For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியும்ல! My Story #204

காதல் என்ற பெயரில் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோமா? அல்லது வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்பதை இந்த பெண்ணின் கதை உணர்த்துகிறது.

By Staff
|

இது சரியா தவறா என்றெல்லாம் யோசிக்க நேரமில்லை, இதிலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும் தவறை செய்து விட்டு தற்போது தவிக்கிறேன்.

மதுரையிலிருந்து முப்பத்தியேழு கிலோமிட்டீர் தொலைவில் இருக்கிறது எங்களது கிராமம், பள்ளிப்படிப்பு முழுவதும் அங்கே தான் படித்தேன், அதன் பிறகு கல்லூரி செல்ல வசதி இல்லாததால் பூ மார்க்கெட்டில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். சில நேரங்களில் பூ விற்கு மதுரை தெருக்களில் செல்வதும் உண்டு.

பூ மார்க்கெட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த போது காய்கறி லோடு ஏற்றி வரும் மாரிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த காதல் வந்ததும் நம்மைச் சுற்றியும் இருப்பதை மறந்து விடுகிறோம், இந்த காதலால் எனக்கு கிடைத்ததை விட நான் இழந்தது தான் அதிகம். அன்பினால் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தாலும் இந்த பொருளாதாரம் மிகப்பெரிய இடத்தை நம் வாழ்க்கையில் வைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

மார்க்கெட்டில் காலை பதினோறு மணி வரை தான் மும்முரமாக வேலைகள் நடக்கும், அதன் பிறகு கணக்கு பார்ப்பது, மறுநாளுக்குரிய இருப்பை உறுதி செய்வது என வேலை சற்று நிதானமாக நடக்கும். ஏதேனும் திருவிழா, அல்லது விஷேச நாட்கள் என்றால் மதியம் வரையிலும் கூட்டமிருக்கும், அங்கே வேலையை முடித்து விட்டு பெண்கள் நான்கைந்து பேர் சேர்ந்து மாலை பூவிற்க கிளம்புவோம்.

அன்று மதியம் பன்னிரெண்டு மணியிருக்கும், மாரிக்கும் அவனது கடை ஓனருக்கும் மார்க்கெட்டில் பயங்கர சண்டை

#2

#2

பதறியடித்துக் கொண்டு என்னாச்சு ஏன் இப்டி அடிச்சுக்கிறீங்க என்று சொல்லி ஓடினேன்.கல்லாவில் வைத்திருந்த பணத்தை திருடிவிட்டதாக முதலாளி சொல்ல, மாரி இல்லை என்று வாதிட்டுக் கொண்டிருந்தான், சிறிது நேரத்தில் விவாதம் கைகலப்பாகி விட்டது.

மார்கெட் முழுவதும் கூடிவிட்டார்கள், எல்லாரும் விலக்கிவிட எல்லா பணத்தையும் இவ கிட்ட தான கொடுத்து வச்சிருக்க என்று முதலாளி கேட்க, என்ன நினைத்தானோ யார்ரா அவ அவகிட்ட ஏன் கொடுக்க.... நான் தான் எடுக்கவேயில்லயே என்றான்

#3

#3

சண்டை ஓய்ந்து அவரவர் வேலையை பார்க்க கிளம்பினார்கள். எனக்கு மாரி சொன்ன அந்த வார்த்தைகள் மட்டும் காதில் ஒழித்துக் கொண்டேயிருந்தது. யாரு அவ? ஆமால்ல நான் அவனுக்கு யாரு.... எத நம்பி அவன் பின்னாடி சுத்திட்டு இருக்கேன், நாளைக்கே நம்ம ஊர்காரன் யாராவது பாத்தா என்னாகும்.... அப்படியே பல கேள்விகள் எழத்துவங்கின.

இரவு எட்டு மணிக்கு பேருந்துக்காக காத்திருந்த போது மாரி வந்தான், என்னடி இன்னக்கி சொல்லாம கொல்லாம பஸ் ஏற வந்துட்ட? கட கிட்டயே நின்னுட்டு இருந்தேன் என்று அருகில் வந்தான்.

#4

#4

தொடாத என்னைய என்று தட்டிவிட.... அவனுக்கு சுருக்கென்று கோபம், என்னடி ஆசையா கொஞ்ச வந்தா மூஞ்சிய காட்ற என்னவாம் கோவம் என்றான். காலையில் அவன் சொன்ன வார்த்தையை சொன்னேன்..... அதோடு என்னை நீ உண்மையாக நேசிக்கவில்லை, ஏமாற்ற நினைக்கிறாய் அதனால் எல்லார் முன்னாலும் யார் அவ என்று என்னைய கேட்ட.... என்று வரிசையாக அடுக்கினேன்.

என்னைய பாத்தா உங்களுக்கெல்லாம் எப்டி தெரியாது, அவன் என்னடான்னா பணத்த திருடினேங்குறான், நீ என்னடான்னா ஏமாத்திட்டான்னு சொல்ற

#5

#5

அடுத்து வர்ற கோவில் திருவிழாவுல உனக்கும் எனக்கும் கல்யாணம் இது உன் மேல சத்தியம் டி.... என்று சொல்லிவிட்டு சென்று விட்டான். திருவிழாவும் வந்தது வீட்டிற்கு தெரியாமல் தாலி கட்டுவதாய் நினைத்திருந்தோம்.

என்னடா தாலி எல்லாம் ரெடியா எப்போ? எங்க நம்ம கல்யாணம் சீக்கிரம் சொல்லு என்று அவசரப்படுத்த அவன் யோசித்துபடி அங்க பொண்ணுங்க விளக்கு வைக்கிற இடத்துல நில்லு வரேன் என்று சொன்னான்.

#6

#6

அங்க நிற்கச் சொல்லிவிட்டு சென்றவன் தான் அதன் பிறகு அவனை சந்திக்கவேயில்லை, அவனை அதற்கு பிறகு பார்க்கவும் இல்லை மார்க்கெட்டுக்கும் அவன் வரவில்லை இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவன் திடீரென்று என்ப்படி மாயமாவான் என்ற அதிர்ச்சியில் அவன் நண்பர்களிடத்தில் எல்லாம் கேட்க ஒருவர் மதுரையில் கட்டிட வேலைக்குச் சென்றிருப்பதாக சொன்னார். இன்னொருவர் சென்னை சென்றுவிட்டான் என்றார்கள்.

அவனை எப்படியாவது தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லி மதுரைக்குச் சென்றேன், ஒரு நாளில் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை, எப்படியாவது அவனை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று சொல்லி மதுரையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் அப்பாவுடன் சென்று வேலை கேட்டேன்.

#7

#7

வேலை கிடைத்தது, அங்கே இங்கே இருந்ததை விட சற்று தாரளமான சம்பளம் கிடைத்தது, நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். ஜவளிக்கடையில் இருந்ததாலும், மாதச் சம்பளத்தில் தவணை முறையில் வாங்கலாம் என்பதாலும் விதவிதமான ஆடைகள் எனக்கு பரிச்சயமாயின.

பார்ப்பவர்கள் எல்லாரும் என்னை பணக்கார வீட்டு பெண்ணாக நினைத்து சற்று மரியாதையுடன் பேச ஆரம்பித்தார்கள் ஏனோ அந்த திடீர் மரியாதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

#8

#8

கடை ஓனரின் மகளுக்கு திருமணம் நடந்தது, எங்களுக்கு எல்லாம் புதுத்துணி எடுத்து விஷேசத்திற்கு அழைத்திருந்தார்கள். சென்ற இடத்தில் கடைசி வரை நானும் கடையில் வேலை பார்க்கும் சில பெண்களும் இருந்தோம். அங்கே அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தோம்.

வீட்டினர் எல்லாருக்கும் என் மேல் நல்ல மதிப்பு வந்து விட்டது.

