Just In
- 1 hr ago
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- 1 hr ago
உங்க உடலில் இந்த பாகங்களில் பிரச்சினை இருந்தால் உங்க இதயம் பலவீனமா இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- 7 hrs ago
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- 15 hrs ago
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
Don't Miss
- News
என்ன கொடுமை இது? அதிக மது விற்பனை செய்தவருக்கு பாராட்டு! தமிழ்நாடு எங்கே போகிறது? -அன்புமணி கேள்வி
- Movies
அப்படியெல்லாம் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணலனா ஹீரோயினே ஆக முடியாது.. ஷாக் கொடுத்த தேவி பிரியா!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Sports
ஹர்திக் பாண்ட்யாவின் பேராசை? கேப்டன்சியை தவறாக பயன்படுத்தியதால் இந்தியா தோல்வியா.. குவியும் புகார்!
- Technology
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
- Automobiles
அனல் பறக்கும் ஏலம்... மஹிந்திராவின் 16 லட்ச ரூபா காரை கோடிகளை கொட்டி வாங்க முந்தியடிக்கும் கோடீஸ்வரர்கள்!
- Finance
கௌதம் அதானியை இனி காப்பாற்ற முடியாதா..? 10 பில்லியன் டாலர் மாயம்.. 7வது இடம்..!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
பெண்களே! உங்க கணவன்கிட்ட மட்டும் இந்த அறிகுறிகள் இருந்தா... உங்க வாழ்க்கையே நரகமாகிடுமாம்..!
உறவில் மகிழ்ச்சியாக இருக்க தம்பதிகள் இருவரும் பங்களிப்பு செய்ய வேண்டும். ஆண், பெண் இருவருக்கும் பல்வேறு கடமைகள் மற்றும் பொறுப்புகள் திருமண உறவில் இருக்கின்றன. இருவரும் இணைந்து அவற்றை பார்க்கும்போது, உறவு சுமுகமாக செல்லும். ஆனால், உறவில் ஒருவர் குழந்தை தனமாகவும் மற்றொருவர் மட்டுமே பங்களிப்பு செய்யக்கூடியதாக இருக்கும்போது, அது மிகவும் சிக்கலானதாக மாறும். பெண்களே! நீங்கள் டேட்டிங் செய்யும் ஆண், சரியானவராக இருக்க வேண்டும். நீங்கள் முதிர்ச்சியடையாத இன்னும் குழந்தைதனமாக இருக்கும் ஆணுடன் டேட்டிங் செய்வது போல் உணர்கிறாரா? இந்த உணர்வு அசாதாரணமானது அல்ல. சொல்லப்போனால், தன் துணையின் முன் குழந்தை போல் நடந்து கொள்ளும் ஆண்கள் அதிகம்.
அத்தகைய ஆண் குழந்தையாக ஒரு கணவனைப் பெறுவது இன்னும் மோசமானது. அத்தகைய கணவனைக் கையாள்வது நம்பமுடியாத அளவிற்கு கடினமாகவும் சிக்கலாகவும் இருக்கும். ஏனெனில் பொறுப்புகள் மற்றும் சுமை அனைத்தும் உங்கள் மீது விழுகிறது. எனவே, உங்கள் கணவர் இன்னும் குழந்தைதனமாக இருக்கிறாரா? இல்லையா? என்பதைக் கண்டறிய உதவும் சில வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பொறுப்பற்றவராக இருப்பது
உங்கள் கணவர் தனது காரியங்கள் மற்றும் செயல்களில் மிகவும் பொறுப்பற்றவராக இருந்தால், அவர் இன்னும் குழந்தை தனமாகவே உள்ளார். ஒரு திருமண உறவில் அவருடைய கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ன என்பதை அவர் கவனிக்கவில்லை என்றால், பிரச்சினைகள் ஏற்படலாம். இது உங்களுக்கு கடினமான நேரத்தை கொடுக்கும். உறவில் எல்லா விஷயங்களையும் நீங்களே சமாளிப்பது உங்களுக்கு சுமையாக இருக்கும்.

எப்போதும் சாக்குபோக்கு கூறுவது
ஒரு குழந்தையைப் போல நடந்துகொள்ளும் ஒரு மனிதன் எப்போதும் சாக்குப்போக்கு கூறிக்கொண்டே இருப்பான். அவர் தனது செயல்களை ஒரு நொண்டிச் சாக்குப்போக்குடன் நியாயப்படுத்த முயற்சிப்பார் அல்லது ஏதாவது காரணத்தைக் கூறி உங்களை நம்ப வைக்க முயற்சிப்பார். பொருட்படுத்தாத காரணங்களைக் கூறி தங்கள் தவறுகளை மறைக்க முயற்சிப்பார்கள்.

தொடர்ந்து நிதி சிக்கல்கள் ஏற்படுவது
உங்கள் கணவர் எப்போதும் நிதிப் பிரச்சினைகளால் அவதிப்படுவது, அவர் இன்னும் குழந்தையாக இருக்கிறார் என்பதற்கான முக்கிய அறிகுறியாகும். ஒவ்வொரு நபரும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நிதி ரீதியாகப் பொறுப்பேற்கிறார். ஆனால் உங்கள் கணவரால் அவரது நிதி பிரச்சனையை கவனிக்க முடியவில்லை மற்றும் அவர் சம்பாதிப்பதை விட அதிகமாக செலவழித்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இது உங்களுக்கு நிதி ரீதியாக பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.

நம்பகத்தன்மையற்றவர்
உங்கள் கணவர் குழந்தை போல நடந்துகொள்ளும் போது, உங்கள் எந்த வேலைக்கும் அவரை நம்பி இருக்க முடியாது என்பதை நீங்கள் கவனிப்பீர்கள். அவரது நம்பகத்தன்மையின்மை ஒரு பெரிய பிரச்சனையாக நிற்கும். இது உங்கள் உறவில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாம். இதனால், உங்கள் தேர்வுகள் மற்றும் முடிவுகளை நீங்கள் கேள்விக்குட்படுத்துவீர்கள். ஏனென்றால் திருமணம் என்பது நம்பகத்தன்மை, ஆதரவு மற்றும் புரிதலைப் பற்றியது. அவை இல்லாதபோது, உங்களுக்கு இது ஒரு மோசமான வாழ்க்கையாக மாறும்.

விமர்சனத்தை கையாள முடியாது
ஒவ்வொரு முறையும் நீங்கள் குறை கூறும்போதோ அல்லது அவரது தவறுகளைச் சுட்டிக்காட்டும்போதோ உங்கள் கணவர் கோபத்தை வெளிப்படுத்தினால், அவர் முற்றிலும் குழந்தையாக உள்ளதாக அர்த்தம். ஒரு முதிர்ந்த மனிதனால் விமர்சனங்களை பொருத்தமாக கையாள முடியும். அதாவது முதிர்ச்சியடையாதவர்கள் எதையாவது செய்கிறார்கள். இவர்களால் உறவில், உங்களுக்கு பல்வேறு சிக்கல்கள் எழலாம்.

தகாத விஷயங்களை வெளிப்படுத்துகிறார்
உங்கள் கணவர் எப்போது பேச வேண்டும் என்பதில் எந்த அக்கறையும் இல்லாமல் இருந்தால், அவர் குழந்தை தனமாக இருப்பதாக அர்த்தம். ஒரு முதிர்ந்த மனிதன் அறையில் உள்ள சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பேசும் அளவுக்கு விவேகமானவர். உங்கள் கணவருக்கு எப்போது என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை என்றால், அவருக்கு அதைப் பற்றி கொஞ்சம் பள்ளிப்படிப்பு தேவை. ஏனெனில், அவர் இன்னும் குழந்தையாகவே இருக்கிறார்.