Latest Updates
-
1 வருடம் கழித்து உச்ச ராசிக்கு செல்லும் சூரியன்: ஏப்ரல் மாதத்தில் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
கோதுமை ரவா ஊத்தாப்பமும்.. தேங்காய் சட்னியும்.. - டக்குன்னு எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம்...! -
செவ்வாய்-புதன் மீன ராசியில் இணைவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மைசூர் தேங்காய் சட்னி ரெசிபி.. தேங்காய் சட்னிய இந்த மாதிரி செஞ்சு பாருங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் வாக்காளர்கள் மிகவும் குறைவாக உள்ள தொகுதி எது தெரியுமா? -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் நேரத்துல இந்த இனிப்பை செய்யுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
April 2026 Calendar: ஏப்ரல் மாதத்தின் முக்கிய நாட்கள், பண்டிகைகள் மற்றும் வங்கி விடுமுறை நாட்கள்...! -
கல்யாண பந்தி முட்டைக்கோஸ் உருளை மசாலா ரெசிபி... ஒருதடவை இப்படி செய்யுங்க... சூப்பர் சைடிஷா இருக்கும்...! -
ஏப்ரல் மாதத்தில் மகாராஜா போல வாழப்போற 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் 6 ஆரோக்கிய பிரச்சனைகள்!!!
மனித உடலை விட சிக்கலான அமைப்பை வேறெங்கும் காண முடியாது. அனைத்து விஷயங்களையுமே கரைத்துக் குடித்த உடற்கூறு வல்லுநராக இருந்தாலும் கூட, மனித உடலினுள் வரும் சில பிரச்சனைகளுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை என்பது தான் நிஜம். அதிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் மற்றும் வேறு வேறு வகையானவை எனலாம். அவர்களுடைய ஹார்மோன் சுற்று மாற்றங்கள் மற்றும் பல்வேறு வகையான உடற்கூறு மற்றும் உளவியல் மாற்றங்களுடன், பாலியல் ரீதியான பிரச்சனைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆணுறுப்பு விறைக்கவில்லையா? அப்போ காரணம் இதுவா இருக்குமோ...?
சில நேரங்களில் இவை மிகவும் தனிப்பட்ட பிரச்சனைகளாகவும் மற்றும் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவாறும், உதவி கேட்க முடியாதவாறும் இருக்கின்றன. இங்கு அப்படி பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் 6 ஆரோக்கிய பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போமா!!!

மார்பக காம்புகளைச் சுற்றி முடிகள்
இது வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும் விஷயமாதலால், பெண்கள் இதை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள். உடல் ரீதியான உறவின் போது இது மிகவும் சங்கடப்பட வைக்கும் விஷயமாக பெண்களுக்கு இருக்கும். எனினும், இது பெண்கள் பருவமடையும் காலத்திலும், மாதவிடாய் நிற்கும் காலத்திலும் அல்லது கர்ப்ப காலத்திலும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் நடக்கக் கூடிய சாதாரண செயல்பாடு தான். சில நேரங்களில், இது பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம் (Polycystic Ovarian Syndrome-PCOS) என்ற நோயின் நிலையை வெளிப்படுத்துவதாகவோ அல்லது கர்ப்பப் பையில் உள்ள கட்டிகளை வெளிப்படுத்துவதாகவோ கூட இருக்கலாம். எனவே, இந்நேரங்களில் மருத்துப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதுப்போன்ற சீரியஸான விஷயங்கள் எதுவும் பரிசோதனையில் வெளிவராமல் இருந்தால், முடிகளை வெட்டவோ அல்லது பிடுங்கவோ செய்யலாம். மார்பக காம்புகள் இருக்கும் இடம் மிகவும் உணர்வு மிகுந்த இடமாக இருப்பதால், அங்கு வாக்ஸிங், ப்ளீச் அல்லது ஷேவ் செய்வதைத் தவிர்க்கவும். மாறாக, உங்களுடைய மருத்துவரைக் கலந்தாலோசித்து இந்த பிரச்சனையை சரி செய்யுங்கள்.

அதிகமாக வெள்ளைப்படுதல்
இந்த விஷயத்தைப் பொறுத்த வரையில், மிகவும் சாதாரணமாக வரக்கூடிய பிரச்சனையா அல்லது உண்மையிலேயே கவனிக்க வேண்டிய பிரச்சனையா என்பதைப் பெரும்பாலான பெண்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இவ்வாறு ஏற்படக் கூடிய பிரச்சனைகளுக்கு வேறு பல அர்த்தங்கள் இருக்கலாம் அல்லது பிற ஆரோக்கியப் பிரச்சனைகளை வெளியே காட்டுவதாக இருக்கலாம். முறையான சுகாதாரத்தைப் பின்பற்றி வந்தாலும் கூட, கருத்தரிக்கக் கூடிய நிலையில் இருக்கும் பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள். ஒருவிதமான துர்நாற்றத்துடன் அதிகப்படியான வெள்ளைப்படுதல் பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறுவதற்கு பூஞ்சைகளால் உருவாக்கப்பட்ட வஜினைட்டிஸ் அல்லது பெண்ணுறுப்பில் தொற்று ஏற்பட்டிருத்தல் ஆகியவை காரணமாக இருக்கலாம். இதன் காரணமாக அரிப்பும், கெட்டியான வெள்ளைப்படுதலும் ஏற்படும். பாக்டீரியா தொற்று காரணமாக இருந்தால் வெள்ளைப்படும் திரவம் மெலிதானதாகவும், பச்சை நிறத்திலும் இருப்பதுடன், துர்நாற்றமடிக்கவும் செய்யும். முறையான கவனிப்பு இல்லாமல் போனால் இந்த பிரச்சனை உங்களை UTI என்ற பிரச்சனைக்குள் தள்ளிவிடும். ஜாக்கிரதை!

