For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களின் மூட் ஸ்விங்ஸ் பற்றி ஆண்கள் தெரிந்து / புரிந்துக் கொள்ள வேண்டியவை!

இங்கு பெண்களுக்கு மூட் ஸ்விங்ஸ் ஏற்படும் போது ஆண்கள் என்னென்னவெல்லாம் தெரிந்து / புரிந்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

|

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் ஓரிரு நாட்களுக்கு முன்னர், மாதவிடாய் முடிந்த 15 நாட்களில், பிரசவ காலத்தில், மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது மூட் ஸ்விங்ஸ் ஏற்படும். திருமணமான பல ஆண்களுக்கே பெண்களுக்கு ஏற்படும் இந்த மூட் ஸ்விங்ஸ் என்றால் என்னவென்று தெரியாது.

பெண்களுக்கு எதனால் மூட் ஸ்விங்ஸ் ஏற்படுகிறது, அந்த நாட்களில் ஆண்கள் அவர்களை பற்றி புரிந்துக் கொள்ள வேண்டியவை, தெரிந்துக் கொள்ள வேண்டியவை என்னென்ன என்று இங்கு காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹார்மோன்!

ஹார்மோன்!

மூட் ஸ்விங்ஸ் என்பது பெண்களின் உடலில் திடீரென அதிகரிக்கும் ஹார்மோன் காரணத்தால் உண்டாவது. இது கோளாறோ, பிரச்சனையோ அல்ல. பெண்களின் உடல் மெக்கானிசத்தின் இயல்பு தான் இது.

அழுவாங்க பொறுத்துக்குங்க!

அழுவாங்க பொறுத்துக்குங்க!

மூட் ஸ்விங்ஸ் ஏற்படும் போது சில பெண்கள் அழுவார்கள், தாங்கள் தனிமையில் விடப்பட்டதாக உணர்வார்கள். இதை வெளிப்படுத்தவும் செய்வார்கள். இது அவர்கள் வேண்டுமென்றே செய்வது அல்ல. எனவே, இதற்காக நீங்கள் அவர்களிடம் கோபித்துக் கொள்ள வேண்டாம்.

திட்டுறத வாங்கிக்கிங்க!

திட்டுறத வாங்கிக்கிங்க!

சில பெண்கள் மூட் ஸ்விங்ஸ் நாட்களை திட்டவும் செய்வார்கள். காரணமே இல்லாமல் அதிக கோபம் வரும். அதை ஆண்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

புலம்புறாங்கன்னு நினைக்க வேண்டாம்!

புலம்புறாங்கன்னு நினைக்க வேண்டாம்!

அவசியமே இல்லாம ஏன் இவ புலம்புறா என எண்ண வேண்டாம். மூட் ஸ்விங்ஸ் நாட்களில் சங்கடமாக இருப்பது, அலுப்பாக உணர்வது, புலம்புவது எல்லாம் பெண்களிடம் காணப்படும் விஷயங்கள். இதை தவறாக எண்ணுவதோ, அவர்கள் மீது எரிச்சல் கொள்வதோ வேண்டாம்.

பக்கத்துல உட்காந்து பேசுங்க!

பக்கத்துல உட்காந்து பேசுங்க!

இந்த அறிகுறிகள் மூலம் உங்கள் மனைவி மூட் ஸ்விங்ஸ்-ல் இருக்கிறார் என நீங்கள் அறிந்தால், அவருடன் அதிக நேரம் செலவழிக்க மறக்க வேண்டாம். அன்பாக, அரவணைப்பாக பேசுங்கள்.

டீ, காபி போட்டுக் கொடுங்க!

டீ, காபி போட்டுக் கொடுங்க!

முடிந்தால் உங்கள் மனைவிக்கு கோபம் குறைய, கூலாக இருக்க டீ, காபி போட்டுக் கொடுங்கள். சமைக்கும் வேலையில் கூட நீங்கள் களம் இறங்கலாம். நன்றாக இல்லாவிட்டாலும் மொக்கையாக சமைக்க மாட்டீர்கள் என்றால்.

அட்ஜஸ்ட் பண்ணிக்கிங்க!

அட்ஜஸ்ட் பண்ணிக்கிங்க!

மூட் ஸ்விங்ஸ் போது முடியாத நிலையிலும் பெண்கள் உங்களுக்காக வேலை செய்கிறார் என்றால் பெருமிதம் கொள்ளுங்கள். அப்போது போய் நொட்டை பேச்சு பேசி அவர்களிடம் அதிகமாக வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம்.

பிடிக்காதத பண்ணாதிங்க!

பிடிக்காதத பண்ணாதிங்க!

தயவு செய்து மூட் ஸ்விங்ஸ் நாட்களின் போது உங்கள் துணைக்கு பிடிக்காத வேலைகளை, விஷயங்களை செய்ய வேண்டாம். இதன் முழுமையான தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டியது நீங்களாக தான் இருப்பீர்கள்.

ஒட்டுமொத்தமா வேலை வைக்காதீங்க!

ஒட்டுமொத்தமா வேலை வைக்காதீங்க!

தினமும் செய்ய வேண்டிய வேலைகள் என வீட்டில் சிலவன இருக்கும். அவற்றை பெண்கள் மூட் ஸ்விங்ஸ் நாட்களில் இருக்கும் போது நீங்களாக எடுத்து செய்ய வேண்டும். அந்த நாட்களில் வெறுமென வெட்டியாக இருந்து, அவர்கள் தலையில் ஒட்டுமொத்த வேலையை கட்ட வேண்டாம்.

ரெஸ்ட் கொடுங்க!

ரெஸ்ட் கொடுங்க!

ஒட்டு மொத்தத்தில் மூட் ஸ்விங்ஸ் நாட்களில் மனைவிக்கு அடக்க ஒடுக்கமான அன்பான, கனிவான கணவனாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Men to Learn and Understand about Women Mood Swings

Things Men to Learn and Understand about Women Mood Swings
Story first published: Thursday, February 2, 2017, 14:16 [IST]
Desktop Bottom Promotion