#9

#9

சென்னையில அம்மா இருக்காங்க அவங்கள பாத்துக்க ஆள் இல்ல நீ வேணா அங்க போறியா? சம்பளம் நல்லா கொடுப்பாங்க, வீட்லயே தங்கிக்கலாம், மூணு வேல சாப்பாடும் கொடுத்துருவாங்க என்றார் ஓனர்.

நாம் இங்கே எதற்கு வந்திருக்கிறோம், வந்த வேலையை விட்டு விட்டு சென்னைக்கு செல்ல எப்படி சம்மதம் தெரிவிப்பது யோசித்தபடி நின்றேன். என்னமா யோசிக்கிற, நம்ம அண்ணன் வீடு தான் நீ பயப்பட எல்லாம் ஒண்ணும் இல்ல உங்க வீட்டுல வேணா நான் பேசட்டுமா என்றார்.

#10

#10

அவரிடம் எப்படி மாரியை தேடிக் கொண்டிருக்கிறேன் என்ற விஷயத்தை சொல்வது, என்று தெரியாமல் சரிங்க சார் என்று தலையாட்டினேன்.... வீட்டில் பேசி சம்மதிக்க வைத்து சென்னைக்கு அனுப்பினார்.

எனக்கு என்று தனியறை கொடுக்கப்பட்டது, வயதான பாட்டி இருந்தார் அவரை குளிப்பாட்டுவது, வாக்கிங் அழைத்துச் செல்வது, ஊட்டி விடுவது, உடை மாற்றிவிடுவது என வேலை, ஜவுளிக்கடையில் இருந்ததை விட இது எளிதான வேளையாகத்தான் இருந்தது.

#11

#11

அங்கே தான் எனக்கு அசோக் பழக்கமானான். பாட்டியின் பேரன், கல்லூரி முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறான். மாரி இல்லாத இடத்தை அவன் நிரப்பினான் என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் அவர் எங்கே நான் எங்கே.... இதெல்லாம் சரி வராது என்று சொல்லிக் கொண்டேன்.

என்னிடம் நிறைய பேச ஆரம்பித்தார். வீட்டினருக்கு தெரியாமல் எனக்காக போன் வாங்கி கொடுப்பதும் பணம் கொடுப்பதும் தொடர்ந்தது. கல்லூரி முடித்து சோசியல் சர்வீசாக இங்கே இப்படி பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி நம்ப வைத்தேன். பல சந்தர்ப்பங்களை பயன்படுத்தி வெளியில் சுற்ற ஆரம்பித்தோம்.

#12

#12

வீட்டில் யாருமில்லை ஐய்யாவும் அம்மாவும் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தார்கள் நானும் பாட்டியும் மட்டும் இருந்தோம், வெளியில் சென்றிருந்த அசோக் திடிரென்று வீட்டிற்குள் நுழைந்தான், நானிருந்த அறைக்குள் வந்தவன் என்னை அணைத்து பலவந்தமாக கட்டிலில் தள்ளினான்.

பாட்டி இருக்கிறார், அவர் வந்து விடுவார் எழுந்திரு என்று சொல்லி அவனை நகர்த்த முயற்சித்தேன், பாட்டியெல்லாம் வரமாட்டாங்க அவங்க தூங்கிட்டு இருக்காங்க என்று சொல்லிவிட்டு என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் உயிருக்கு உயிராய் காதலிப்பதாகவும் சொன்னான். மேற்கொண்டு பதில் பேச விடாமல் உதட்டோடு முத்தம் வைத்தான்.

மாரியை காதலிக்கிறேன், அவனைத் தேடி தான் நான் ஊரை விட்டே வந்தேன் என்று சொல்ல வாய் வரவில்லை. ஆனால் ஏதோ தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்வு மட்டும் உள்ளேயிருந்தது. இசைந்து கொடுத்தேன்...... இருவரும் தூங்கிவிட்டிருந்தோம் திடீரென்று கண்ணைக்கூசும் வெளிச்சம், கண்ணைத் திறந்தால் பாட்டி நின்று கொண்டிருக்கிறார். நானும் அவனும் அரைகுறை ஆடையுடன் கிடக்கிறோம், அசோக் என் மேல் படுத்திருக்கிறான்.

#13

#13

ஒரு கணம் உயிரே போய்விட்டது, அவனை தட்டியெழுப்பினேன், பதறியடித்துக் கொண்டு எழுந்தவனை பாட்டி அறை விட்டார், வீட்ட விட்டு நீ மொதோ வெளிய போ என்று துரத்தினார். இல்லப்பாட்டி.... மன்னிச்சிடுங்க அசோக் தான் என்று வாயெடுக்க எனக்கு ஒரு அறை விழுந்தது.

பாட்டி ஐயாவுக்கு போன் செய்ய சென்றார்,அசோக் பாட்டி காலில் விழுந்து வேணாம் பாட்டி அப்பாவுக்கு போன் பண்ணாத தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிடும் என்று கெஞ்சினான். அவள மொதோ வீட்ட விட்டு போகச் சொல்லு என்று கத்த அறையிலிருந்து எனது பையை எடுத்துக் கொண்டு மொதோ கிளம்பு மத்தத அப்பறம் பேசிக்கலாம் என்றான்....

எங்க போக சொல்ற அசோக்.... சென்னையில உங்க வீடத்தவிர இந்த தெருவுத் தவிர எனக்கு எதுவும் தெரியாது என்று அழுதேன்.

#14

#14

இரு பாட்டி இவள அனுப்பிட்டு வரேன் என்று சொல்லி ஒரு கையில் என்னுடைய பையையும் என்னையும் என்னையும் இழுத்துக் கொண்டு வெளியில் வந்தான். எங்கே செல்வது என்று தெரியாமல் ஆட்டோ ஏறி பீச்சுக்கு சென்றோம்.

அங்கே இருவருக்கும் சரியான வாக்குவாதம், அப்பாக்கு தெரிஞ்சா என்னைய கொன்னே போட்ருவாரு பாட்டிய எப்டி சமாளிக்க போறேன்னு தெரியல என்று தன்னைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டு வந்தான். ஏய் இங்க என்னடி பண்ற யாருடீ இவன் என்ற குரலைக் கேட்டு நிமிர்ந்தேன்.

பார்த்தால் மாரி நின்று கொண்டிருக்கிறான்.

#15

#15

மாரி எங்கடா போன உன்னையத் தேடி தான் ஊர் ஊரா அலஞ்சுட்டு இருக்கேன், மதுரையில கட்டிட வேலைக்கு போய்ட்ட.... சென்னைக்கு போய்ட்டுன்னு எல்லாம் சொன்னாங்க ஒரு வார்த்த சொல்ல மாட்டியா அன்னக்கி எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா?

ஏய்.... யாரு இவன், ச்சை சரியான கேஸு போல இந்த புடி ஆள விடுறா சாமி என்று கும்பிடு போட்டுவிட்டு கையிலிருந்த பையை என்னிடம் திணித்து விட்டு ஓடினான் அசோக். மாரியிடம் நடந்ததை எல்லாம் சொன்னேன் பாட்டியிடம் மாட்டிய விஷயத்தை தவிர.

நான் சென்ற பிறகு அசோக் என் அறையை எல்லாம் நோட்டம் விட்டிருக்கிறான், மதுரையில் இருந்த தன் சித்தப்பாவிடம் என்னைப் பற்றி விசாரித்திருக்கிறான். அவர் என்னைப் பற்றியும் என் வீட்டின் நிலையையும் எடுத்துச் சொல்ல அவனை நான் ஏமாற்றியிருக்கேன் என்பது தெரிந்திருக்கிறது.

#16

#16

சோசியல் சர்வீஸு.... காலேஜ் படிக்கிறேன்னு என்ன சீனப் போட்ட..... என்கிட்ட வாங்கின காச கொடு போன் வாங்கி கொடுத்தத திருப்பிக் கொடு என்று சொல்லி போன் செய்து டார்ச்சர் செய்ய ஆரம்பித்தான்.