மாதவிடாயின் போது மிகவும் அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படுதல்
அதிகமான இரத்தப்போக்கு அல்லது நீண்ட நாட்களுக்குப் பின்னர் மாதவிடாய் வருவதற்கு ஹைபர்மெனோர்ரியா என்று மருத்துவ ரீதியாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றானது. பொதுவாகவே நான்கேன்சரௌஸ் கட்டிகளால் ஏற்படக் கூடியதாகும். அதாவது கர்ப்பப்பை சுவர்களின் மீதாக வளரக் கூடிய பிப்ராய்டு என்ற கட்டிகள் தான் இந்த புற்றுநோயல்லாத கட்டிகளாகும். ஹார்மோன் பிரச்சனைகள், என்டோமெட்ரியோசிஸ் மற்றும் வேறு சில இரத்தம் உறையாத பிரச்சனைகளாலும் கூட அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படலாம்.

முகத்தில் முடி வளர்தல்
ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய வாழ்வின் ஏதாவதொரு நேரத்தில் தன்னுடைய உதட்டிற்கு மேலாகவோ அல்லது தாடையிலிருந்தோ முடிகளை அப்புறப்படுத்தி இருப்பார்கள். ஆனால், அதிகப்படியான ஹார்மோன் மாற்றங்கள் அல்லது ஹார்மோன் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த பிரச்சனைகள் அதிகமான மன உளைச்சலைத் தந்திருக்கும். இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கான சிகிச்சையைத் தேடுவதொன்றும் மிகவும் சங்கோஜமானதாக இருப்பதில்லை. மேலும், சில லேசர் சிகிச்சைகளைக் கொண்டு எந்தவித தழும்புகளும் இல்லாமல் முகத்திலுள்ள முடிகளை நீக்கிட முடியும்.

சிறுநீர்ப்பை கட்டுப்பாடு
உலகெங்கிலும் உள்ள பெண்கள் பலரும் இந்த சிறுநீர்பை கட்டுப்பாட்டுப் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதன் மூலம் சொல்ல முடியாத மனஅழுத்தம் அவர்களுக்கு உள்ளது என்பது தான் உண்மை. இந்தியாவைப் பொறுத்த வரையில், இருமல், தும்மல் அல்லது கடுமையான வேலையின் போதும் தான் 73% பெண்களுக்கு இந்தத் தொந்தரவு வருகிறது. இடுப்பை வளைத்து செய்யும் உடற்பயிற்சி (Pelvic Floor Exercises) போன்ற சிலவற்றால் இந்த சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை சரிசெய்ய முடியும். சிற்சில மாற்றங்களை நம்முடைய தினசரி வாழ்க்கையில் மாற்றிக் கொள்வதன் மூலம் இந்த தொந்தரவிலிருந்து எளிதில் விடுபட முடியும். ஆனால், இது உங்களுக்கு மிகவும் பிரச்சனையைத் தருவதாக நினைத்தால், தயங்காமல் மருத்துவரின் உதவியை நாடிச் செல்லவும்.

பெண்ணுறுப்பில் மாற்றங்கள்
உங்களுடைய வயது ஏற ஏற உடலின் பிற பாகங்கள் மாற்றமடைவதைப் போலவே பெண்ணுறுப்பும் மாற்றம் பெறும் என்பதால், இந்த மாற்றம் இயற்கையானது தான். ஆனால், சில விஷயங்களைப் பொறுத்த வரையில் 2 ஆண்டுகள் பாலுறவிற்குள்ளாகவே பெண்ணுறுப்பு மிகவும் தளர்ந்து போய் விடலாம். இவ்வாறு தளர்ந்து விடுவதன் காரணமாக பாலுணர்வில் நாட்டம் குறைதல், பெண்ணுறுப்பு வறட்சியாக இருத்தல் மற்றும் பாலுறவின் போது வலி ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். ஆனால், இந்த தொந்தரவுகளை சரிசெய்ய முடியும் என்பது தான் மகிழ்ச்சியான செய்தி. கேகல் பயிற்சிகளின் மூலம் இடுப்பு தசைப்பகுதிகளை உறுதியாக்குதல், சில மருந்துகளை பயன்படுத்துதல் மற்றும் பெண்ணுறுப்பு இறுக்கத்தை அதிகரிக்கும் கிரீம்கள்/ஜெல்களைக் கொண்டு இந்த தொந்தரவை சரி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications











