For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு பக்கம் என்ன வெறுக்குற மனைவி, மறுபக்கம் என்ன விரும்புற விதவை தாய்... - My Story #326

ஒரு பக்கம் என்ன வெறுக்குற மனைவி, மறுபக்கம் என்ன விரும்புற விதவை தாய்... - My Story #326

By Staff
|
Real Life Story: I Found a Love of My Life From a Widowed Mother.

எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் தான் ஆச்சு. வீட்டுல பார்த்து அரேஞ் பண்ண கல்யாணம்கிறதுனால என் வைப் பத்தி ஆரம்பத்துல புரிஞ்சுக்க, தெரிஞ்சுக்கவே நிறையே காலம் எடுத்துக்கிட்டேன். அப்படி இருந்தும் இதுநாள் வரைக்கும் என்னால அவங்கள முழுசா புரிஞ்சுக்க முடியலங்கிறது தான் கசப்பான உண்மை.

அவங்க எப்ப, எத, எப்படி பண்ணுவாங்கனு சொல்ல முடியாது... கணிக்கவும் முடியாது... ஒரு சமயம் பிடிக்கும்... அவங்களுக்கு பிடிக்குதேன்னு நெனச்சு நாம அத பண்ண ட்ரை பண்ணா... அடுத்த முறை அதுவே பிடிக்கலன்னு கோபப்படுவாங்க. இதுனால, எங்களுக்குள்ள ஒருத்தருக்கு ஒருத்தர் மூஞ்சிய திருப்பிக்கிட்டு இல்ல, தூக்கி வெச்சுக்கிட்டு இருந்த நாட்கள் தான் அதிகம்.

ஒருவேள நான் லவ் மேரேஜ் பண்ணியிருந்தா என் கல்யாண வாழ்க்கை இன்னும் கொஞ்சம் சந்தோசமா, இந்த அளவுக்கு மோசமா இல்லாத மாதிரி இருந்திருக்குமோன்னு அடிக்கடி மனசுக்குள்ள ஒரு எண்ணம் ஓடிக்கிட்டே இருந்துச்சு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வர்க்!

வர்க்!

என் அளவு எக்ஸ்பீரியன்ஸ் இருக்க, என் கூட வர்க் பண்றவங்க கூட கம்பேர் பண்ணா, நான் கொஞ்சம் அதிகமான கூடுதல் வேலை பண்றேன். எனக்கான பொறுப்புகள் ஆபீஸ்ல அதிகம்னே சொல்லலாம். இதனால சிலருக்கு என்ன பிடிக்கும், சிலருக்கு என்ன பிடிக்காது. ஆபீஸ் விஷயமா நான் நிறையா ஆன்சைட் போயிட்டு வர வேண்டிய சூழல் இருக்கும். அதே மாதிரி இந்தியாவுலேயே மத்த நகரங்கள்ல இருக்க பிராஞ்சுக்கும் நான் அடிக்கடி பிராஜக்ட் வேலையா போயிட்டு வருவேன்.

நளினிகா!

நளினிகா!

அப்படியான ஒரு பிஸ்னஸ் ட்ரிப்ல என் வாழ்க்கையில நுழைஞ்ச பொண்ணு தான் நளினிகா. நளினிகா ஒரு சிங்கிள் பேரண்ட். ரொம்ப மெச்யூரான பொண்ணு. வயசுல என்னைவிட சின்னவங்களா இருந்தாலும், அவங்களோட பர்சனல்லைப் & ஆபீஸ் லைப்ல நல்லா ஹேண்டில் பண்ண தெரிஞ்சவங்க. அவங்க லைப் ஸ்டைல் பார்க்க பார்க்க எனக்குள்ள... எனக்கு இப்படியான ஒரு பொண்ணு தான் வேணும்னு ஸ்கெட்ச் பண்ணி வெச்ச அந்த உருவம் எட்டிப் பார்த்தது.

கசப்பான அனுபவம்...

கசப்பான அனுபவம்...

எனக்கு இந்த ரிலேஷன்ஷிப்ல ஒருவிதமான தயக்கம் இருந்துச்சு. என்னோட மனப்பான்மையில இது தவறுனு சொல்றத விட, பெருங்குற்றம்ன்ற மாதிரியான கருத்து இருக்குறவன் நான். ஆனா, என்னோட கல்யாண வாழ்க்கையில நடந்த சில கசப்பான சம்பவங்கள்... இந்த தயக்கத்த நாள்ப்பட உடைக்க ஆரம்பிச்சது. எனக்கு நளினிகாவோட பேச, பழக நிறைய நேரம் ஸ்பென்ட் பண்ண ஓர் ஆர்வம் எட்டிப் பார்த்துச்சு.

50 - 50

50 - 50

எனக்கும் என் வைப்க்கும் நடுவுல இருக்க பெரிய பிரச்சனையே.... நான் அவங்கவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையும் வாழனும், நமக்கு பிடிச்ச வாழ்க்கையும் வாழனும். இந்த 50-50 பேலன்ஸ் ரொம்ப முக்கியம்னு நினைக்கிற ஆளு. அதாவது, ஹஸ்பன்ட் அன்ட் வைப் வாழ்க்கையும் முக்கியம். அவங்களுக்கான பர்சனல் விருப்ப, வெறுப்பு, ஃபிரெண்ட்ஸ், ரிலேஷன்ஷிப், வர்க் லைப்பும் முக்கியம்னு நினைக்கிற டைப் நான்.

கேள்வி!

கேள்வி!

என் வைப் அப்படி இல்ல... அவங்களுக்கு நான் வர்க் முடிஞ்சதும் உடனே வீட்டுக்கு வந்திடனும். சிலசமயம், நான் வர முடிய லேட்டாகிடுச்சுன்னா ஆபீஸ் இத்தன நேரம் என்ன பண்ணீங்கன்னு கேட்டுட்டு.. அதுக்கூட ஒரு அடிஷனல் கேள்வி கேட்பாங்க.. உங்க கூட யாரெல்லாம் இருந்தாங்க... அவங்க ஏன் அவ்வளோ நேரம் இருந்தாங்க, சும்மா இருந்தாங்களா... அவங்களும் வர்க் பண்ணாங்களான்னு பல கேள்விகள் வந்துக்கிட்டே இருக்கும். இதுக்கும் அவங்களும் கல்யாணத்துக்கு முன்னாடி ஆபீஸ்க்கு போயிட்டு இருந்தவங்க தான்.

சந்தேகம்?!

சந்தேகம்?!

இது அவங்களோட ஓவர் பொஸசிவ்னஸா இல்ல, சந்தேக குணமான்னு எனக்கு தெரியல. இதனாலயே, எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு இணக்கம் இல்லாம போச்சு. என் லைப்ல நான் அதிகமா காதலிச்சது என் வேலைய தான். எதுவுமே இல்லாம இருந்த எனக்கு, சொத்து, வீடு, இந்த கல்யாணம், மரியாதையை எல்லாத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது இந்த வேலை தான்.

ஏன்?

ஏன்?

உண்மைய சொல்லணும்னா... நான் பார்த்துட்டு இருக்க இந்த வேலைக்கான இண்டர்வியூ அட்டன்ட் பண்ண கூட என்கிட்ட காசு இல்ல. கடவுள் புண்ணியம்னு சொல்றத, இல்ல வேற ஒருத்தர் இழந்தத வெச்சு இந்த வாழ்க்கை எனக்கு கிடைச்சதானு எனக்கு சொல்ல தெரியல. ரோட்ல கிடைச்ச பர்ஸ்ல இருந்த பணத்த வெச்சுதா, இந்த வேலைக்கு அப்ளை பண்ணேன். இதெல்லாம் என் வைப்கிட்டயும் சொல்லி இருக்கேன். இந்த வாழ்க்கைய தவிர நான் பெருசா யாரையும், எதையும் நேசிச்சது இல்ல.

கணவரின் மரணம்!

கணவரின் மரணம்!

