தொங்கும் மார்பகங்களை சிக்கென்று அழகாக வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

பெண்களுள் ஒரு வகையினர் மார்பகங்களே இல்லை என்று வருந்துகின்றனர், மற்றொரு வகையினரோ தங்களுக்குள்ள மார்பகங்களின் அளவைக் குறைக்க முயற்சிக்கின்றனர். இதற்கு பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களின் மார்பகங்கள் வயது அதிகரிக்க அதிகரிக்க தொங்க ஆரம்பித்து, அவர்களின் இளமைத் தோற்றத்தைப் பாதிக்கிறது.

தளர்ந்து தொங்கும் மார்பகங்களைப் பற்றிய சில தவறான கருத்துக்கள்!

இப்படி தொங்கும் மார்பகங்களைக் கொண்ட பெண்களால் தாங்கள் விரும்பும் எந்த ஒரு உடையையும் அணிய முடியாமல் வருத்தப்படுவதோடு, சில நேரங்களில் தன்னம்பிக்கையையும் இழக்கின்றனர்.

மார்பகத்தை பெரிதாக்க உதவும் உணவுகள்!!!

ஆகவே இதனைத் தவிர்க்க, தமிழ் போல்ட் ஸ்கை தொங்கும் மார்பகங்களை எப்படி சிக்கென்று வைத்துக் கொள்வது என்று சில வழிகளைக் கொடுத்துள்ளது.

பொருத்தமற்ற பிரா அணிவதன் மூலம் சந்திக்கும் பிரச்சனைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரியான உடல் எடை

சரியான உடல் எடை

பெண்கள் தங்களின் உடல் எடையை வேகமாக அதிகரித்தால் மற்றும் குறைத்தால், மார்பகங்கள் தொங்க ஆரம்பிக்கும். எப்படியெனில் எடையை வேகமாக அதிகரிக்கும் போது, மார்பக சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அழிக்கப்படும் மற்றும் எடையைக் குறைக்கும் போது மார்பகங்களின் அழகிற்கு அவசியமான கொழுப்புச் செல்கள் அழிக்கப்படும். எனவே எப்போது உடல் எடை அதிகரிக்கும் போதும், குறைக்கும் போது பொறுமையாக முயற்சி செய்யுங்கள்.

நீர்ச்சத்து

நீர்ச்சத்து

மனித உடல் பெரும்பாலும் நீர்ச்சத்து தான் நிறைந்துள்ளது. குறிப்பாக பெண்களின் உடலில் மார்பகங்கள் நீர்ச்சத்தால் ஆனது. உடலில் நீர்ச்சத்து குறைய ஆரம்பித்தால் மார்பக சருமம் தன் அழகை இழக்க ஆரம்பித்து, தொங்க ஆரம்பித்துவிடும். எனவே குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழையில் உள்ள உட்பொருட்கள் மார்பகங்களை இறுக்கமாக வைக்கும். மேலும் கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ ராடிக்கல்களால் மார்பக செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை மார்பகங்களில் தடவி 10 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், மார்பகங்கள் நன்கு அழகான வடிவில் இருக்கும்.

புஷ்-அப்

புஷ்-அப்

மார்பகங்களில் எந்த ஒரு தசைகளும் இல்லை. ஆனால் மார்பகங்களுக்கான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம், மார்பக தசைநார்கள் வலிமையடைந்து, மார்பக தோற்றத்தை அழகாக வெளிக்காட்டும். அதிலும் புஷ்-அப்பை பெண்கள் தினமும் செய்து வந்தால், மார்பகங்கள் தொங்குவதைத் தடுக்கலாம்.

மாஸ்க்

மாஸ்க்

இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை மார்பகங்களுக்குப் போட்டு வருவதன் மூலம், மார்பக சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மார்பங்கள் தொங்குவதைத் தடுக்கலாம். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் தயிருடன், 1 டேபிள் ஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து, மார்பகங்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஐஸ் மசாஜ்

ஐஸ் மசாஜ்

ஐஸ் கட்டிகளைக் கொண்டு மார்பகங்களை 1 நிமிடம் மசாஜ் செய்து வருவதன் மூலமும், அழகான மார்பகங்களைப் பெறலாம். ஆனால் ஒரு நிமிடத்திற்கு மேல் ஐஸ்கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டாம்.

வெஜிடேபிள் எண்ணெய்

வெஜிடேபிள் எண்ணெய்

பொதுவாக மார்பகங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம், அதன் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, இரத்த ஓட்டம் மேம்பட்டு, மார்பகங்களில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் சரிசெய்யப்பட்டு, அழகான மார்பகங்களைப் பெறலாம். அதிலும் வெஜிடேபிள் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

தவறான பிரா

தவறான பிரா

முக்கியமாக பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் தங்களுக்கு பொருத்தமான பிராவை அணிய வேண்டும். தவறான பிராவை அணிவதன் மூலம், மார்பகங்களின் அழகு தான் பாதிக்கப்படும். எனவே அணியும் பிராவில் அதிக கவனம் செலுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies Against Sagging Breasts

Try these easy home remedies that can be used to treat sagging breasts instead of the artificial lotions and creams. Read on to know more.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter