். அல்லது சமமான அளவில் ஆப்பிள் சிடர் வினிகரையும் ,ரோஸ் தண்ணீரையும் எடுத்து கொண்டு அதிக வியர்வை வரும் இடங்களில் ஒரு நாளைக்கு 2-3 தடவை அப்ளை செய்தால் விரைவில் குணமடையும்.

#5 தக்காளி

#5 தக்காளி

அதிக வியர்வையை குறைக்கும் பண்பு தக்காளியில் இயல்பாகவே உள்ளது. இது கை,கால்களில் உள்ள துளைகளை இறுக்கி பின்பு வியர்வை வருவதை கட்டுப்படுத்தும். வியர்வை அதிகமாக வரும் இடங்களில் சிறிதளவு தக்காளியை வெட்டி அதனை தடவி வந்தால் விரைவில் நல்ல பலனை தரும். மேலும் இது உடலின் தட்பவெப்ப நிலையை சீராக வைக்க மிகவும் உதவுகிறது.

#6 தேங்காய் எண்ணெய்

#6 தேங்காய் எண்ணெய்

லாரிக் அமில தன்மை தேங்காய் எண்ணெய்யில் அதிகம் உள்ளதால் இது உடலுல் உள்ள பாக்டீரியால்களை கொள்ள வல்லது. மேலும் உடல் துர்நாற்றத்தை வர விடாமல் தடுக்கவும் செய்கிறது.சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை எடுத்து கொண்டு அதனை கை,கால்களில் தடவி விடவும். உடலை மென்மையாக வைக்கவும், அதிக வியர்வை வருவதை தடுக்கவும் இந்த தேங்காய் எண்ணெய் ஒரு அற்புதமான வீட்டு மருந்தாக கூறலாம்.

#7 கரி

#7 கரி

இந்த அடுப்பு கரி மற்றொரு தீர்வாகும். அடுப்பு கரி அதிக வியர்வை வருவதை உறிஞ்சி விடும் தன்மை கொண்டது. வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் அடுப்பு கரியை தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி குடிக்கும்போது வாந்தி வந்தால் இரவு உணவிற்கு பிறகு குடியுங்கள். இது நல்ல பலனை தரவல்லது. மேலும் குடல் சம்மந்தமான பாதிப்பு இருப்பவர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம்.

#8 கிரீன் டீ

#8 கிரீன் டீ

கிரீன் டீயில் இயற்கையாகவே அதிக ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளது. இது வியர்வை அதிகமாக வரும் இடத்தில் பாக்டீரியாக்களை வளரவிடாமல் தடுக்கும்.அத்துடன் வியர்வை வரும் துளைகளை மூட செய்யும். எனவே 3-4 கப் கிரீன் டீயை தினமும் குடித்து வந்தாலே இந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.அல்லது 1 கப் கிரீன் டீயில் சிறிது ஐஸ் கட்டியை போட்டி அதை கை, கால்களில் தடவி வந்தால் அதிக வியர்வைவை கட்டுப்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

home remedies for sweaty hands & foot

Sweaty...! Don't worry..' Here are the home remedies for sweaty hands & foot.
Story first published: Monday, July 16, 2018, 18:26 [IST]
Desktop Bottom Promotion