இந்த வேலைக்கு அப்பறம் எனக்கு அதிகமான ஈர்ப்பு ஏற்பட்டது நளினிகா மேல தான். நளினிகா ரொம்ப சின்ன வயசுல அவங்களோட கணவர இழந்தவங்க. அவங்க இப்ப வாழ்ந்துட்டு இருக்க வாழ்க்கை பக்காவா கோட் பண்ண ப்ரோக்ராம் மாதிரி வெச்சுக்கங்களே. எந்த எரரும் இல்லாம அவ்வளோ பர்பெக்டா இருக்காங்க. ஆனா, அவங்க வாழ்க்கையில ஏற்பட்டது ஒரே ஒரு இழப்பன்னாலும்... அது பேரிழப்பு.

காதல பத்தி பேசல...

காதல பத்தி பேசல...

இதுநாள் வரைக்கும் நான் நளினிகா கூட ஆபீஸ் சம்மந்தமா நிறையவே பேசி இருக்கேன். சில சமயம் நாங்க பர்சனலா கூட சந்திச்சிருக்கோம். ஆனா, எந்த ஒரு சந்தர்ப்பத்தலயும் நான், எனக்கு அவங்க மேல இருக்க ஆர்வம் இல்ல காதல பத்தி பேசினதே இல்ல.

ஒரு பக்கம் என்னால புரிஞ்சுக்க முடியாத, என்ன புரிஞ்சுக்க முடியாத ஒரு நபரோட கல்யாண வாழ்க்கை. இன்னொரு பக்கம், என் வர்க் லைஃப விரும்பி, இன்ஸ்பிரேஷனா எடுத்து பார்க்குற நளினிகா. நளினிகாக்கும் என்ன பிடிச்சிருக்குன்னு எனக்கு தெரியும்.

ஆனா, மரியாதை ரீதியான, சமூக ரீதியான காரணத்துக்காக தான் அவங்க அத வெளிப்படுத்த மறுக்குறாங்க. அதுமட்டுமில்லாம, அவங்க இன்னொரு பெரும் துயர வாழ்க்கை துணை ரீதியா எதிர்கொள்ள தயாரா இல்லைங்கிறத அவங்க கூட பேசினத வெச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.

விவாகரத்து!

விவாகரத்து!

இந்த வாழ்க்கை இப்படியே போச்சுன்னா நிச்சயமா என் கல்யாண வாழ்க்கை விவாகரத்துல தான் முடியும்ங்கிற எண்ணமும் எனக்கு இருக்கு. அதனால தான் என்னவோ என் மனைவிக்கு குழந்தை பெத்துக்க விருப்பம் இல்ல. அவங்களாவும் அதுல இன்ட்ரஸ்ட் காமிக்கல, நானா இன்ட்ரஸ்ட் காமிச்சாலும், கொஞ்ச நாள் போகட்டும், கொஞ்ச நாள் போகட்டும்னு தள்ளிப் போட்டுட்டே இருக்காங்க.

பிடிச்சிருக்கு!

பிடிச்சிருக்கு!

எனக்கு நளினிகா மட்டுமில்லாம அவங்க குழந்தையும் கூட பிடிச்சிருக்கு. நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து வாழ்ந்தா, நான் இதுநாள் வரைக்கும் பார்க்காத ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கைய நான் வாழ முடியும்னு நான் நினைக்கிறேன்.

என் வைப் என் கூட ஏன் கனக்ட்டாக மறுக்குறாங்கன்னு எனக்கு தெரியல... ஒருவேள, அவங்களுக்கு ஏதாவது பாஸ்ட் ரிலேஷன்ஷிப் இருக்கான்னும் எனக்கு எதுவும் தெரியாது, கேட்டும் அவங்க சொன்னதும் கிடையாது.

குழப்பம்!

குழப்பம்!

இப்ப, நான் இந்த மேரேஜ் லைப்ல இருந்து வெளிய வந்து, நளினிகாவா கல்யாணம் பண்ணிக்கிறது சரியான முடிவா? இல்ல கடந்த ரெண்டு வருஷம் போலவே, என் மனைவிய எப்படியாச்சும் என்னையும், என் வேலையையும் புரிஞ்சுக்க வைக்க முயற்சிப் பண்ணனுமா?ன்னு எனக்கு தெரியல... ரொம்பவே குழம்பி போயிருக்கேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: I Found a Love of My Life From a Widowed Mother.

Real Life Story: My Marriage was Arranged By My Parents. But, Now I Found a Love of My Life, Who is a Widowed Mother.
Desktop Bottom Promotion