உங்க மனைவிகிட்ட இந்த ஆறு வார்த்தைய தினமும் சொல்லறீங்களா?

Written By: Lakshmi
Subscribe to Boldsky

மனதில் எந்த அளவுக்கு காதல் இருந்தாலும், அதை செயலிலும் சொல்லிலும் வெளிப்படுத்தும் போது தான் அது முழுமையடைகிறது. உங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதினால் நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் எத்தனை பிஸியான வாழ்க்கை வாழ்ந்தாலும் மனைவியிடம் இந்த சில வார்த்தைகளை கூட பேசமால் இருக்கலாமா? உங்கள் மனைவியிடம் தினமும் பேச வேண்டிய ஆறு வார்த்தைகள் இதோ உங்களுக்காக...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஐ லவ் யூ

1. ஐ லவ் யூ

காதலிக்க ஆரம்பித்த சில நாட்கள் நொடிக்கு நொடி ஐ லவ் யூ சொல்லி இருப்பீர்கள். ஆனால் இப்போதும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறீர்களா? உங்கள் மனதில் காதல் இருக்கலாம். அதே சமயம் அதை வெளிப்படுத்த வேண்டியதும் அவசியம்.

2. ஏன் ஐ லவ் யூ?

2. ஏன் ஐ லவ் யூ?

ஐ லவ் யூ தானே சொல்ல வேண்டும் சொல்லிட்டா போச்சுனு தினமும் ஒரு காபி வேணும்னு சொல்லற மாதிரி ஐ லவ் யூ சொல்லாதீர்கள். நீங்கள் சொல்லும் ஐ லவ் யூ வை உணர்ந்து சொல்லுங்கள். எதற்காக அவரை பிடிக்கும் என்பதையும் சொல்லுங்கள்.

3. தேங்க் யூ

3. தேங்க் யூ

உங்கள் துணை உங்களுக்காக தினமும் பல வேலைகளை செய்து கொடுப்பார். அது அவரது கடமை என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். அவர்க்கு சின்னதா ஒரு தேங்ஸ் சொல்லுங்க. அவர் சந்தோஷத்தில் களைப்பு தெரியாமல் வேலை செய்ய முடியும்.

4. நான் ஏதாவது உதவி செய்யனுமா?

4. நான் ஏதாவது உதவி செய்யனுமா?

இந்த கேள்வியை பெரும்பாலான கணவர்கள் கேட்பதே இல்லையாம். ஆபிஸ் வேலையை பாக்கவே நேரம் இல்லை. இனி வீட்டு வேலைகளை வேற செய்யனுமா? என்று நினைத்துக்கொள்கிறார்கள். உங்கள் மனைவிக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா என்று கேட்டு உதவுங்கள்.

5. ஏய் நீ ரொம்ப அழகா இருக்க!

5. ஏய் நீ ரொம்ப அழகா இருக்க!

புகழ்ச்சி பிடிக்காது என சொன்னாலும், வெளித்தோற்றத்தை புகழ்ந்தால் அனைவருக்கும் பிடிக்க தான் செய்யும். எனவே நீங்கள் உங்கள் துணையின் அழகை வர்ணித்து கவிதை எழுதாவிட்டாலும், குறைந்தது அழகா இருக்கனு மட்டுமாவது சொல்லலாம்.

6. ஊக்கப்படுத்தும் வார்த்தை

6. ஊக்கப்படுத்தும் வார்த்தை

உங்கள் துணையிடம் ஏராளமான குறைகள் இருக்கலாம். குறைந்தது ஒரு நிறை கூடாவா இருக்காது அதை பற்றி அவரிடம் பேசுங்கள். அது அவருக்கு ஊக்கமளிக்கும். புத்துணர்ச்சியை கொடுக்கும். அவரை குஷிபடுத்தும். அது தானே உங்கள் தேவை...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things You Should Tell Your Wife Everyday

Things You Should Tell Your Wife Everyday
Story first published: Friday, June 23, 2017, 16:39 [IST]