ஒரு முறை மாரி போன் எடுக்க, இருவருக்கும் பயங்கர சண்டை வந்து விட்டது. வீட்டில் பணத்தை திருடிக் கொண்டு ஓடிவிட்டதாக போலீசில் புகார் அளித்து இருவரையும் உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறான். மாரியும் முடிந்தால் செய்து பாரு என்று சொல்லி போனை கட் செய்துவிட்டான். ஏமாற்றிவிட்டேன் அதோடு ஒன்றும் இல்லாத நாங்களே இப்படி வாய்ச்சவடால் பேசுகிறோம் என்ற ஆத்திரத்தில் எங்கள் ஊருக்குச் சென்று என் வீட்டிலும் மாரி விட்டிலும் மிரட்டி விட்டு வந்திருக்கிறான்.

பதறியடித்துக் கொண்டு எங்களுக்கு போன் செய்தார்கள்.

#17

#17

மாரிக்கு பயங்கர கோபம்.... ஒண்ணும் பண்ணாமயே இப்டி சுத்தி சுத்தி அடிக்கிறாங்க அவன ஒரு வழி பண்ணாம விட மாட்டேன் என்று கொக்கரித்தான். சரியான பணக்காரங்க சென்னையிலயே நாலு பங்களா இருக்கு பீரோ பூரா பணம் நகை தான் என்று சொல்ல.... மாரி ஒரு திட்டம் தீட்டினான்.

அதன் படி அன்று நடந்தது, காலை ஒன்பது மணிக்கு ஐயாவும் அம்மாவும் வெளியே சென்றுவிடுவார்கள். பாட்டி மட்டும் தான் இருப்பார், அசோக் இருக்கிறானா என்பது சந்தேகம் தான் ஆனால் இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. அவனை முடித்துவிடலாம் என்று திட்டம்.

#18

#18

சரியாக 9.30க்கு வீட்டின் பின் வாசல் வழியாக மொட்டை மாடிக்கு வந்தடைந்தோம். முன் வாசலில் செருப்பை கவனித்தேன். எதுவுமில்லை, பாட்டியின் செருப்பு எப்போதும் வெளியில் இருக்காது. அசோக் இருக்கிறானா இல்லையா என்று பார்க்க சற்று இறங்கி வண்டி நிறுத்துமிடத்தை பார்த்தேன், அவனது பைக் இல்லை.

வரட்டும் என்று காத்திருந்தோம், உதவிக்கு என்று மாரி அழைத்து வந்திருந்த இரண்டு நபர்களும் என்னப்பா வீட்ல ஒரேயொரு கிழவி தான் இருக்குன்னு சொல்ற வந்தவரைக்கும் பொருள எடுக்க வேண்டியது தான என்றனர். முதலில் மாரி சம்மதிக்கவில்லை, அவர்கள் இருவரும் வர்ற்புறுத்தவே முதலில் மாரி கேஸ் ஸ்டவ் சரி பார்க்க வந்திருப்பதாக சொல்லி கதவை தட்டினான் பாட்டி கதவைத் திறந்தார்.

என்னை அடையாளம் தெரியும் என்பதால் நான் மேலேயே நின்று கொண்டேன். மூவரும் உள்ளே சென்றுவிட்டார்கள். பாட்டியின் சத்தமேயில்லை, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒன்றும் தெரியவில்லை சரியாக இருபது நிமிடங்களில் இரண்டு மூட்டையோடு வெளியே வந்தார்கள்.

அவர்கள் இருவரும் கோயம்புத்தூருக்கும், நாங்கள் இருவரும் கும்பகோணத்திற்கும் சென்று தலைமறைவானோம். மறுநாள் செய்திகளில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்து தப்பி ஓட்டம் என்று செய்தி வந்திருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Who Cheat Whom In A Relationship

Who Cheat Whom In A Relationship
Story first published: Wednesday, March 14, 2018, 15:58 [IST]
Desktop Bottom Promotion